sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

சிறுவர் மலர்

/

அதிமேதாவி அங்குராசு! - சூரியன் மறையாத 10 இடங்கள்!

/

அதிமேதாவி அங்குராசு! - சூரியன் மறையாத 10 இடங்கள்!

அதிமேதாவி அங்குராசு! - சூரியன் மறையாத 10 இடங்கள்!

அதிமேதாவி அங்குராசு! - சூரியன் மறையாத 10 இடங்கள்!


PUBLISHED ON : பிப் 25, 2023

Google News

PUBLISHED ON : பிப் 25, 2023


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உலகில், விசித்திர இடங்கள் பல உள்ளன. நாள் முழுதும் சூரியன் மறையாத இடங்கள் பல உண்டு. தொடர்ந்து, பல நாள் சூரியன் உதிக்காத பகுதிகளும் உள்ளன. இது பற்றி பார்ப்போம்...

ஹேமர்பெஸ்ட்

ஐரோப்பிய நாடான நார்வேயில் உள்ள நகரம் இது. மிக பழைமையானது. இங்கு, 8,000 பேர் வசிக்கின்றனர்.

நள்ளிரவு, 12:43 மணிக்கு சூரியன் மறைந்து, 40 நிமிட இடைவெளியில், மீண்டும் உதிக்கும். இந்த பகுதி ஆர்க்டிக் வட்டத்திற்குள் உள்ளது. மே முதல் ஜூலை வரை, 76 நாட்கள், இங்கு சூரியன் மறைவதில்லை.

இதை, யுனெஸ்கோ நிறுவனம் உலக பாரம்பரிய இடமாக அறிவித்துள்ளது.

ஐஸ்லாந்து

பிரிட்டனுக்கு அடுத்தபடியாக, ஐரோப்பாவின் மிகப்பெரிய தீவு இது. கொசுக்கள் இல்லாத நாடு என பெயர் பெற்றது. கோடைக்காலத்தில் இரவு தெளிவாக இருக்கும். ஜூன் மாதத்தில், சூரியன் மறைவதில்லை.

ஆர்க்டிக் வட்டத்தில் உள்ள கிரிம்சே தீவு மற்றும் அகுரேரி நகரத்தில் நள்ளிரவிலும் சூரியனை பார்க்கலாம்.

கிருனா

ஐரோப்பிய நாடான ஸ்வீடன் வடக்கு பகுதியில் உள்ள நகரம். இங்கு, 19 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். மே முதல் ஆகஸ்ட் வரை, 100 நாட்கள் சூரியன் மறைவதில்லை. இங்குள்ள ஆர்ட் நோவியோ தேவாலயம் கட்டடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டு.

நுனாவுட்

பூமியின் வட துருவமான ஆர்க்டிக் வட்டத்தில் அமைந்துள்ளது. வட அமெரிக்க நாடான கனடாவின் வடமேற்கு பிரதேசம் இது. இங்கு, 3,000 பேர் வசிக்கின்றனர். குளிர்காலத்தில் தொடர்ந்து, 30 நாட்கள் இருளாக இருக்கும். கோடை காலத்தில், இரண்டு மாதங்கள் தொடர்ந்து, 24 மணி நேரமும், சூரியன் காட்சியளிக்கும்.

செயின்ட் பீட்டர்ஸ்பர்க்

ஆசிய - ஐரோப்பிய கண்டங்களை உள்ளடக்கிய நாடான ரஷ்யாவில் உள்ளது. இங்கு, 10 லட்சம் பேர் வசிக்கின்றனர். கோடை காலத்தில், மூன்று வாரங்கள், 24 மணி நேரமும் சூரிய ஒளி இருக்கும். ஜூன் நடுப்பகுதி முதல், ஜூலை துவங்கும் வரை, 'வெள்ளை இரவுகள்' என்று அழைக்கப்படும்.

இங்கு புகழ்பெற்ற மரின்ஸ்கி தியேட்டர் உள்ளது. இதில், ஒயிட் நைட் விழா, பாலே நடனம், ஓபரா மற்றும் இசை நிகழ்ச்சிகள் இந்த காலத்தில் நடக்கும்.

ஸ்வால்பார்ட்

துருவ கரடி வாழும் பகுதி இது. ஐரோப்பிய நாடான நார்வேயில் உள்ளது.

இங்கு, ஏப்ரல் நடுப்பகுதி துவங்கி, ஜூலை நடுப்பகுதி வரை, நான்கு மாதங்களுக்கு சூரியன் மறைவதில்லை.

யூகோன்

வட அமெரிக்க நாடான கனடாவில் உள்ளது. நீண்ட நேரம் பனியால் மூடப்பட்டு இருக்கும். கோடையில், 50 நாட்கள் தொடர்ந்து சூரியன் மறைவதில்லை. இது, 'சூரியனின் நிலம்' என்று கூறப்படுகிறது.

பின்லாந்து

ஐரோப்பிய நாடுகளில் ஒன்று. ஆயிரக்கணக்கான ஏரி மற்றும் தீவுகள் நிறைந்தது. மிகவும் அழகானது. கோடைக்காலத்தில் சூரியன், 73 நாட்கள் மறைவதில்லை. கோடையில் குறைவான நேரமும், குளிர்காலத்தில் அதிக நேரமும் மக்கள் துாங்குவர்.

கானாக்

ஐரோப்பிய நாடான கிரீன்லாந்தின் வடக்கில் உள்ளது. இங்கு, 650க்கும் குறைவான மக்களே வசிக்கின்றனர். நள்ளிரவு வரை சூரியன் இரண்டரை மாதங்கள் நீடிக்கும். கருப்பு திரைச்சீலைகளால் அறையை மறைத்து துாங்குவர் மக்கள். குளிர்காலம் மிக நீண்டது. மிகவும் குளிர்ச்சியாக இருக்கும்.

பாரோ

இது, வட அமெரிக்கா, அலாஸ்காவில் உள்ளது. உட்கியாகவிக் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு, 4,500 பேர் வசிக்கின்றனர். மே இறுதி துவங்கி, ஜூலை வரை சூரியன் மறைவதில்லை. ஆனால், நவம்பர் துவங்கி, 30 நாட்களுக்கு சூரியன் உதிக்காது. இது, 'துருவ இரவு' என்று அழைக்கப்படுகிறது.

- என்றென்றும் அன்புடன், அங்குராசு.






      Dinamalar
      Follow us