தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/சுறு சுறுப்பை கற்பிக்கும் எறும்பு!

சுறு சுறுப்பை கற்பிக்கும் எறும்பு!

சுறு சுறுப்பை கற்பிக்கும் எறும்பு!


PUBLISHED ON : அக் 03, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 03, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சுறுசுறுப்பு மற்றும் ஒழுங்கான செயல்முறையால் புகழ் பெற்ற உயிரினம் எறும்பு. மனிதனை விட, 10 ஆயிரம் மடங்கு உருவத்தில் சிறியது.

அதன் வாழ்வைப் பற்றி பார்ப்போம்...

டைனோசர் காலத்திலேயே பூமியில் வாழும் உயிரினம் எறும்பு. உலகில், 22 ஆயிரம் இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. மேலும் கண்டறிய ஆய்வுகள் நடந்து வருகின்றன. இது, குழுவாக வாழும் பூச்சியினம். ஆறு கால்களை கொண்டது. குழுவுக்குள் செய்தியை பரிமாறும் திறன் கொண்டது.

எறும்புகளின் வாழ்க்கை சுழற்சியை நான்காக வகைப்படுத்தலாம். அவை, முட்டை, லார்வா, பியூபா, எறும்பு எனப்படும்.

உடல் எடையை விட, 50 மடங்கு அதிக எடையை துாக்கும் திறன் கொண்டது. பெரும்பாலான ஏறும்பு வகைகளின் ஆயுள், 90 நாட்கள்; கருப்பு எறும்பு, 15 ஆண்டுகள் வரை வாழ்வதாக கண்டறிந்துள்ளனர் விஞ்ஞானிகள்.

எறும்புகளுக்கு...

* காது கிடையாது; அதிர்வுகளால் உணரும்

* சண்டையிட்டால், ஒன்று இறக்கும் வரை நிறுத்தாது

* அதிகாரம் மிக்கது ராணி எறும்பு

* இரண்டு வயிறுகள் கொண்டது

* கரையான் போல் காணப்பட்டாலும், வேறுபட்ட இனம்

* பூதக்கண்ணாடியால் மட்டுமே சில எறும்புகளை பார்க்க முடியும்

* அதிகபட்சமாக, ஏழு செ.மீ., நீள எறும்புகளும் உண்டு.

சமூகமாக வாழும் பண்புடையது. அவற்றின் வசிப்பிடத்தை, 'புற்று' என்பர். மிகப்பெரிய எறும்பு புற்று ஒன்று, ஐரோப்பிய நாடுகளான இத்தாலி - ஸ்பெயின் எல்லையில், 2002ல் கண்டறியப்பட்டது. இது, 5,800 கி.மீ., நீளமிருந்தது.

சிலவகை எறும்புகள் இனப்பெருக்கம் செய்ய, ஆண் துணை தேவையில்லை. நீந்தும் திறனுள்ள எறும்புகளும் உண்டு. நீருடிக்கடியில், 24 மணி நேரம் உயிர் வாழும் திறனுள்ள எறும்பு இனங்களும் உண்டு.

பூமியில் வாழும் எறும்புகளின் எண்ணிக்கை, உலக மக்கள் தொகைக்கு இணையானது என, கணித்துள்ளனர் விஞ்ஞானிகள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us