PUBLISHED ON : பிப் 12, 2022

அன்று மகளை போட்டோ எடுத்தார் அமெரிக்கரான எட்வின் ஹெர்பட் லேண்ட்.
படம் பிடித்து முடிந்ததும், 'என் போட்டோவை இப்போதே பார்க்க வேண்டும்...' என்றது அந்த குழந்தை.
'உடனே அதைப் பார்க்க இயலாது; எல்லாச் செயல் முறைகளையும் முடித்தால், நாளை தான், 'பிரின்ட்' போட முடியும்...' என்றார் எட்வின். மகள் விடுவதாக இல்லை.
'இப்போதே என் போட்டோவைப் பார்க்க விரும்புகிறேன். அதுபோல் ஒரு கேமராவை தயாரிக்க கூடாதா...' என்றாள் மகள்.
உடனே அவரால் பதில் கூற முடியவில்லை. ஆனால், சிந்திக்க வைத்தது அந்த கேள்வி.
அதன் விளைவாக, பல ஆண்டுகள், கடுமையாக உழைத்து, மகள் கோரிக்கையை நிறைவேற்றி விட்டார் அந்த தந்தை. அதுவரை வந்திருந்த கேமராக்களை பின்தள்ளி, எட்வின் உருவாக்கிய, 'போலோராய்டு இன்ஸ்டண்ட் கேமரா' படம் பிடித்த, 60 நொடிகளில் போட்டோவைத் தந்தது.
புதிய கேமராவின் வரலாற்றை எழுதியது ஒரு குழந்தையின் கேள்வி!
