தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/பேரீச்சம்பழமாய் மாறிய தட்டு!

பேரீச்சம்பழமாய் மாறிய தட்டு!

பேரீச்சம்பழமாய் மாறிய தட்டு!


PUBLISHED ON : மே 04, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 04, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஏழாம் வகுப்பு படித்த போது நடந்த நிகழ்வு... பள்ளியில் தினமும் மதிய வேளையில், சத்துணவு போடுவர். அதை சாப்பிட்டு, எச்சில் தட்டை அருகே ஓடிய ஆற்றில் கழுவி அடுக்கி வைப்போம்!

ஒருநாள், விபரீத யோசனை ஒன்றை சொன்னான் ஒரு மாணவன். அதன்படி, சில தட்டுகளை ஆற்று நீர் ஓட்டத்தில் மிதக்க விட்டோம்; மறுகரையில் அவற்றை சேகரித்தவன், தட்டுகளை கொடுத்து, வியாபாரியிடம் பேரீச்சம் பழம் வாங்குவான். அதை அனைவரும் சாப்பிட்டு வந்தோம்.

சில நாட்களில், தட்டுகளின் எண்ணிக்கை குறைவதை, சத்துணவு அமைப்பாளர் கண்டுபிடித்து விட்டார். பள்ளி வளாகத்தை கடந்து, பேரீச்சம் பழ வியாபாரி, மதிய வேளைகளில் செல்வதையும் கவனித்துள்ளார். வியாபாரியிடம் விசாரித்து, தட்டுகள், பேரீச்சம் பழமாக மாறிய கதையை அறிந்தவர், எங்களிடம் கேட்டார். தவறை உணர்ந்து, மன்னிப்பு கேட்டோம்; மன்னித்து, அறிவுரை கூறி பிரச்னையை அத்துடன் விட்டார்.

இந்த சம்பவம் நடந்து, பல ஆண்டுகள் ஆகிவிட்டன. நான் பேரீச்சம் பழம் சாப்பிடும் போதெல்லாம், அந்த தட்டுகள் தான் நினைவுக்கு வரும்.

- மா.ஆரோக்கியதாஸ், தேனி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us