தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/அரிகோ (2)

அரிகோ (2)

அரிகோ (2)


PUBLISHED ON : ஜூன் 19, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 19, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அரிகோவின் செயலைக் கண்டு திடுக்கிட்ட அவரது மனைவி, கையில் உடையுடன் அரிகோவை விரட்டிக் கொண்டு ஓட, இந்தக் களே பரத்தில் ஊரே கூடி விட்டது.

பின்னர் இந்த விவகாரத்தை மலை மீதிருக்கும் தேவாலயத்திற்குக் கொண்டு சென்றார். அவரது கனவைக் கேட்ட பாதிரியார் பெனிடோ திடுக் கிட்டார். ஆவிகளுக்கு இணங்கிப் போவது திருச்சபைக்கு விரோதமானது என்று எச்சரித்தார்.

இதனால் அரிகோவிற்கு சற்று பயம் ஏற்பட்டது. ஆனாலும் மருத்துவ சேவை என்பது மக்களுக்கு நன்மை பயக்கக்கூடியது என்பதால் அதனை நிராகரிக்க அவருக்கு மனம் வரவில்லை. தீவிர யோசனையில் ஆழ்ந்தார். அதுகுறித்து அவர் திடமான முடிவினை எடுப்பதற்கு முன்பாக மருத்துவர் ப்ரிட்ஸ் முந்திக் கொண்டார்.

அரிகோவின் மூலமாகத் தனது முதல் சேவையை நிகழ்த்த தொடங்கினார். அச்சிற்றூரில் கால் ஊனமான ஒருவன் இருந்தான். அவன் கைத்தடியின் உதவியால் விந்தி, விந்தி நடப்பான். இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

ஒருநாள் அவன் தெருவில் தனியாக விந்தி, விந்தி நடந்து வந்து கொண்டிருப்பதைப் பார்த்தார் அரிகோ. திடீரென்று அவருள் ஏதோ ஒரு மர்ம மான சக்தி புகுந்தது போல இருந்தது. வேகமாக அவனை நோக்கி நடந்த அரிகோ, திடீரென்று அவனது கைத்தடியைப் பிடுங்கித் தூரமாக எறிந்தார்.

''நீ இதுவரை விந்தி, விந்தி நடந்தது போதும். இனிமேல் எல்லாரையும் போல சாதாரணமாக கைத்தடி துணை இல்லாமல் நடந்து போ,'' என்று சற்று மூர்க்கமாகவும், அதட்டலாகவும் ஆணை யிட்டார்.

அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. திடுக்கிட லுடன் கூடிய, பய உதறலாய் இருந்த அவனுக்கு, அரிகோவை எதிர்த்துப் பேசக்கூட நா எழவில்லை. அரிகோவின் ஆணைக்குக் கட்டுப்பட்டவன் போல நடக்க ஆரம்பித்தான்.

என்ன ஒரு ஆச்சரியம்!

கைத்தடி இல்லாமல், விந்தி, விந்தி நடக்காமல், எல்லாரையும் போல சாதாரணமாக நடக்கத் தொடங்கினான். இதனைப் பார்த்து அரிகோவே திடுக்கிட்டுப் போனார். இது எப்படி சாத்தியம் என்பது அவருக்கே ஆச்சரியமாக இருந்தது. அவரால் நம்பவே முடியவில்லை.

அவனோ சந்தோஷத்தில் உரக்கக் கூவியவாறு, ஓடவும் தொடங்கினான். இந்த அதிசயத்தைக் கண்டு அந்த ஊரே மூக்கின் மேல் விரலை வைத்தது. இதுதான் அரிகோவைப் பயன்படுத்தி மருத்துவர் ப்ரிட்ஸ் நிகழ்த்திக் காட்டிய முதல் அமானுஷ்யம். இந்த அதிசய நிகழ்வு உள்ளூரில் பரபரப்பாக பேசப்பட்டது. இதனைத் தொடர்ந்து மற்றொரு நம்பவே முடியாத சம்பவம் ஒன்றும் நடந்தது. கிட்டத்தட்ட அதுதான் அரிகோவின் அற்புதத்தை அந்த ஊரில் மட்டுமல்லாமல், சுற்று வட்டாரத்திலும் கொண்டு சேர்த்தது.

என்ன அது?

அந்த பெண்ணுக்கு கர்ப்பப் பையில் புற்று நோய்க் கட்டி. அறுவை சிகிச்சை செய்ய முடியாத அளவிற்கு அது மிகப் பெரியதாக வளர்ந்து விட்டிருந்தது. மருத்துவர் கள் அனைவருமே கையை விரித்து விட்டனர். இப்போது அந்தப் பெண் சாவை நெருங்கிக் கொண்டிருந்தாள். அவளது படுக்கையைச் சுற்றி உற்றார், உறவுகளும், நட்பு வளையங்களும் கூடி நின்றவாறு, அவள் அதிக வலியில்லாமல் சாக வேண்டும் என்று இறைவனை பிரார்த்தித்துக் கொண்டிருந்தனர். அனைவரிடமும் ஒரு இனம் புரியாத சோக மவுனம்.

கிறிஸ்துவ பாதிரியார் ஒருவர் அங்கு வந்து, அந்தப் பெண்ணுக்கான இறுதி நேரச் சடங்குகளைப் பக்தியோடு செய்து கொண்டிருந்தனர்.

அரிகோவும் தன் மனைவி அர்லடேயை அழைத்துக் கொண்டு அந்தப் பெண்ணைப் பார்ப்பதற்காகச் சென்றார். அப்போது இறுதி நேரச் சடங்குகளை முடித்துக் கொண்டு பாதிரியார் வெளியேறிக் கொண்டிருந்தார். அங்கிருந்தோர் அனைவரும் கண்ணீருடன் விசும்பிக் கொண்டிருந் தனர். அங்கு நிலவிய ஒரு பயங்கரமான சூழலை ஏற்படுத்தி இருந்தது.

எல்லாரையும் போலவே அரிகோவும் அந்தப் பெண்ணின் அருகே சென்று தலை கவிழ்ந்து பிரார்த்தனை செய்யத் தொடங்கினார்.

அப்போது ஒரு அதிசய உணர்வலைகள் அவருள் தோன்றியது. அதனை அவரால் தெள்ளத் தெளிவாகவே உணரவும் முடிந்தது. தலைக்குள் ஆரம்பித்த அந்த உணர்ச்சி பரபரப்பு அப்படியே உடம்பு முழுவதும் ஜிவ்வென்று பரவி பாதத்தை வந்தடைந்தது. உடல் வெடவெடவென நடுங்க ஆரம்பித்தது. கண்கள் ஏதோ ஒரு வெண் திரையால் மறைக்கப்பட்டது போல இருந்தது.

இப்போது அரிகோவின் முகம் பார்ப்பதற்கே என்னவோ போல் உருவமாற்றம் பெற்றிருந்தது. அந்தக் கண்களில் ஒரு தீர்க்கமும், வேகமும் தெரிந்தது. ஜெபம் செய்வதை சட்டென்று நிறுத்திய அரிகோ விறுவிறுவென்று அந்த வீட்டின் சமையலறை நோக்கி நடந்தார். அங்கு காய்கறி களை வெட்டுவதற்காக வைத்திருந்த கத்தியை எடுத்தபடி மீண்டும் அந்த பெண்ணை நோக்கி வந்தார்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த மற்றவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அரிகோவின் மனை விக்கும் இது விசித்திரமாகவும், திடுக்கிடலாகவும் இருந்தது.

''எல்லாரும் ஒதுங்கி நில்லுங் கள்,'' என்று அந்தப் பகுதி முழு வதும் கேட்கிற மாதிரி அதிகார மாகக் குரல் எழுப்பினார் அரிகோ.

இதைக் கேட்ட அனைவரும் பீதியடைந்தனர். பயந்து நடுங்க ஆரம்பித்தனர்.

உடனே படுக்கையில் கிடந்த அந்தப் பெண்ணின் அருகே குனிந்து அவள் மீது கிடந்த போர்வையை அகற்றி எறிந்தார் அரிகோ. பின்னர் அந்தப் பெண்ணின் ஆடையையும் விலக்கி, தன் கையில் வைத்திருந்த சமையலறைக் கத்தியை கொண்டு வயிற்றை கிழித்தார்.

அரிகோவின் இந்த முரட்டுத்தனமான செய்கையைப் பார்த்து அங்கு நின்றிருந்த அனைவரும் கதிகலங்கிப் போயினர். அவரைத் தடுத்து நிறுத்த முடியவில்லை என்றாலும் பரபரப்பாக மெல்ல கத்தத் தொடங்கினர். ஒரு பெண் இதனைப் பார்க்க சகிக்காமல், அழுது கொண்டு தெருவுக்கே ஓடினாள்.

இத்தனைக்கும் படுக்கையில் கிடந்த அந்தப் பெண்ணோ இவை எதனையுமே உணராதவள் போல பேசாமல் இருந்தாள். வலி பொறுக்க முடியாமல் கத்தவும் இல்லை. ஏன், முகத்தைச் சிறிய அளவு கூட சுருக்கவும் இல்லை.

அரிகோவோ தனது செயலில் தீவிரமாக இருந்தார். நன்றாக குடைந்து, முடிந்த பிறகு கத்தியை உருவி வெளியே எடுத்தார். பின்னர் அவரது கையை உள்ளே விட்டு முரட்டுத்தனமாக ஏதோ துழாவினார். அடுத்த ஓரிரு விநாடிகளில் அந்த அதிசயம் நடந்தது.

அவர் கையில் மிகப்பெரிய புற்று நோய்க்கட்டி! ரத்தம் சொட்டச் சொட்ட பிய்த்து எடுக்கப்பட்ட நிலையில் காணப்பட்டது. அதை சமையலறை சாக்கடையில் எறிந்தார். பின்னர் அங்கிருந்த நாற்காலியில் சோர்ந்து போய் அப்படியே உட்கார்ந்து விட்டார். அப்படியே தேம்பித் தேம்பி அழத் தொடங்கினார். அனைவரும் அவரை வியப்பு சற்றும் விலகாமல், அதிர்ச்சியோடு பார்த்தனர்.

புற்றுநோய் கட்டியை எடுத்த போது சிறிதாகச் சிந்திய ரத்தத்தைத் தவிர வேறு ரத்தமே வர வில்லை. படுக்கையில் கிடந்த அந்தப் பெண்ணும் வலியே இல்லாமல் கிடந்தாள். இவை அனைத் துமே சில விநாடி நேரத்தில் முடிந்து விட்டது.

ஆனால், இதனைப் பார்த்துக் கொண்டிருந்த அந்த பெண்ணின் ஒரு உறவுக்காரப் பையன் ஒருவன் பயந்து போய் மருத்துவரை அழைத்து வந்தான்.

மருத்துவர் அந்தப் பெண்ணைத் தீவிரமாகப் பரிசோதித்தார். ரத்தப் பெருக்கு ஏதேனும் ஏற்பட்டதா என்று பார்த்தார். ஒரு துளி ரத்தம் கூட அநாவசியமாகச் சிந்தவில்லை. அந்தப் பெண்ணின் நாடியைப் பார்த்தார். நன்றாக இருந்தது. அதே நேரத்தில் அந்தப் பெண்ணும் சுய நினைவுடனே இருந்தாள். ஆனால், தனக்கு என்ன நடந்தது என்பது மட்டும் அவளுக்குத் தெரியவில்லை.

மருத்துவருக்கு ஆச்சரியமாக இருந்தது. அரிகோவை சிறிது நேரம் உற்றுப் பார்த்தார். அவரோ தன் நினைவிற்கு இன்னமும் திரும்பாமல் இருந்தார். அவரது மனைவி அர்லடே அவரருகில் தேம்பிக் கொண்டிருந்தார்.

பின்னர் சமையலறை சாக்கடைக்குள் கிடந்த சதைப் பிண்டத்தை எடுத்துப் பரிசோதித்துப் பார்த்தார் மருத்துவர்.

-2 தொடரும்...

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us