தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/லட்சிய தாகம்!

லட்சிய தாகம்!

லட்சிய தாகம்!


PUBLISHED ON : ஜன 08, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 08, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

துாத்துக்குடி மாவட்டம், சோனகன் விளை, டி.டி.டி.ஏ. நடுநிலைப் பள்ளியில், 1965ல், 6ம் வகுப்பு படித்த போது, வகுப்பு ஆசிரியராக இருந்தார் ஆசிர்வாதம்.

ஒருநாள், 'எதிர்காலத்தில் என்னவாக விரும்புகிறீர்கள்...' என கேட்டார். பலவாறாக விளக்கம் தந்தனர் மாணவர்கள்.

என்முறை வந்தபோது, 'பத்திரிகையாளராக விரும்புகிறேன்...' என்றேன். கிண்டலாக, 'வீடு வீடாக பேப்பர் போடுவானா இருக்கும்...' என ஒருவன் கூறினான். அவனை அதட்டியபடி, 'உன் லட்சியத்தை எப்படி அடைவாய்...' என்றார். தீர்க்கமாக, 'நாளிதழ் மற்றும் புத்தகங்கள் படிப்பதில் ஆர்வமாக உள்ளேன்; அவற்றில் எப்படி எழுதுகின்றனர் என்பதை உன்னிப்பாக கவனித்து வருகிறேன். அதுபோல எழுத முடியும் என்று நம்புகிறேன்...' என்றேன்.

என்னை பாராட்டி, 'ஓய்வு நேரத்தில் பத்திரிகைகளை விடாமல் படி... அவற்றில் வருவது போல் எழுதி பழகு. லட்சியம் கண்டிப்பாக நிறைவேறும்...' என உற்சாகப்படுத்தினார். அது எழுத துாண்டியது. நாளிதழ் ஒன்றில், நான் எழுதிய தமாசு துணுக்கு பிரசுரமாகி, 1 ரூபாய் சன்மானமாக கிடைத்தது.

பின், முன்னணி பத்திரிகைகள் எல்லாவற்றிலும் எழுதியுள்ளேன். முதன்மை நாளிதழான, தினமலர் இணைப்பு இதழ்களில் என் படைப்புகள் இடம் பெற்றுள்ளன. இதை பெருமையாக கருதுகிறேன்! இப்போது, 69ம் வயதிலும் எழுத்துப்பணியை தொடர்கிறேன். படைப்புகளை அச்சில் காணும் போதெல்லாம் அந்த ஆசிரியரின் அன்பு முகம் மனதில் மலர்கிறது.

- டி.ஜெயசிங், கோவை.

தொடர்புக்கு: 94433 61091

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us