தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!


PUBLISHED ON : மார் 07, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 07, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!

அங்க போனா அம்புடுத்தான்!

ஒரு இடத்திற்கு நாம் போனாலே நமது மதி கெட்டுப் போகிறது என்றால் நம்ப முடிகிறதா? ஆனால், உண்மையில் அப்படியொரு இடம் இருக்கிறது. அந்த இடத்தின் பெயர் மதிகெட்டான் சோலை. இந்த இடத்தை 'கிறுக்குத்தோட்டம்' என்று அந்த பகுதியில் வாழும் மக்கள் செல்லமாக அழைக்கின்றனர்

தேனியில் இருந்து மூணாறு செல்லும் பாதையில் இந்த இடம் இருக்கிறது. இது ஒரு காட்டுப் பகுதி. வனாந்தரம். இந்த காட்டுக் குள் நுழைந்தால் கிறக்கம் ஏற்பட்டு விடும் என்பதால் அங்கு யாருமே செல்வது கிடையாது. ஆனால், இந்த சங்கதி எல்லாம் தெரியாமல் தப்பித்தவறி காட்டுக்குள் நுழைந்தவர்கள் மதி கெட்டு, வந்த வழி தெரியாமல், சாப்பாடு, தண்ணீர் இல்லாமல் அலைந்து திரிகின்றனர். வெளியே வந்தாலும் கிறுகிறுப்பு தீராது.

இந்த மதிகெட்டான் சோலையில் ஒருவித மான பூ நாகப் பூக்கள் இருப்பதாக சொல்கின்றனர். அந்த பூக்கள் பூத்து அதன் பின்னர் வாடி கீழே உதிர்ந்து விடும். அப்படி விழும் மலர்கள் மண்ணோடு மண்ணாக மக்கிப் போய் விடும். அப்போது ஒருவித வாசம் பரவும். அந்த வாசம் வருடம் முழுவதும் வீசிக் கொண்டே இருக்கும். இந்த வாசனையை கொஞ்ச நேரம் முகர்ந்தாலே போதை போன்ற மயக்கம் ஏற்பட்டு விடும். இந்த மயக்கம் மனிதர்களை தூக்கிப் போட்டு பந்தாடும். அப்புறம் எங்கே இருக்கிறோம்? என்ன பண்ணப் போகிறோம்? என்று தீர்மானிக்க முடியாது. இப்படி மாட்டிக் கொண்டு முழிப்பவர்களை கண்டுபிடித்து அழைத்து வருவதற் காகவே வனத்துறையினர் ஆங்காங்கே காட்டுக்குள் கேமராவை வைத்திருக்கின்றனர். மதிகெட்டு அலைபவர் களை காப்பாற்று வதற்காக வந்த மீட்புக் குழுவும் மயக்கத்தில் மதிகெட்டு திரியும் சம்பவங்களும் இங்கே அடிக்கடி நடப்பதுண்டு.

இத்தனைக்கும் காரணம் பூநாகப் பூ என்று கூறப்பட்டாலும், அப்படியொரு பூவே கிடையாது என்கின்றனர் தாவர ஆய்வாளர்கள். அதனால், மதி கெட்டான் சோலையில் மதிகெட்டுப் போவதற்கு என்ன காரணம் என்ற மர்மம் நீடித்துக் கொண்டே இருக்கிறது.

அம்மா! ப்ளீஸ் செஞ்சுதாங்கம்மா!

இது 'காய்கறி புலாவ்' செய்முறை நேரம்.

தேவையானவை: 100 கிராம், உருளைக் கிழங்கு, பச்சை மிளகாய் தலா 5, இஞ்சி, வெங்காயம் 6, கேரட் 4, காலிபிளவர் சிறியது, தேங்காய் ஒன்று, மிளகாய்ப் பொடி, கசகசா, சீரகம் தலா ஒரு கரண்டி, எண்ணெய், மசாலாப் பொடி, மஞ்சள் பொடி, கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை, உப்பு.

செய்முறை: காலி பிளவர், கேரட், உருளைக் கிழங்கை பெரிய துண்டுகளாக நறுக்கவும். அதில், பட்டாணியைச் சேர்த்து, வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி வதக்கவும். பாதி வெந்ததும் கொஞ்சம் தண்ணீர் ஊற்றுங்கள். மிளகாய் பொடி, மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து கொதிக்க விடுங்கள். பிறகு அடுப்பிலிருந்து இறக்கி, தண்ணீரை வடி கட்டுங்கள். சிறிது நெய் ஊற்றி அரிசியை வறுத்து, உப்பு சேர்த்து சோறாக வடிக்கவும். இரண்டு வெங்காயம், பச்சை மிளகாயை நறுக்கி, தேங்காய்த் துருவல், இஞ்சி, கசகசா, சீரகம் ஆகியற்றை சேர்த்து விழுதாக அரைக்கவும். மீதமுள்ள வெங்காயத்தை பொடிப் பொடியாக நறுக்கி, வாணலியில் போட்டு வதக்குங்கள். வேகவைத்த காய்கறிகள், சோறு, அரைத்த மசாலா ஆகியவற்றை அதில் கலந்து நன்கு கிளறவும். சிறிது மசாலப் பொடி, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை கலந்து கிளறி இறக்கி, சூடாகப் பரிமாறுங்கள். இந்தக் காய்கறி புலவ் சூப்பராக இருக்கும். சத்தும் நிறைந்தது.

என்றென்றும் அன்புடன்,

அங்குராசு

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us