தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/மனனம் செய்ய சுலபவழி!

மனனம் செய்ய சுலபவழி!

மனனம் செய்ய சுலபவழி!


PUBLISHED ON : அக் 25, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 25, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேனி மாவட்டம், கூடலுார், என்.எஸ்.கே.பி.மேல்நிலைப் பள்ளியில், 1996ல், 6ம் வகுப்பு படித்தபோது, வகுப்பாசிரியராக செல்வன் இருந்தார்; ஆங்கில பாட ஆசிரியரும் அவர் தான்.

மாணவர்களின் மனப்போக்கு அறிந்து கற்பிப்பதில் வல்லவர்; வாழ்க்கைகான கல்வியையும் போதிப்பார்.

ஆங்கில பாடத்தில், மனப்பாட செய்யுள்களை, அடிபிறழாமல் எழுதினால், தேர்வில் சுளையாக, 10 மதிப்பெண்கள் கிடைக்கும். அவற்றை, மனனம் செய்ய முடியாமல் திணறி வந்தோம்.

இதையறிந்த ஆசிரியர், 'கிடார்' வாத்தியத்துடன் வகுப்பறைக்கு வந்தார். மெட்டு போட்டு, கவிதைகளை பாடி பயிற்சியளித்தார். அந்த ஒரே பாடவேளையில், அனைவர் மனதிலும் பதிந்துவிட்டன.

எனக்கு, 34 வயதாகிறது; படித்து, 23 ஆண்டுகளுக்குப் பின்னும், அந்த பாடல்கள் அத்துபடியாக நினைவில் உள்ளன. உடன் படித்தவர்களை சந்திக்கும் போது, பாடி மகிழ்கிறேன்.

மாணவர்களின் எண்ணம் அறிந்து, புதுமையாக கற்பித்த, அந்த ஆசிரியர் போற்றுதலுக்குரியவர். அவரிடம் பயின்றதை பெருமையாக கருதுகிறேன்.

- மு.ஆதவன், சென்னை.

தொடர்புக்கு: 98940 78292


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us