
அக்குபஞ்சர் பற்றிய விவரங்கள் அடங்கிய புத்தகம், ஹுவாங் டிநி சிங் சூவென். (மஞ்சள் சக்கரவர்த்தியின் உடல் உட்புற வைத்திய இலக்கிய நூல்). இந்நூலை உருவாக்க, 1,500 ஆண்டுகள் ஆகி இருக்கிறது. கி.மு.2ம் நூற்றாண்டில் தான் இந்நூல் நிறைவு பெற்றிருக்கிறது. புராதனச் சீன வைத்திய சாஸ்திரம் (வேதம்) இந்நூல். இதில் அக்குபஞ்சர் பற்றிய விவரங்கள் நிறைய உள்ளன. 1.25 அங்குலத்திலிருந்து 9.25 அங்குலம் வரையிலான (9-24 செ.மீ) 9 விதமான ஊசிகள், மனித உடலில் 365 இடங்களில் எந்த நோய்க்கு, எங்கு, எப்படி ஊசியைச் செலுத்த வேண்டும் என்ற விவரங்கள் தரப்பட்டுள்ளன. இத்தகைய ஊசிகளை உருவாக்கும் விதமும் கூறப்பட்டுள்ளது. பல்வேறு உலோகங்கள் சொல்லப்பட்டிருந் தாலும் விலை அதிக மானாலும், சில குறிப் பிட்ட நோய்களைக் குணப்படுத்தத் தங்கத் தினாலான ஊசியே சிறந்தது என்று கூறு கிறது இந்நூல். உடலின் இயக்கத்தை வேகப் படுத்தக் கூடியவை இத்தங்க ஊசிகள். மயக்கத் தன்மை அளிப்பவை வெள்ளி ஊசிகள்.
'மஞ்சள் சக்கரவர்த்தி' என்பவரால் இந்த வைத்திய வேத நூல் தொடங்கப்பட்டாலும் உடற்கூறு சாத்திரத்தில் ஈடுபாடு கொண்ட பல அரசர்களின் ஆர்வத்தினால் வளர்ந்தது இந்நூல். கி.பி.முதல் நூற்றாண்டில், 'வாங் மாங்' என்ற சக்கரவர்த்தி, தன் வைத்தியர் மற்றும் கசாப்புக்காரன் உதவியினால், உடலின் நரம்பு மண்டலங்களை ஆராய, மூங்கில் குச்சிகளைப் பயன்படுத்தி இருக் கிறார். இதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு, ஹூ சுங் என்ற சக்கரவர்த்தி தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளின் உடல்களை வெட்டி, உறுப்புக்களை வரைபடமாக எழுதும்படி பணித்திருக்கிறார். அதன் பிறகு, 'ஜென்சுங்' என்ற சக்கரவர்த்தி மனித உடலின் மாதிரியை வெண்கலத்தில் சிலையாக அதில் நரம்பு மண்டலம் முழுவதும் விளங்கும்படி வடித்துத் தரும்படி செய்திருக்கிறார்.
இப்படிச் சீனாவில் பிரபலமான அக்கு பஞ்சர் முறை, மேற்கத்திய நாடுகளுக்கு மிக மெதுவாகவே பரவியது. டச்சு கிழக் கிந்தியக் கம்பெனியின் டாக்டராக இருந்த 'வில் ஹெல்ம் டென் ரைம்' என்பவர் இம்முறை பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்.
அக்குபஞ்சர் எப்படி செயல்படுகிறது என்பது திட்டவட்டமாக யாருக்கும் தெரியாது. ஒரு குறிப்பிட்ட நோயைக் குணப்படுத்த, அதற்குச் சம்பந்தமே இல்லாத வேறோர் இடத்தில் ஊசிகள் செலுத்தப்படுகின்றன. நோய் குணமாகிறது. இது எப்படி என்பதற்குச் சரியான விளக்கம் கூறமுடியாது.
உணர்ச்சி நரம்புகளோடு தொடர்புடைய உடலின் பகுதிகள் மேற்பரப்பு இவற்றை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது. தலைவலிக்கு கால் விரலிலும், தோளிலும் ஊசிகள் குத்தப்படும். புராதன சீனர்கள் நரம்பு மண்டலத்தை 12 பகுதிகளாக (மெரிடியன்ஸ்) வகுத்திருக்கின்றனர். கற்பனையால் உருவாக்கிய இந்த மெரிடியன் கோடுகள், அக்குபஞ்சர் புள்ளிகளைத் தொட்டுக்கொண்டு செல்கின்றன. இக்கோடுகள் சுவாசப்பை, லிவர், கிட்னி, மூத்திரப்பை இப்படி பல முக்கிய உறுப்புகள் வழியாக 365 புள்ளிகளின் மீதாக ஒடுகின்றன. மூச்சுத் திணறல், ஆஸ்துமா, ருமாடிஸம், டான்சில், புராங்கைடிஸ், இருமல் ஏன் பெப்டிக் அல்சரைக் கூட, அக்குபஞ்சரால் குணப்படுத்த முடியுமாம்.
அக்குபஞ்சர் சிகிச்சை முறை இப்போது அமெரிக்காவில் மிகவும் பிரபலமடைந்துள்ளது. டாக்டர் கிரே டிமாண்ட் என்பவர், ஒரு நோயாளிக்குச் சுவாசப்பைக்கு ஆபரேசன் செய்வதை சீனாவில் சமீபத்தில் பார்த்தாராம். அவருக்கு மயக்க மருந்து ஏதும் தரப்படவில்லை. இடது கையில் அக்கு பஞ்சர் ஊசி செலுத்தப்பட்டது அவ்வளவுதான். கிரே டிமாண்ட் கூறும் அதிசயத்தைக் கேளுங்கள்.
நோயாளியின் மார்புப் பகுதி அறுத்துப் பிரிக்கப்பட்டது. அவரின் இதயத் துடிப்பு இயற்கையாக இருந்தது. அவர் உற்சாகமாகப் பேசி கொண்டிருந்தார். அறுவை சிகிச்சை பாதி முடிந்திருந்த போது அவர் பசிக்கிறது என்றார். டாக்டர்கள் தங்கள் பணியை நிறுத்தி, அவர் சாப்பிட அரிந்த பழங்களைக் கொடுத்தனர்.
அக்குபஞ்சர் முறையின் ரகசியம், நோயாளியை ஹிப்னடைஸ் (ஒரு வித மயக்கநிலை) செய்வது என்று மேற்கத்திய வைத்தியர்கள் கருதுகின்றனர். ஆனால், இது உண்மையல்ல... நோயாளியின் மனோ நிலையை ஆராய்ந்த பிறகே, இன்றும் சீனாவில் அக்குபஞ்சர் முறையை அறுவைச் சிகிச்சைக்குப் பயன்படுத்துகின்றனர்.
***