தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/அல்பாகா!

அல்பாகா!

அல்பாகா!


PUBLISHED ON : ஆக 07, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 07, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உங்கள் தாத்தாவின் காலத்தில் மிக உயர்ந்த சூட் (கோட், பேண்ட்) அல்பாகா என்ற விலையுயர்ந்த கம்பளியினால் தைக்கப்பட்டது என்று சொல்லியிருக்கிறாரா... இன்று, அந்த இயற்கைக் கம்பளி ஆடையைப் போலவே செயற்கைக் கம்பளிகள் (ஸிந்தடிக்) வந்துவிட்டன. ஆனால், அன்று மிக உயர்ந்ததாகக் கருதப்பட்ட அல்பாகா என்ற கம்பளி ஆடை, இங்கு நீங்கள் காணும் மிருகத்தின் ரோமத்தினால் உருவானதுதான். இந்த மிருகத்தின் பெயரான, 'அல்பாகா' என்பதையே, அந்தக் கம்பளி ஆடைக்கும் வைத்து விட்டனர்.

இலேசாகவும், அதிக கதகதப் பையும் தந்து, நீண்டநாள் உழைக்கக் கூடியது அல்பாகா ஆடைகள். அல்பாகா என்ற இந்தப் பிராணி, தென் அமெரிக்காவின் பொலிவியா, பெரு ஆகிய நாடுகளின் மலைகளில் வாழுகிறது. இது காட்டு விலங்கல்ல. நம் வளர்ப்புப் பிராணியான ஆடுகளைப் போன்றது. லாமா இனத்து வழிவந்த பிராணி. பெருநாட்டு சுதேசிகள் இதன் உயர்ந்த ரோமத்துக்காகவே (கம்பளி) இதை பலுகிப் பெருக வைத்துள்ளனர்.

அற்புதமான கம்பளியைத் தரும் அதிசயப் பிராணி இது. ஆழ்ந்த காவி அல்லது கறுப்பு நிற ரோமங்கள் இதன் கால்களை மூடும் அளவுக்கு அடர்ந்து வளர்ந்திருக்கும். பொலிவியா... பெருவாசிகள், அல்பாகா என்ற இந்த மிருகத்தை நாம் ஆடுகளைப் பேணி வளர்ப்பது போல வளர்க்கின்றனர். ஆண்டின் குறிப்பிட்ட பருவத்தில் இதன் உடலிலுள்ள கம்பளி ரோமங்களை மழித்துச் சேகரிப்பர்.

ஒரு காலத்தில் கம்பளி ஆடைகள் உற்பத்தி செய்யத் தொடங்கிய போது தென் அமெரிக்காவிலிருந்து ஏராளமான அல்பாகா மிருகங்களை இங்கிலாந்திலும், ஆஸ்திரேலியாவிலும் கொண்டு போய் குவித்தனர். ஆனால், இங்கிலாந்திலும், ஆஸ்திரேலியாவிலும் பருவநிலை இந்த மிருகத்துக்கு ஒத்துக்கொள்ளவில்லை. நீண்ட நாள் வாழாமல் மடிந்தன. ஆகவே இம்முயற்சி கைவிடப்பட்டது.

அல்பாகாவின் உயரம் ஐந்தரை அடி. இதன் கழுத்து மிகவும் நீளமானது.

அல்பாகாவின் குட்டிகள் ரொம்ப அழகாக இருக்கும். மிருதுவான கிரீம்-காவி, கறுப்பு, வெள்ளை இப்படிப் பல்வேறு நிறங்களில் ரோமங்கள் (கம்பளி) அடர்ந்திருக்கும். குட்டி களுக்கு பெற்றோர்களைப் போல நீண்ட ரோமம் இருக்காது. நன்கு வளர்ச்சியடைந்த பிறகு, கம்பளி ரோமங்கள் நீளமாக வளரத் துவங்கும்.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us