தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/நீந்தும் இழுது மீன்!

நீந்தும் இழுது மீன்!

நீந்தும் இழுது மீன்!


PUBLISHED ON : பிப் 05, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 05, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இழுது மீனின் (ஜெல்லி பிஷ்) முக்கிய உடற் பகுதியின் ஓரம் அல்லது மணிப் பகுதியில், தசை நார்கள் உள்ளன. இவை சிறியதாக அல்லது மணியின் மூலமாக பிழிந்து நகரும் இயக்கத்தை கொண்டுள்ளன. இது தண்ணீரை மணியிலிருந்து வெளியேற்றுகின்றன மற்றும் இதன் மூலமாக இழுது மீனானது தண்ணீரிலிருந்து இழுக்கப் படுகிறது. சாதாரணமாக இழுது மீனானது மேற்புறமாக நீந்தும், மேற்பரப்பின் அருகாமை வரை வரும். அது நீந்துவதை நிறுத்தும்போது அதன் இரையை தேடுகின்றன. சிறிய விலங்குகளாக 'ப்ளான்க்டான்'கள், இரவில் மேற்பரப்பை அடைகின்றன மற்றும் பகல்பொழுதில் தண்ணீரின் நடுவில் வந்துவிடுகின்றன.

எப்படி இழுதுமீன் இனப்பெருக்கம் செய்கின்றன.

இழுது மீனானது தன்னுடைய குட்டி அமைப்புகளையோ அல்லது லார்வாக்களையோ வெளியிடுகின்றன. இவைகள் நீந்தி சென்று கடலின் அடிப் பகுதிக்கு சென்று விடுகின்றன. அங்கே அவை சிறிய அளவிலான 'பாலிப்'களாக உருபெருகின்றன. இந்த நேரத்தில் அவை மெல்லிய கடல் செடிகளாக காட்சியளிக்கின்றன. ஆங்கில எழுத்தான சிறிய 'ஓ' விட சிறியதாக காணப்படுகின்றன.

மணல் வார்ப்புக்கள்!

கரைகளில் இருக்கும் மணல் வார்ப்புகள் கடற் புழுக்களுடையவையாகும். இந்த புழுக்கள் 15-_20 செ.மீ வரை பெரியதாகும். இவை மிகவும் மிருதுவாகவும், அடர்த்தியாகவும் முதல் பாகத்தில் இருக்கும். அவை மண்புழுக்களுக்கு, மணலையும் களிமண்ணையும் உண்பதன் மூலமாக உணவாக இருக்கும். பின்னர் அவை எந்தவித ஊட்ட சத்து பொருட்களையும் செரிமானம் செய்து விடும். பின்னர், அவை பிரசித்தி பெற்ற வார்ப்புகளாகி விடுகின்றன.

மற்ற விலங்குகளை கொல்லும் பிராணி!

இழுது மீனிற்கு விஷமுள்ள கொடுக்கு இருந்தாலும், சில விலங்குகள் அவற்றை உண்டு விடுகின்றன. இழுது மீனை தின்னும் விலங்குகளாக வெவ்வேறு வகையான மீன் களும், சிப்பி மீனும் மற்றும் முக்கியமாக கடல் ஆமை களாகும். எனினும், இழுது மீன்கள் வெளுத்த நிறத்திலும் அல்லது தெளிவான நிறத் திலும் இருப்பதனால் விலங்கு களை கொள்ளும் பிராணி களால் இதனை சரிவர காண இயலாது.

முட்புழுக்கள்!

* 8,500 இனங்கள்,

* அதிகமாக கடலில் வாழக் கூடியவைகள்

* உடலில் முட்களும், துடுப்பு களும் இருக்கும்.

* பாலினம் வெவ்வேறுபடும் (ஆண் மற்றும் பெண்)

* இதில் கடற்புழு, கந்தைப்புழு, விசிறிப்புழு, மயில் புழு, கடல் எலி, அளவுகோல் புழு, பூனைப்புழு போன்றவையாகும்.

எலி புழு!

எலிப்புழுவானது எலியே கிடையாது. ஆனால், இது ஒருவகை யான முட்புழுவாகும். அது 20 செ.மீ அளவு வளர்கின்றது. அதன் உடல் முழுவதும் முடி போன்ற துடுப்புகள் உள்ளன. அதன் உரோமம் காண்பதற்கு உண்மையான எலியை போன்றே காட்சி யளிக்கும். கடல் எலி களிமண்ணிலும் அல்லது கடலை சார்ந்த இடங்களிலும் தென்படும். இவை அட்லாண்டிக் பெருங் கடல்களின் மற்றும் மெடிட்டேரினியன் கடலில் காணப் படுகின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us