தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/வித்தியாசமான விடை!

வித்தியாசமான விடை!

வித்தியாசமான விடை!


PUBLISHED ON : ஜூலை 05, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 05, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர் மாவட்டம், அவினாசி, கருவலுார் அரசு உயர்நிலைப் பள்ளியில், 1979ல், 9ம் வகுப்பு படித்தேன்.

உடற்பயிற்சி தேர்வுக்கு, 20 மதிப்பெண்கள் உண்டு. அந்த தேர்வில், 'விளையாடும் போது, மாணவருக்கு அடிபட்டால் என்ன செய்வாய்...' என, ஒரு கேள்வி இருந்தது.

உடன் படித்த வேலுச்சாமி, 'ஒரு பாடை கட்டி, காயம்பட்டவனை படுக்க வைத்து, சொந்தக்காரர்களுக்கு சொல்லி அனுப்பி, சுடுகாட்டில் புதைப்பேன். மூன்று நாட்களுக்குப் பின், குழியில், பால் ஊற்றுவேன்...' என, விடை எழுதியிருந்தான்.

உடற்கல்வி ஆசிரியர் ராமசாமி, அவனை அழைத்து, வகுப்பில் அதை உரக்கப் படிக்கச் சொன்னார். அனைவரும் சிரித்தோம்.

என் வயது, 52; அரசு வழக்கறிஞராக பணியாற்றுகிறேன். அவனைப் பார்க்கும் போது, 'என்ன வேலுச்சாமி... சொந்தக்காரர்களுக்கு சொல்லி அனுப்பிட்டியா...' என, வேடிக்கையாக கேட்பேன்.

அவனும் சிரிப்பினுாடே, 'இன்னுமா அதை நினைவில் வைத்திருக்கிறாய்...' என்பான்!

அந்த நினைவு இன்னும் அழியவேயில்லை.

- த.இளங்கோவன், திருப்பூர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us