தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/எலிக்குட்டி!

எலிக்குட்டி!

எலிக்குட்டி!


PUBLISHED ON : ஜன 08, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 08, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை, புரசைவாக்கம், சி.எஸ்.ஐ. நடுநிலைப் பள்ளியில், 2008ல், ௮ம் வகுப்பு படித்த போது நடந்த நிகழ்வு!

அரையாண்டு விடுமுறை முடிந்து முதல்நாள் வகுப்பு துவங்கியதும், 'கீச்... கீச்...' என சத்தம் கேட்டது. பதறியபடி, 'வகுப்பறைக்குள் ஏதோ வந்து விட்டது' என தேடினோம். ஒரு மாணவன் பையில் அந்த சத்தம் வந்தது. இதை ஆராயச் சொன்னார் வகுப்பு ஆசிரியர் ரஜினி. அதில், நான்கு எலி குட்டிகள் இருந்தன. வகுப்பறையே கலகலத்தது.

அந்த பையை வைத்திருந்தவனை அழைத்து, 'விடுமுறை நாட்களில் மட்டுமல்ல; விடுமுறை முடிந்தும், பாடப்புத்தகம் வைத்திருந்த பையை நீ திறக்கவில்லை என இதிலிருந்து தெரிகிறது...' என கண்டிப்புடன் கூறினார் ஆசிரியர். வெட்கி தலை குனிந்தபடி எதுவும் பேசாமல் நின்றான்.

அந்த நிகழ்வு எனக்கு பாடமாக அமைந்தது. தவறுதலாக, ரிமோட் கருவி, பற்பசை என, பொருட்களை புத்தக பையில் எடுத்துச் செல்வது என் பழக்கமாக இருந்தது. பின், பையை சரி பார்ப்பதை தினசரி வழக்கமாக்கி கொண்டேன்.

தற்போது, என் வயது, 25; அந்த சம்பவத்தை இன்று நினைத்தாலும் சிரித்துவிடுகிறேன்.

- பானுபிரியா, சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us