
ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டி பாளையம், வெள்ளாங்கோயில், அரசு உயர்நிலைப் பள்ளியில், 1975ல், 10ம் வகுப்பு படித்தேன்.
வகுப்பு ஆசிரியர் ஆறுமுகம், 'உனக்கு படிப்பே வரவில்லை... மாடு மேய்க்க வேண்டியது தானே...' என்றார்; மனதளவில் புண்பட்டேன். பட்டாளத்தில் சேர்ந்து விடலாம் என்று எண்ணிக் கொண்டிருந்தேன்.
கணக்கு தான் எனக்கு பிணக்காக இருந்தது. ஒருமுறை கூட தேர்ச்சி பெற முடியவில்லை. எனவே, தலைமை ஆசிரியர் மாதவன் நாயரிடம், 'கணித பாடத்தில் மட்டும் தேர்ச்சி பெற முடியாமல் தவிக்கிறேன் ஐயா...' என்று கூறினேன். பிரத்யேகமாக கவனம் செலுத்தி கற்று கொடுத்தார். அவரது அயராத முயற்சியால், கணிதத்தில் தேர்ச்சி பெற்றேன்.
கோவை அரசு கலைக் கல்லுாரியில் பி.எஸ்சி., விலங்கியல் படித்து, இந்தியன் வங்கியில், மேலாளர் பதவி வரை வளர்ச்சி பெற்று, நேர்மையான அதிகாரி என பெயரெடுத்து ஓய்வு பெற்றேன்.
தற்போது, என் வயது, 61; வாழ்வில் பட்டினி, ஏமாற்றம், ஏற்ற தாழ்வுகளைக் கடந்து வந்துள்ளேன். அவற்றிலிருந்து மீள உதவியாக இருந்தவர்களை இந்த நேரத்தில் மனதில் கொண்டுள்ளேன்.
- கோ.சின்னசாமி, கோவை.
தொடர்புக்கு: 94420 77157

