நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சுதந்திரப் போராட்டக் காலத்தில் ஒரு கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான, தீரர் சத்தியமூர்த்தி கம்பீரமாகப் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது அவரைப் பிடிக்காத ஒருவர் அவருடைய பேச்சை இடைமறித்து, 'நீங்கள் எல்லாம் வெறும் வாய்ப்பேச்சு பேசத்தான் லாயக்கு... காந்தியடிகளைப் பாருங்கள்... அமைதியாகத் தன் போராட்டத்தை நடத்துகிறார்.
அவரது தகுதிக்கு அவரை, 'ஒன்று' என்று அழைத்தால், நீங்களெல்லாம் வெறும் ஜீரோக்கள்' என்று கத்தினார்.
'ஐயா, நீர் சொன்னது உண்மைதான். உம் கூற்றுப்படி காந்தியடிகள் ஒன்றுதான். நாங்களெல்லாம் அதன் அருகிலிருக்கும் ஜீரோக்கள். எனவே, ஒன்றுக்குப் பக்கத்தில் ஜீரோ சேர்ந்தால் அதன் மதிப்புக் கூடுமே தவிர குறையாது' என்று அமைதியாக கூறிவிட்டுத் தன் பேச்சைத் தொடர்ந்தார் சத்தியமூர்த்தி.
பேசியவர் வாயடைந்துப் போனார்.

