PUBLISHED ON : ஜூன் 28, 2019

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை, சிலுக்குவார்பட்டி ஊராட்சி, புனித சூசையப்பர் நடுநிலைப் பள்ளியில், 2001ல், 7ம் வகுப்பு படித்தேன்.
அறிவியல் ஆசிரியை ஜுலா, மிகச் சிறப்பாக பாடம் நடத்துவார். 'நன்றாக புரிகிறதா...' என்று, பலமுறை கேட்பார். பொதுவான வாழ்க்கை நிகழ்ச்சிகளை, பாடங்களுக்கு எடுத்துக் காட்டாக கூறுவார். இது, அவரது தனிச் சிறப்பு.
ஒரு நாள், இயற்பியலில், ஆர்க்கிமிடிஸ் தத்துவ விதியை விளக்க, 'அறிவுள்ள காகம்' என்ற தலைப்பை, கரும்பலகையில் எழுதி, படம் வரைந்து விளக்கினார்.
'குடத்தின் அடிபாகத்தில் இருந்த தண்ணீரைக் குடிப்பதற்காக, கற்களை, குடத்திற்குள் போட போட, எடைக்கு சமமான தண்ணீர் உயர்ந்து, காகத்தின் தாகம் தீர்ந்தது' என, கூறினார்.
பின், 'திரவப்பரப்பில் மூழ்கும், ஒவ்வொரு திடப்பொருளின் எடைக்கு, சமமான திரவம் வெளியேற்றப்படும்...' என்ற, ஆர்க்கிமிடிஸ் தத்துவ விதியை விளக்கியது மனதில் பதிந்தது.
கதை வடிவில், அறிவியல் பாடம் நடத்தினால், படிக்கும் திறன் வளரும் என, புரிந்து கொண்டேன்.
- சே.தேவி, திண்டுக்கல்.
தொடர்புக்கு: 99522 65944
