தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!


PUBLISHED ON : அக் 12, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 12, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!

உங்களுக்கு நஞ்சு... எங்களுக்கு பஞ்சு...!

பூச்சிகள் நம்மை சுற்றி எங்கும் உள்ளன. நம்முடைய வீட்டில் வசித்து கொண்டு நமது உடலையும், உடையையும் துளைக்கின்றன; ஆயுளையே அழிக்கின்றன. பூமியில் பூச்சிகள் இல்லாத இடமே கிடையாது. ஆழமான குகைகளிலும் அவை காணப்படுகின்றன. சுமார் 40 பூச்சியினங்கள், பனிகட்டி பிரதேசமான தென் துருவத்தில் வசிக்கின்றன.

உதாரணமாக, தேனீக்கள், வண்டுகள், விட்டில் பூச்சிகள், வண்ணத்துப் பூச்சிகள் ஆகியவை விறைத்து போன நிலையிலும் உயிர் வாழ்கின்றன.

விலங்குகளின் உடலை துளைத்து அவற்றின் இறைச்சியை உண்ணும் பூச்சிகளும் உள்ளன. கொடுமையான பாலைவனங்களிலும், நீர் பெருக்கம் உள்ள ஆறுகளிலும், நடுக்கடலின் நீர்மட்டத்திலும் பூச்சிகள் உல்லாசமாக வாழ்கின்றன. பாறைகளின் பிளவுகளிலும், 20 ஆயிரம் அடி உயரம் உள்ள மலைச்சிகரங்களிலும் கூட பூச்சிகள் வாழ்கின்றன.

பூச்சிகள் கொடிய வெப்பநிலையையும், கடுமையான தட்பவெப்பநிலையையும் பொருட்படுத்துவதில்லை.

மனிதன் ஓர் இடத்திலிருந்து காற்றை அகற்றி அதை வெற்றிடமாக்கினாலும் அங்கும் பூச்சிகளால் வாழ முடியும்.

சில ஈக்கள் முற்றிலும் உப்பிலேயே வாழ்கின்றன. அவற்றின் சில இனங்கள், 'பெட்ரோல் ஈக்கள்' எனப்படுகின்றன. அவை, அமெரிக்காவின் வட கலிபோர்னியாவில் உள்ள பெட்ரோல் ஊற்றுகளின் அருகில் உள்ள கழிவு எண்ணெய் குட்டைகளில் வசிக்கின்றன. மனிதனுக்கும், மற்ற உயிரினங்களுக்கும் நஞ்சாக உள்ள கரியமில வாயுவில் அந்த பூச்சிகள் மணிக்கணக்கில் வாழ்கின்றன. சில பூச்சிகள் தண்ணீர் இல்லாத இடங்களில் தாமே தண்ணீரை உற்பத்தி செய்து கொண்டு வாழ்கின்றன. அவை தமது உடலில் உள்ள மாவு சத்து எரிபொருளை எரித்து தமக்கு வேண்டிய தண்ணீரை பெறுகின்றன.

பூச்சியினங்கள் பொதுவாக மனித குலத்துக்கு தீங்கு விளைவித்தாலும், நன்மை செய்யும் பூச்சிகளும் இருக் கின்றன என்பது ஆறுதல் அளிக்கும் விஷயம்!

அம்மா! ப்ளீஸ் செஞ்சுதாங்கம்மா!

இது 'நாண்' செய்முறை நேரம்.

தேவையான பொருட்கள்: மைதா -1/2 கிலோ, புளிப்பில்லாத தயிர்-1/2 கப், வெதுவெதுப்பான பால்-1/4 கப், ஈஸ்ட், சர்க்கரை, உப்பு-ஆகியன தலா 1/2 டீஸ்பூன். பேக்கிங் பவுடர்-3/4 டீஸ்பூன், உருக்கிய வெண்ணெய்-3 டீஸ்பூன்

செய்முறை: மைதா, உப்பு, பேக்கிங் பவுடர், சேர்த்து நன்றாக சலித்து ஒரு அகலமான பாத்திரத்தில் போடவும். ஈஸ்ட்டை வெதுவெதுப்பான பாலில் கலந்து 5 நிமிடத்திற்கு பின் மாவில் சேர்க்கவும். கூடவே தயிர், சர்க்கரை, உருக்கிய வெண்ணெய் சேர்த்து மாவை நன்றாக கலந்து, சுடுதண்ணீர் தேவைப்பட்டால் சிறிது தெளித்து பிசையவும். பெரிய பாத்திரத்தில் பிசைந்த மாவை மெல்லிய ஈரத்துணி போட்டு மூடவும். 6 மணி நேரத்திற்கு பின் பார்த்தால் மாவு பொங்கியிருக்கும். இந்த மாவிலிருந்து பெரிய உருண்டைகளாக எடுத்து தடிமனாக உருட்டி ஒரு நுனியை கையால் இழுத்து பூசணிபத்தை ஷேப் வருமாறு இடவும்.

பிறகு இதன் மேல் சிறிது தண்ணீர் தெளித்து சூடான பேன் அல்லது பிடியுள்ள அலுமினிய பாத்திரத்தில் தண்ணீர் தடவிய பக்கம் ஒட்டும்படி போடவும். மிதமான அனலில் வேகவிடவும். மேலே மூடி வைக்கவும். சிறிது நேரத்திற்குப்பின் பார்த்தால், 'நாண்' உப்பி வந்திருக்கும்.

பாத்திரத்தில் பிடியை பிடித்து தலைகீழாக திருப்பி அனலில் காட்டி மற்ற பக்கமும் சிவந்த உடன் எடுக்கவும்.

பைவ் ஸ்டார் ஓட்டலில் மட்டுமல்ல நம் பைவ் ஸ்டார் வீட்டிலும் 'நாண்' நான் சொல்றேன் நிச்சயம் நல்லா இருக்கும்!

நான் ரொம்ப ஸ்மால்!

உலகிலேயே மிகச் சிறிய பறவை கியூபா நாட்டில் உள்ளது. 'மெல்லிஸிகா ஹெலனே' என்ற சிங்கார தேன் சிட்டுதான் அது. அப்பறவையின் எடை வெறும் 2 கிராம்தான். நீளம், பறவையின் அலகிலிருந்து வாலின் நுனி வரை 2 அங்குலம். இந்த இனத்தில் பெண் பறவையை விட ஆண் பறவை கால் அங்குலம் சிறியது. இந்த கணக்குப்படி பார்த்தால் உலகின் மிகச் சிறிய பறவை மெல்லிசிகா ஹெலனே ஆண் பறவைதான். இது வேகமாக இறக்கைகளை அடித்து கொள்ளும் தன்மை கொண்டது. ஒரு நொடிக்கு 80 தடவைகள் இது இறக்கையை அடிக்கும். அப்போது 'விர்ர்ர்' என்ற மெல்லிய சத்தம் மட்டும் கேட்கும். ஆண் பறவையும், பெண் பறவையும் எப்போதும் தனித்தனியாகவே பறக்கும்.

அபூர்வமாய் சில நொடிகளில் சந்திக்கும் இந்த நேரத்தை தவிர மற்ற நேரங்களில் ஒன்றை ஒன்று கண்டுகொள்ளாது. இந்த பறவைகள், சிலந்தியின் வலையை கொண்டு மரக்கிளையில் சிறியதாக கூடுகளை பின்னி கொள்ளும். அவை, சின்ன குழந்தைகள் வைத்து விளையாடும் சிறிய சொப்பு பொருட்கள் அளவுதான் இருக்கும். இந்த பறவை எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பதால் இவற்றுக்கு அடிக்கடி உணவு தேவைப்படும், மிகச்சிறிய சிலந்திகளும், ஈக்களும்தான் இதன் குட்டியூண்டு வவுத்துக்கு உணவு. ஆனால், இதற்கு மிகவும் பிடித்த உணவு தேன்தான். எனவே, இவை மலர்களை தேடி எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் சளைக்காமல் பறக்கும். இவ்வளவு அதிசயமாக திகழும் இந்த சிறிய பறவையின் எண்ணிக்கை கியூபா நாட்டிலும் குறைந்து வருகிறது. இவற்றின் இனத்தை காக்க அங்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

என்றும் அன்புடன்,

அங்குராசு.


***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us