PUBLISHED ON : டிச 13, 2013

அ நிறம் | அளவு
தரையில் நடக்கும் மீன்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
ஆம். 'மட் ஸ்கிப்பர்' என்னும் மீன் தரையில் நடக்கும். இவை வெப்பமண்டலப் பகுதிகளின் கடற்கரையோரமுள்ள நீர் குட்டைகளிலும், சேறு, சகதி நிறைந்த இடங்களிலும் காணப் படுகின்றன.
இந்த மீனுக்கு வலிமையான துடுப்புகளும், மார்பு தசைகளும் உண்டு. இவற்றைப் பயன் படுத்தி மட் ஸ்கிப்பர் மீன்கள் தண்ணீரிலிருந்து தரைக்கு வருகின்றன. எப்படி கடற் சிங்கங் களால் தரையில் நடக்க முடிகிறதோ அதே போல் இவையும் நடக்கின்றன.
இந்த மீன் தரைக்கு நடந்து வரும்போது பருந்துகளுக்கு இரையாகி விடுவதும் உண்டு.
