
கரைந்தபடி குளக்கரை மரக்கிளையில் அமர்ந்தது காகம்.
இரை கிடைக்குமா என, சுற்றும் முற்றும் பார்த்து கொண்டிருந்த காகம் கண்ணில், குளத்து நீரில் தத்தளித்துக் கொண்டு இருந்த முயல் தெரிந்தது.
அது, கரையேற முடியாமல் தவிப்பதை கண்டு பரிதாபப்பட்டது காகம்.
முயலைக் காப்பாற்ற யோசித்தது.
'எப்படி குளத்தில் விழுந்தாய்...'
'வேட்டை நாய் துரத்திய போது, தவறி விழுந்து விட்டேன்... என்னை காப்பாற்று...' கெஞ்சியது முயல்.
சற்று துாரத்தில், ஆலமர விழுதுகள் ஓடிந்து கிடந்தன. அதில் ஒன்றை கவ்வி கொண்டு வந்தது காகம்.
'நண்பா... இந்த விழுதை குளத்து நீரில் போடுகிறேன்; அதைப் பற்றிக் கொள்; இழுத்து மேலே கொண்டு வந்து விடுகிறேன்...' என்றது.
சொன்னபடி இழுத்து கரை சேர்த்தது காகம்.
அன்று முதல் நட்புடன் பழக ஆரம்பித்தன.
கிடைக்கும் கிழங்கு, பழங்களை பகிர்ந்து உண்டன.
துன்பங்களில் உதவி மகிழ்வுடன் வாழ்ந்தன.
குழந்தைகளே... சுய நலமின்றி உதவி செய்ய பழகுங்கள்!
- ஜி.சுந்தரராஜன்

