தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/ஊஞ்சலில் ஆடுவதால் ஏற்படும் பயன்!

ஊஞ்சலில் ஆடுவதால் ஏற்படும் பயன்!

ஊஞ்சலில் ஆடுவதால் ஏற்படும் பயன்!


PUBLISHED ON : பிப் 13, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 13, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முன்பெல்லாம் ஊருக்கு வெளியே ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி பெண்கள் ஆனந்தமாக ஆடினர். பின் படிப்படியாய் அது குறைந்து காணாமல் போய்விட்டது.

* ஊஞ்சலில் ஆடுவதால் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் மறைந்து நேர்மறை எண்ணங்கள் தோன்றுகிறது

* திருமணங்களில் 'ஊஞ்சல் சடங்கு' இதன் அடிப்படையில் தான் நடத்தப்படுகிறது

* ஊஞ்சல் ஆடுவதால் மனச்சோர்வு நீங்கி, உடல் உற்சாகம் பெறுகிறது

* நேராக அமர்ந்து கைகளை உயர்த்தி இருபக்க சங்கிலிகளையும் பிடித்துக்கொண்டு வேகமாக ஆடும்போது, முதுகுத்தண்டுக்கு ரத்தஓட்டம் படர்ந்து மூளை சுறு சுறுப்பாகிறது

* கணினியில் மணிக்கணக்கில் உட்கார்ந்து முதுகுத்தண்டு வளைந்துப் போன இன்றைய பெண்கள், இந்த ஊஞ்சல் பயிற்சியை தினமும் செய்தால் முதுகுத்தண்டுவடம் பலம் பெற்று கழுத்துவலி குணமடைய வழி செய்கிறது

* இதயத்திற்கு சுத்தமான பிராண வாயுவை கொடுத்து இதயத்தை சீராக இயங்கச் செய்யும். தினமும் தோட்டத்தில் ஊஞ்சல் ஆடுபவர்களுக்கு இதயநோய் கட்டுப்படும்

* ஊஞ்சல் ஆடுவதால் உடலில் ரத்தஓட்டம் அதிகரித்து இதயத்திற்கு ரத்தம் சீராக செல்லும்

* சாப்பிட்டவுடன் அரைமணிநேரம் மிதமான வேகத்தில் ஊஞ்சல் ஆடுவது நல்லது. சாப்பிட்ட உணவு செரிக்க இந்த ஆட்டம் உதவும்

* கோபமாக இருக்கும் போது ஊஞ்சல் ஆடினால் கோபம் தணியும்

* வெளியில் சுற்றியலைந்துவிட்டு வந்து ஊஞ்சலில் உட்கார்ந்து கண்களை மூடி தலையை சற்றே மேலே உயர்த்தி, இரு கைகளையும் ஊஞ்சல் பலகையில், 'ரிலாக்ஸாக' ஆடினால் களைப்பெல்லாம் பறந்து, உடலின் ஒவ்வொரு பகுதியும் ஓய்வு பெற்று நிம்மதி ஏற்படும்

* பழங்காலத்தில் எல்லா வீடுகளிலும் வரவேற்பறையில் ஊஞ்சல் கட்டி வைத்திருப்பர்

* வீட்டுக்குள் வரும் தேவதைகள் ஊஞ்சலில் ஆடப் பிரியப்படுவர். ஊஞ்சலில் ஆடி நல்லது செய்வார்கள் என்பதும் நம்பிக்கை.

சுப காரியங்களைப் பற்றி பேசும் போது ஊஞ்சலில் உட்கார்ந்து பேசுவதும் வழக்கமாக இருந்தது.

- ஜோ.ஜெயக்குமார்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us