தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/'பிட் நோட்டீஸ்' நோட்டு!

'பிட் நோட்டீஸ்' நோட்டு!

'பிட் நோட்டீஸ்' நோட்டு!


PUBLISHED ON : ஜூன் 07, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 07, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

என் வயது, 84; மதுரை, பசுமலை உயர்நிலைப் பள்ளியில், 1951ல், எஸ்.எஸ்.எல்.சி., படித்துக் கொண்டிருந்தேன். அப்போது, லார்பியர் என்ற கிறிஸ்துவ மிஷினரி எங்கள் பள்ளியின் சேர்மேனாக இருந்தார்.

ஒரு நாள், நன்னெறி பாடம் நடத்திக் கொண்டிருந்த போது, ஒரு மாணவன், 'பிட் நோட்டீஸ்'களை, நோட்டு புத்தகமாக தைத்து, அதில் குறிப்பெடுத்து கொண்டிருந்தான்.

லார்பியர் விசாரித்த போது, மதுரை சித்திரை திருவிழாவில், தான் சேகரித்த, 'பிட் நோட்டீஸ்'கள், அவையென்றும், 'வெற்றுப் பக்கங்களை வீணடிப்பானேன்...' என்று, அவற்றை தைத்து குறிப்பேடாக பயன்படுத்துவதாக கூறினான்.

மறுநாள், பிரார்த்தனை கூட்டத்தில் அந்த மாணவனை அழைத்து, முன்னிறுத்தி, 'பிட் - நோட்டீஸ்' புத்தகத்தை உயர்த்தி காட்டினார்.

'பயன்படுத்தக் கூடிய பொருட்களை வீணடிக்காமல் பயன்படுத்த வேண்டும்...' என்று, மாணவர்களுக்கு அறிவுரை கூறி, அந்த மாணவனைப் பாராட்டி, அந்த காலத்தில் பெயர் பெற்ற, 'பிளாக் பேர்ட்' என்ற பேனாவை, அன்பளிப்பாக அளித்தார் லார்பியர்.

பள்ளிப் படிப்பு, முடிந்து, 45 ஆண்டுகளுக்குப் பின், பள்ளியின், 150ம் ஆண்டு விழாவில், பழைய மாணவர்கள் பலர் பங்கேற்றோம்.

அப்போது, 'கோட் - சூட்'டுடன் ஒருவர் மேடையேறினார். மதுரை, திருமங்கலத்தில் பிறந்து, கர்நாடக மாநிலம், பத்ராவதி நகரில், பெரும் தொழிலதிபராக திகழ்ந்தார்.

பாக்கெட்டியிலிருந்து, கலை நயம் மிக்க, ஒரு பேழையை எடுத்து, அதில், தான் பத்திரமாகப் பாதுகாத்து வரும் பேனாவை காட்டி, 'பிட் நோட்டீஸ்' நோட்டு புத்தகத்திற்காக, தன்னைப் பெருமைப்படுத்தி, லார்பியர் பரிசளித்ததை, கண்ணீர் மல்க கூறினார். அனைவரும் அப்படியே அதிர்ச்சியில் உறைந்து, நெகிழ்ந்தும் போனோம்; அந்தச் சிக்கனம் நண்பனை எந்த அளவிற்கு உயர்த்தியுள்ளது என்பதை அறிந்து வியந்தோம்!

- க.ராமையா, மதுரை.

தொடர்புக்கு: 99948 71016


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us