தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/கட்டுரை - இலையுதிர் காலத்தில் இலைகள் உதிர்வதேன் ?

கட்டுரை - இலையுதிர் காலத்தில் இலைகள் உதிர்வதேன் ?

கட்டுரை - இலையுதிர் காலத்தில் இலைகள் உதிர்வதேன் ?


PUBLISHED ON : ஜூலை 09, 2010

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 09, 2010


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடுமையான குளிர் வாட்டும் காலங்களில் தங்களிடம் உள்ள தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து கொள்ள மரங்கள் மேற்கொள்ளும் ஒரு வழிதான் இலைகளை உதிர்த்தலாகும். இலைகள் இழக்கும் அல்லது உதிர்க்கும் மரங்களின் இலைகள் மெல்லியதாக இருக்கும். ஒப்பிடுகையில் என்றென்றும் பசுமையான இலைகளுடன் காட்சி தரும் மர இலைகளைவிட மெல்லியதான இலைகளை, இலை உதிர்க்கும் மரங்கள் கொண்டிருக்கும். இந்த மெல்லிய இலைகள் சுவாசித்தலின்போது என்றும் இலைகளுடன் விளங்கும் மரங்களின் தடிமனான இலைகளைவிட அதிகப்படியான தண்ணீரை செலவு செய்கிறது.



குளிர் காலத்தில், வேர்களின் நடவடிக்கைகள் குறைவதால், தண்ணீரை வேர்கள் மூலம் பெறுவதும் குறைகிறது. தண்ணீர் இழப்பை மேலும் மட்டுப்படுத்த மரம் இலைகளை உதிர்க்கிறது. இலைகளை உதிர்ப்பதன் மூலம், மரம் தன்னில் உள்ள வேண்டாத மற்றும் நச்சான பொருட்களையும் வெளியேற்றுகிறது. மரத்தில் இதுபோல சேர்ந்த கால்ஷியம் மற்றும் சிலிக்கான் வெயில் காலத்தில் வெளியேற்றப்படுகிறது.

"பாப்லர்' மரத்தின் இலைகள் தட்டையான காம்புகளை கொண்டிருப் பதால் அவை எளிதாக சிறகடிக்க முடிகிறது. பாப்லர் மரம் என்பது ஒரு வகை நெட்டிலிங்க மரமாகும். இது மூச்சுவிடுவதற்கு பெரிதும் உதவுவதோடு, இம்மரத்தை ஈர நிலத்திலும் வளர ஏற்றதாக செய்கிறது. பாப்லர் என்ற வார்த்தைக்கும் "ஆட்டு' என்ற பொருள் படும் கிரேக்க "பாப்பாய்லோ' வார்த்தைக்கும் தொடர்புண்டு.



* இலை நீக்கும் இயக்கவியல்



அதிக குளிரும், குறைந்த பகலின் நேரமும் கொண்டது இலையுதிர் காலம். இந்த காலத்தின் நிலையால் தண்ணீர் மற்றும் சத்துக்கள் வரத்து தடுக்கப்படுகிறது. அதோடு இலைகளின் செயல்பாடும் தடுக்கப்படுகிறது. உடனே மிருதுவான செல்கள் காம்பின் அடியில் உருவாகத் தொடங்கும். இந்த மிருதுவான செல்களால் உருவான அடுக்கில் "பெக்டின்' என்ற பெயரில் பொருள்களில் மாற்றம் உண்டாக்கும் வேதியியல் பொருள் உருவாகிறது. இந்த பெக்டின் காம்பின் செல் சுவர்களை மூழ்கடித்து, அதன் மூலம் இலை காம்பிலிருந்து பிரியும்படி செய்கிறது. இலை விழும்போது, ஒரு மரப்பட்டை அடுக்கு உடனே அந்த இலைக்காம்பு பிரிந்த இடத்தில் தோன்றி, பாதிக்கப்பட்ட அந்த இடத்தை பாதுகாக்கிறது.



* எல்லா மரங்களும் இலையுதிர்ப்பதில்லை



சில இலையுதிர்க்கும் மரங்கள் குளிர் காலத்தில் தங்கள் இலைகளை உதிர்ப்பதில்லை. மடிந்த ஓக் மர இலை கள் ஒரு உதாரணத்திற்கு எடுத்துக் கொண்டால், குளிர்காலம் முழுவதும் கிளைகளிலேயே இருக்கும். வசந்த காலத்தில், புதிதாய் முளைக்கும் மொட்டுக்கள் பழைய ஓக் இலைகளை மரத்திலிருந்து வெளி தள்ளும். உண்ண பயன்படும் கொட்டைகளை கொண்ட செஸ்ட்நட் என்ற இலை யுதிர்கால மரமும், குளிர் காலத்தில் இலைகளுடனேயே இருக்கும். தென் சீதோஷ்ண நிலையில் வளரும் சில வகை புங்க மரங்கள், இலைகளை பிரிக்கும் அமைப்பை உருவாக்க முடியாததால், இலைகளை வெளி ஏற்றுவது அவ்வளவு எளிதாக நடைபெற முடிவதில்லை.



* இலையுதிர்க்காத பசுமை மரம், இலைகளை கழிப்பது எப்படி?



வருடம் முழுவதும் இலைகளுடன் இருக்கும் மரங்கள், பசுமை மரங்கள் எனப்படும். ஆனால், ஒரே இலைகளை வருடத்திற்கு வருடம் வைத்தி ருக்கும் என்று பொருளல்ல. இலையுதிர்கால மரம் அந்த காலத்தில் தன் இலைகள் முழுவதையும் இழந்துவிடும். ஆனால், பசுமை மரங்களிலோ இலைகள் உதிர்வதும், வளர்வதும் வருடம் முழுவதுமான தொடர் நிகழ்ச்சி.  சராசரியாக பசுமை மரங்களின் இலைகள் 3 - 4 வருடங்கள் வாழும். ஆனாலும் இந்த வாழும் காலம் தாவர இனங்களில் மாறுபட்டே இருக்கும். பைன் மர வகை இலைகள் 9 ஆண்டுகள் வரை உயிர் வாழும். ஆனால், ரோஹோடென்டிரான் இலைகளில் வாழும் காலமோ 6 மாதங்கள்தான்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us