PUBLISHED ON : ஜூலை 31, 2015

தீட்டப்படாத பழுப்பு அரிசியையும், தீட்டிய வெளேர் அரிசியையும் உற்றுப் பாருங்கள். பழுப்பு அரிசியின் மீது ஒரு விதப் பூச்சு இருப்பதைக் காண்பீர்கள். தானியத்தைப் போர்த்தி இருக்கும் இப் பூச்சுக்கு, 'பிரான்' என்று பெயர். விட்டமின் பி சத்தும் உப்புக்களும் நிறைந்தது இந்தப் பூச்சு. நம் உடல் ஆரோக்கியத்துக்கு அத்யாவசியமானவை.
நெல், கோதுமை இவற்றைத் தீட்டுவதினால் ஊட்டச்சத்து நிறைந்த மேல் பூச்சு அகற்றப்படுகிறது. சக்தியில்லாத வெறும் சக்கையையே நாம் சாப்பிடுகிறோம். பாலிஷ் செய்த அரிசி பார்வைக்கு அழகாகவும், சேமித்து வைக்க வசதியாகவும் இருக்கிறது. பிரான் என்னும் பூச்சை அகற்றுவதற்கான காரணம், பார்வைக்கு அழகோடு, பூச்சிகளின் தாக்குதலிலிருந்து காப்பாற்றுவதற்காகவும்தான். பழுப்பு அரிசி, கோதுமையை சேமித்து வைத்தால் வண்டுகள், பூச்சிகள் அவற்றைத் தாக்கும். நம்மை விட அவைகளுக்குத் தெரியும் நல்லது எது என்று!
