தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/மினி ஸ்டோரி! கந்தல் உடையில் தேவதைகள்!

மினி ஸ்டோரி! கந்தல் உடையில் தேவதைகள்!

மினி ஸ்டோரி! கந்தல் உடையில் தேவதைகள்!


PUBLISHED ON : நவ 18, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 18, 2011


Follow on Google
அ நிறம் | அளவு

புயலும் மழையுமான ஓர் இரவு. தங்க இடம் இன்றி அந்தச் சிறிய ஓட்டலில் ஒரு கிழவரும், அவரது மனைவியும் நுழைந்தனர்.

எங்கும் தேடியும் எங்களுக்கு இடம் கிடைக்கவில்லை... இந்தக் கொடிய இரவை கழிக்க, ''தம்பி நீ உதவுவாயா!'' என்றார் கிழவர்.

''அடடா எங்கள் ஓட்டலிலும் இடம் இல்லை. ஊரில் நடக்க இருக்கும் திருவிழாவை முன்னிட்டு இட நெருக்கடி. என் அறையில் வேண்டுமானால் தங்குங்கள். நான் வெளியில் படுத்துக் கொள்கிறேன்... இந்த இரவில் நீங்கள் எங்கே செல்ல முடியும்!''என்றான்.

''உன்னை மாதிரி கருணை உள்ளம் கொண்ட இளைஞன் ஒரு பெரிய ஓட்டலின் மானேஜராக இருக்க வேண்டியவன். ஒரு காலத்தில் உனக்காக நான் ஒரு ஓட்டல் கட்டினாலும் கட்டுவேன்,'' என்றார் கிழவர்.

கிழவரும், அவரது மனைவியும் அவனது அறையில் தங்கிக் கொண்டனர். மறுநாள் காலையில் கிழவர் அவனுக்கு நன்றி சொல்லி விட்டு கிளம்பினர்.

இரு ஆண்டுகளுக்கு பிறகு, நியூயார்க்கிற்கு வரச் சொல்லி அந்த இளைஞனுக்கு தந்தி வந்தது. அதே பழைய கிழவர் சமீபத்தில் தான் கட்டிய மிகப் பெரிய ஓட்டலை அவனுக்குக் காட்டி, ''நீதான் இதற்கு மேனஜர்,'' என்றார்.

அவனது வாழ்க்கை எங்கோ போய்விட்டது.

எந்த மனிதனையும் அலட்சியமாக நினைக்காதீர்கள். கந்தல் உடையில் தேவதைகள் ஒளிந்திருக்கக்கூடும்!

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us