தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/26 வயதிலேயே...

26 வயதிலேயே...

26 வயதிலேயே...


PUBLISHED ON : ஜூன் 07, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 07, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

என் வயது, 64; கோவை, மாதர் சங்க கல்வி நிலையத்தில், 1968ல், 10ம் வகுப்பு படித்தேன். நன்கு படிப்பேன்; எஸ்.எஸ்.எல்.சி., தேர்ச்சி பெற்று, விடுமுறையிலேயே, எனக்கு திருமணம் செய்தனர்.

'படிப்பை தொடர முடியவில்லையே...' என்ற, மன வேதனை ஏற்பட்டது.

என் கணவர் அரசு பதவியில், உயர் அதிகாரியாக இருந்தார். அடுத்தடுத்து, இரண்டு பெண்கள், கடைகுட்டி பையன். என வாழ்க்கை அவ்வளவு இனிமையாக சென்றது.

ஒரு நாள், திடீரென்று மாரடைப்பு வந்து, ஒரு நொடியில் என் கணவரை, இழந்தேன். 26 வயதிலேயே, தனி மரமானேன்.

கணவரின் நண்பர்கள், 'நீ நன்கு படிப்பாய்... பிளஸ் 2 பிரைவேட்டாக படி; கருணையின் அடிப்படையில் வேலை கிடைக்கும்...' என்றனர்.

பிளஸ் 2 தேர்வு எழுதி, தேர்ச்சி பெற்று, துறை தேர்வு அனைத்தும், எழுதி, வெற்றி பெற்றேன். உடனே, வேலை கிடைத்தது; காலம் ஓடியது.

என், இரண்டு மகள்களை நன்கு படிக்க வைத்து, உயர் பதவியில் இருந்த மாப்பிள்ளைகளுக்கு, திருமணம் செய்து வைத்தேன்.

மகன், இன்று, கோவையில் பெரிய மருத்துவர்; மருமகள், பேத்தி, பேத்தியின் கணவரும் மருத்துவர்.

'விதவையாகி விட்டேனே...' என்று முடங்கி இருந்தால், என் குடும்பம், இன்று இந்த நிலையை அடைந்திருக்க முடியுமா... பெண்களுக்கு கல்வி மிகமிக அவசியம்!

- எம்.தனபாக்கியம், கோவை.

தொடர்புக்கு: 80566 96030


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us