தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/ஆசிரியையின் கண்டிப்பு!

ஆசிரியையின் கண்டிப்பு!

ஆசிரியையின் கண்டிப்பு!


PUBLISHED ON : ஜூன் 28, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 28, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருச்சி, பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 1983ல், 10ம் வகுப்பு படித்தபோது, நிகழ்ந்த சம்பவம்!

எங்கள் கணித ஆசிரியை பிரியா, மிகவும் கண்டிப்பானவர்; சரியாக கணக்கு போடாவிட்டால் அடித்து திருத்துவார். சூத்திரங்களை, திரும்ப திரும்ப எழுதிப் பழகச் சொல்வார்.

ஒருமுறை, வீட்டுப் பாடம் எழுதத் தவறிவிட்டேன். இதற்கு தண்டனையாக, அட்டையில், 'ஒழுங்கீனம்' என்று எழுதி, என் கழுத்தில் தொங்க விட்டார். வகுப்பாசிரியை கூட, 'பாவம்' என்று அனுதாபப்பட்டார்.

இந்த சம்பவம், என் மனதில் வைராக்கியத்தை உருவாக்கியது. 'நன்றாக படித்து, நல்ல மதிப்பெண் வாங்க வேண்டும்...' என்று சபதம் ஏற்று உழைத்தேன்!

அதற்கு பலன் கிடைத்தது. 10ம் வகுப்பில், கணிதத்தில், 90க்கு அதிகமாக மதிப்பெண் எடுத்தேன்! கணக்கில் மிகவும் பின்தங்கியிருந்த என்னை, முன்னேற்றிய அந்த ஆசிரியையை, நன்றியுடன் நினைவில் கொள்கிறேன்.

- தி.ஜெயா தங்கம், மதுரை.

தொடர்புக்கு: 98439 65735

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us