PUBLISHED ON : பிப் 26, 2016

மாண்டிசோரி அம்மையாரிடம் மனவளம் குன்றிய பிள்ளைகள், 'முட்டாள்கள்' என்று விலக்கப்பட்ட பிள்ளைகள் அடங்கிய வகுப்புகள் தரப்பட்டன. இப்படிப்பட்ட பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டார்.
வழக்கமான போதனை முறைகள் இவர்களுக்கு பயன்படாது என்று புரிந்து கொண்ட இவர், சில மாதங்களில் மாணவர்களின் உள நலம் சார்ந்த புதுப்புது உத்திகளை புகுத்தி சிறப்பான ஒரு கல்வி முறையை நடைமுறைப்படுத்தினார். இது மிகவும் வெற்றிகரமாகச் செயல்பட்டதால், 'முட்டாள்கள்' என்று வர்ணிக்கப்பட்ட பிள்ளைகள் எழுதப்படிக்க ஆர்வத்துடன் கற்றுக் கொண்டனர். இதுவே, 'மாண்டிசோரி கல்வி முறை' உருவாக அடித்தளமாக அமைந்தது.
பிரச்னைகளை ஆழமாக ஆராய்ந்து தீர்வு தேடிச் செல்லும்போதுதான் அது சாதனையாக மலர்கிறது.
நீங்களும் சவாலான காரியங்களை சிந்தித்து, அதில் சாதனை படைக்கலாமே!
