தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/அழகா இல்லாவிட்டாலும்!

அழகா இல்லாவிட்டாலும்!

அழகா இல்லாவிட்டாலும்!


PUBLISHED ON : பிப் 24, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 24, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நான், 10ம் வகுப்பு, தமிழ் வழியில் படித்து கொண்டிருந்தேன். ஆங்கிலம் என்றாலே வகுப்பில் பாதி பேருக்கு, 'அலர்ஜி!' படித்த போது, ஆங்கில பாடத்திற்கு ஒரு ஆசிரியர் வந்தார். அவர் பார்ப்பதற்கு கருப்பாக, குள்ளமாக இருப்பார். அவரை பார்த்ததும் எங்களுக்கு பிடிக்கவில்லை.

ஆனால், அவர் பாடம் எடுத்த விதம், வகுப்பில் உள்ள அனைவருக்கும் பிடித்து விட்டது. முகம் கோணாமல், அழகாக, பொறுமையாக, புரியும் விதத்தில் சொல்லி கொடுத்தார். ஒருநாள் கூட, யாரையும் கோபமாக பேசியதில்லை.

வகுப்புக்கு அவர் ஒருநாள் வரவில்லையென்றாலும், அனைத்து வகுப்புகளும் போரடித்துவிடும். ஆங்கிலம் மட்டுமல்லாமல், அனைத்து பாடங்களுக்கும், ஒவ்வொரு கேள்வி பதிலையும் எப்படி படிக்க வேண்டும், எப்படி மனப்பாடம் செய்ய வேண்டும் என்று சொல்லி கொடுப்பார்.

'பொதுத்தேர்வில், அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும், கவனமாக படியுங்கள்' என்று கூறுவார். நாங்களும் போட்டி போட்டு நன்றாக படித்தோம். இப்படி, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், ஆங்கில பாடத்தில், 60 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் எடுத்தோம். பள்ளியில் எங்கள் ஆங்கில ஆசிரியரை மிகவும் பாராட்டினர். ஆனால், தேர்வு முடிந்ததில் இருந்து, ஆசிரியர் வேலையை விட்டுவிட்டார்.

நானும், என் தோழியரும், அவர் வீட்டிற்கு பார்க்க சென்றோம். அங்கு, அடையாளம் தெரியாத அளவிற்கு மிகவும் மெலிந்து, படுத்த படுக்கையாக இருந்தார். அப்போது தான், அவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்ற விவரம் தெரிந்தது.

அவரை பார்த்ததும், அழுகையாக வந்தது. அனைவரும் ஆங்கில பாடத்தில், அதிக மதிப்பெண் எடுத்ததை கூறினேன்; மிகவும் சந்தோஷப்பட்டார். அடுத்த சில நாட்களிலேயே அவர் இறந்துவிட்டார். இன்று, ஆங்கில வார்த்தைகளை எங்கு பார்த்தாலும், எங்கள் ஆசிரியர் நினைவு தான் வரும்!

- எஸ்.சுதா, மஞ்சக்குப்பம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us