தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/ம.அ. சங்கம்

ம.அ. சங்கம்

ம.அ. சங்கம்


PUBLISHED ON : ஆக 07, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 07, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிங்காரி கோட்டை என்ற ஊரில் வாழ்ந்த ஆண்கள் அனைவரும் மனைவிக்கு அடிமைகளாக இருந்தனர். மனைவிகளின் கொடுமை தாங்காமல் ஒருநாள் ஓரிடத்தில் கூடினர்.

'எவ்வளவு காலம்தான் மனைவிக்கு அஞ்சி வாழ்க்கை நடத்துவது? அவர்கள் செய்யும் கொடுமைகளுக்கு அளவே இல்லை. எப்படியாவது அவர்களின் கொடுமைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்து நாம் ஆண் மக்கள் என்று பெருமையுடன் நடக்க வேண்டும்,'' என்று உணர்ச்சி பொங்கப் பேசினார் ஒருவர்.

'இதற்கு என்ன செய்யலாம்?'' என்று கேட்டார் இன்னொருவர்.

'மனைவிக்கு அஞ்சாதவர் சங்கம்' என்ற ஒரு சங்கம் அமைப்போம். அதில் நாமும் நம்மைப் போலத் துன்பப்படும் ஆண் மக்களும் உறுப்பினர்களாகச் சேர்வோம். மனைவி செய்யும் கொடுமைகளிலிருந்து அந்தச் சங்கம் நம்மைக் காப்பாற்றும்,'' என்றார் மற்றொருவர்.

அவர் கருத்தை எல்லாரும் ஏற்றுக் கொண்டனர்.

சங்கம் தொடங்கப்பட்டது. நகரத்தில் இருந்த திருமணமான எல்லா ஆண் மக்களும் அதில் உறுப்பினராக சேர முன் வந்தனர்.

'என்ன நடந்தாலும் மனைவிக்கு அஞ்சமாட்டேன்' என்ற உறுதிமொழியில் கையொப்பம் இட்டு எல்லாரும் அதில் சேர்ந்தனர்.

சங்கத்தின் முதல் கூட்டம் சீரும், சிறப்புமாக நடந்தது. மேடையில் தலைவரும், செயலாளரும் அமர்ந்து இருந்தனர். அரங்கத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

இவ்வளவு பேரும் பாதிக்கப்பட்டவர்களா என்பதை அறிந்து ஆச்சரியமடைந்தனர். அவரவர் பட்ட கொடுமைகளை ஒவ்வொருவரும் விலாவாரியாக விளக்கினர். அதைக் கேட்டு மற்றவர் அழுதனர்.

'சரி... இவர்களை எல்லாம் அடக்குவது எப்படி?'' என்று ஒருவர் கேட்டார்.

வாய்கிழிய ஒவ்வொருவரும், 'அட்வைஸ்' கொடுத்தனர்.

கூட்டத்தைப் பார்த்து மகிழ்ந்தார் தலைவர். செயலாளரைப் பார்த்து அவர், ''நம் சங்க உறுப்பினர்களாகிய இவர்கள் எல்லாம் உண்மையிலேயே மனைவிக்கு அஞ்சாமல் இருப்பார்களா? எப்படி அறிவது?'' என்று கேட்டார்.

'நான் அதற்கு ஒரு அருமையான திட்டம் வைத்துள்ளேன். நடப்பதைப் பாருங்கள்,'' என்றார் செயலாளர்.

கூட்டத்தினரைப் பார்த்து, 'சங்க உறுப்பினர்களே! இந்தக் கூட்டம் இங்கே நடப்பது எப்படியோ எல்லாப் பெண்களுக்கும் தெரிந்து விட்டது. நம் எல்லாருடைய மனைவிகளும் கோபத்துடன் இங்கே வந்து கொண்டிருக்கின்றனர்,'' என்று அறிவித்தார்.

'என் மனைவி என்னை இங்கே பார்த்தால் என் கதி அவ்வளவுதான். நல்ல வேளை, செயலாளர் முன்னரே இதைச் சொன்னார். தப்பித்தேன்,'' என்று முணுமுணுத்துக் கொண்டே பரபரப்புடன் ஒவ்வொருவராகப் பின் வாசல் வழியாக வெளியேறினர்.

அரங்கத்தில் ஒரே ஒருவர் மட்டும் அமர்ந்து இருந்தார்.

அவரைத் தலைவரிடம் காட்டிய செயலாளர், 'இவ்வளவு பெரிய கூட்டத்தில் இவர் ஒருவர்தான் மனைவிக்கு அஞ்சாதவர். நாம் இவரைப் பாராட்டிச் சிறப்பிக்க வேண்டும்,'' என்றார்.

அமர்ந்து இருந்தவரைப் பாராட்ட இருவரும் அவர் அருகே வந்தனர். அப்போது தான் அவர் அமர்ந்திருந்த நிலையிலேயே இறந்து கிடப்பது அவர்களுக்குத் தெரிந்தது.

'மற்றவர்களாவது பரவாயில்லை, மனைவி வருகிறாள் என்று கேள்விப்பட்டதும் ஓடி விட்டனர். ஆனால், இவருக்கு அதைக் கேட்ட அதிர்ச்சியில் உயிரே போய் விட்டதே... இனி என்ன செய்வது?'' என்று நினைத்து மிகவும் வருந்தினர் தலைவரும், செயலாளரும்.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us