PUBLISHED ON : ஜூலை 01, 2016

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒருசமயம் அமெரிக்கா சென்றபோது, வாஷிங்டன் நகரிலிருந்த ஒரு பள்ளிக்குச் சென்றிருந்தார் நேரு. அங்கே ஒரு வகுப்பறையில் மாணவர்களோடு மகிழ்ந்து உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த மாணவர்கள், தங்கள் பள்ளியில் ஒரு மாணவன் இருக்கிறான். யார் என்ன ஜோக் அடித்தாலும் சிரிக்க மாட்டான் என்று சொன்னார்கள்.
நேரு எப்படியும் அந்த சிரிக்காத, மாணவனைச் சிரிக்க வைக்க வேண்டும் என்று எண்ணி, அந்த மாணவன் இருந்த வகுப்பறைக்குச் சென்றார். அவனோ, 'உம்'மென்று உட்கார்ந்திருந்தான்.
நேரு அவரது பாக்கெட்டிலிருந்த சீப்பினை எடுத்து தனது வழுக்கை தலையைச் சீவினார். உடனே அந்த மாணவன் சிரிக்க ஆரம்பித்துவிட்டான். மாணவன் மட்டுமல்ல, அனைவரும் சிரித்து மகிழ்ந்தனர்.
கில்லாடிதான் போலிருக்கு நம்ம நேருமாமா.

