தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/விண்வெளி ஓட்டல்!

விண்வெளி ஓட்டல்!

விண்வெளி ஓட்டல்!


PUBLISHED ON : ஜூன் 27, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 27, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அறிவியலின் அதிவேக வளர்ச்சி காரணமாக அடுத்த தலைமுறையினர் சுற்றுலா சென்றால் நிலவு, செவ்வாய் என்று வேற்றுக் கிரகத்திற்குத்தான் செல்வார்கள் என்று நம்பலாம்.

தற்போது சுமார் 100 கோடி ரூபாய் கொடுத்தால் விண்வெளி சுற்றுலா செல்ல முடியும். அமெரிக்கா மற்றும் ரஷ்யா அனுப்பும் விண்கலனில் பயணம் செய்து விண்வெளியில் சுற்றும் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்று தங்கி வரலாம்.

இவர்களைப் போன்ற பயணிகளுக்கு உற்சாகம் ஊட்டும் வகையில் விண்வெளியில் ஓர் ஓட்டல் கட்ட இருக்கின்றனர். லண்டனைச் சேர்ந்த இம்பீரியல் கல்லூரி மற்றும் ராயல் கல்லூரியில் இன்னோவேசன் டிசைன் இன்ஜினியரிங் (புதுவை வடிவமைப்புப் பொறியியல்) முதுகலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள் இதற்கான திட்டத்தில் இறங்கி உள்ளனர்.

இவர்களுக்கு நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி மையத்தில் பணியாற்றிய விஞ்ஞானி டேனியல் பெட்டினி வழிகாட்டியாகச் செயல்பட்டு வருகிறார்.

இந்த விண்வெளி ஓட்டல் பூமியில் இருந்து 100 மைல் உயரத்தில் நிறுவப்பட உள்ளது. ஓட்டலுக்கான ஒரு பகுதி திட்டங்களை மாணவர்கள் முடித்து விட்டனர். அறைகள் மற்றும் ஓட்டலின் முழு வடிவத்தை கம்ப்யூட்டரின் உதவியுடன் வடிவமைத்து இருக்கின்றனர்.

இந்த ஓட்டலில் சுற்றுலாப் பயணிகளுக்கான பல சிறப்பு வசதிகளை மாணவர்களே வடிவமைத்து உள்ளனர். விண்வெளி ஈர்ப்பு விசையும், புவியில் உள்ள ஈர்ப்பு விசையும் ஒன்றுபோல் இருக்காது. எனவே, இந்த விண்வெளி ஓட்டலில் பூமியில் இருப்பது போன்று தங்கும் அளவுக்கு புவி ஈர்ப்பு வசதி தொடர்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us