தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/மறுபடியும் மறுபடியும் வளரும் பாறை!

மறுபடியும் மறுபடியும் வளரும் பாறை!

மறுபடியும் மறுபடியும் வளரும் பாறை!


PUBLISHED ON : மார் 07, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 07, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பூமி பாறைகளை மறுசுழற்சி செய்கிறது. பாறை எப்படி உருவாகிறது என்றாலும் மறுசுழற்சி நிகழும். மாபெரும் சக்திகளான காற்றும், தண்ணீரும் பாறைகளை அரித்து மண்ணாய் மணலாய் எப்படி உருமாற்றினாலும் பாறைகள் உருவாகின்றன. மறுசுழற்சி நிகழ்கிறது.

நதிகள் மண்ணை, மணலாய் கடலில் குவிக்க அது காலப்போக்கில் வண்டல் பாறையாகிறது. மெதுவான, பூமியின் அடுக்குகளின் அசைவும், பாறைகளை மறுசுழற்சிக்கு தள்ளுகின்றன. எரிமலையால் உருவான பாறையும் மற்றும் கடலடி வண்டலால் உருவான பாறையும் உடைந்து, கண்டங் களின் நிலப்பகுதிக்கு அடர்த்தி சேர்க்கும் அல்லது அந்த உடைந்த பாறைகளின் துகள்கள் கண்டங்களின் தட்டுகளின் விளிம்பின் வழியே கீழே இழுத்து செல்லப்படும். அங்கே உஷ்ணமும், அழுத்தமும் உருமாற்றம் சார்ந்த புதிய பாறைகளை உருவாக்கும். புவி சார் மாற்றங்களால் இந்த உருமாற்றம் சார்ந்த பாறைகள் அடி ஆழத்திலிருந்து பூமியின் மேற்பரப்பிற்கு கொண்டு வரப்படுகின்றன. அங்கே அவை மறுபடியும் அரிக்கப்படும். இந்த ஆக்கம் அழித்தல் சுழற்சி முறையில் மில்லியன் கணக்கான ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது.

உருவாக்கம் - உருவழிப்பு சுழற்சி!

எரிமலை பாறைகள், எரிமலை குழம்பின் குளிர்வாக்கத்தால் உருவாகிறது. அரிப்பால், வண்டல்கள் கடலடியை அடைந்து வண்டல் பாறையாகிறது. அது காலப்போக்கில் பூமிக்கடியில் உஷ்ணம் மற்றும் அழுத்தத்தால் உருமாற்றம் சார்ந்த உருமாற்ற பாறையாகிறது. பிறகு பூமி அடுக்குகளின் அசைவால் இரண்டு வகை பாறைகளும் கீழ் நோக்கி தள்ளப்பட்டு அவை உருகுகின்றன. அவை எரிமலையால் மீண்டும் பாறைகளாக்கப்படுகிறது. இப்படி சுழற்சி நடந்தபடி இருக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us