தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/எல்லாருமே....

எல்லாருமே....

எல்லாருமே....


PUBLISHED ON : நவ 08, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 08, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆப்பிரிக்காவை ஆண்டு வந்த நீக்ரோ மன்னனாகிய காமரா என்பவன் மிகவும் தற்பெருமை கொண்டவன். யாருக்கும் தலை வணங்காதவன்; கொடியவன். அதனால் அவனின் சிறு கட்டளையைக் கூட வீரர்கள் மிகவும் கவனத்துடன் நிறைவேற்றி வந்தனர்.

ஒருநாள் அவன் தன்னை வளர்த்து ஆளாக்கிய கிழவன் புகாபரிடம், ''எல்லா மக்களும் எனக்கு வேலைக்காரர்கள் தாம்,'' என்று ஆணவத்தோடு சொன்னான்.

அதற்கு புகாபர், ''எல்லா மனிதர்களுமே ஒருவருக்கு ஒருவர் வேலைக்காரர்கள்தாம்,'' என்றார்.

இதைக்கேட்ட அரசன் கோபத்தோடு, ''அப்படியானால் நான் உனக்கு வேலைக்காரனா? நீ சொன்னதை மெய்ப்பிக்க வேண்டும். இன்று கதிரவன் மறைவதற்குள் என்னை நீ உன் விருப்பப்படி வேலை செய்ய வைக்க வேண்டும். அப்படிச் செய்தால் உ<னக்கு நூறு மாடுகளை பரிசாக வழங்குகிறேன். இல்லாவிட்டால், உன்னைக் கொன்று விடுவேன்,'' என்று கத்தினான்.

''ஏற்றுக் கொள்கிறேன்,'' என்றார் புகாபர் அமைதியாக.

மிகவும் முதியவரான புகாபர் கைத்தடி ஒன்றைத் தரையில் ஊன்றியபடி அங்கும், இங்கும் நடந்தார்.

வாசலில், ''ஐயா இந்த ஏழைக்கு பிச்சை போடுங்கள்,'' என்ற குரல் ஒலித்தது.

அரசனைப் பார்த்து, ''அந்தப் பிச்சைக்காரனுக்கு ஏதேனும் உணவு போட அனுமதி தாருங்கள்,'' என்றார் புகாபர்.

அரசனும், ''சரி போட்டு விட்டு வா!'' என்றான்.

புகாபர் இரண்டு கைகளாலும் உணவுத் தட்டைப் பிடித்துக் கொண்டு, அதே சமயம் கைத்தடியையும் ஊன்றிக் கொண்டு, அரசனைக் கடந்து சென்றார்.

திடீரென்று அவர் கையிலிருந்த தடி நழுவித் தரையில் விழுந்தது. உணவுத் தட்டைப் போட்டு விட்டு கீழே விழுந்து விடுபவர் போல, இந்தப் பக்கமும், அந்தப் பக்கமும் ஆடினார்.

''அரசே சீக்கிரம் கைத்தடியை எடுத்து என் கையில் கொடுங்கள். இல்லையேல், நான் விழுந்து விடுவேன் என்று,'' அலறினார் புகாபர்.

அரசன் ஏதும் சிந்திக்காமல், அந்தத் தடியை எடுத்து புகாபரிடம் தந்தான்.

''புகாபர் சிரித்துக்கொண்டே பார்த்தீர்களா அரசே, எல்லா மனிதர்களும் ஒருவர் மற்றவருக்கு வேலைக்காரர்கள் தாம். நான் அந்தப் பிச்சைக்காரனுக்காக வேலை செய்கிறேன். நீங்கள் எனக்காக வேலை செய்கிறீர்கள். எனக்குத் தருவதாகச் சொன்ன நூறு மாடுகளை இந்தப் பிச்சைக்காரனுக்குத் தந்து விடுங்கள்,'' என்றான்.

அவர் கெட்டிக்காரத்தனத்தைப் புகழ்ந்த அரசர், அன்று முதல் அவரை தனக்கு அறிவுரை கூறுபவராக வைத்துக் கொண்டார்.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us