தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!


PUBLISHED ON : பிப் 15, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 15, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!

கலாம் காலம்!







பள்ளி நாட்களில் அண்ணாவின் மேடைப் பேச்சுக்கு அப்துல்கலாம் அடிமை. பள்ளியில் மாணவர் தலைவராக இருந்த கலாம், அப்போதே அண்ணாவை தன் பள்ளி ஆண்டு விழாவுக்கு பேச அழைத்து, அதில் வெற்றியும் கண்டவர்!

தம்மாத்தூண்டு ஸ்டாம்ப் எம்மாம் துட்டு!



ஸ்டாம்ப் கலெக்ஷன்: கிரிக்கெட், செஸ், மீன் வளர்ப்பு, செடி வளர்ப்பு மாதிரி இதுவும் ஒரு பொழுதுபோக்கு என்று நினைக்க வேண்டாம். ஹாபி என்பதை தாண்டி, உலக அளவில் ஒரு 'காஸ்ட்லி' பிசினஸாகவும் இது விளங்குகிறது.

இது வருமானமுள்ள பொழுதுபோக்காகும். இதற்கு சங்கங்களும், கண்காட்சியும் உலகெங்கும் உள்ளது.

ஸ்டாம்ப் கலெக்ஷன்ல இரண்டு வகை இருக்கு. ஒன்று, பொழுதுபோக்காக சேகரிக்கிறது. மற்றது, முதலீட்டுக்காக சேகரிக்கிறது. இன்னிக்கு உலகம் பூராவும் சில ஸ்டாம்ப்களை மட்டும் ரொம்ப அரிய வகைன்னு சொல்றாங்க. அந்த அரிய வகைகளுக்கு உலக மார்க்கெட்லயும் விலை எகிறிகிட்டே போகும்.

அந்த ஸ்டாம்ப்களை தேடி பிடிச்சு சேகரிச்சு விக்கிறதுதான் ஸ்டாம்ப் கலெக்ஷன் தொழில்.

'மொரீஷியஸ் போஸ்ட் ஆபீஸ் ஸ்டாம்ப்'னு சொல்லப்படுகிறது. உலகத்திலேயே காஸ்ட்லியானது; இதோட மதிப்பு மூன்றரை கோடி ரூபாய்னு சொல்றாங்க. இந்த ஸ்டாம்ப்ல என்ன விசேஷம்னா, 'போஸ்டேஜ்'னு இருக்க வேண்டிய ஒரு வார்த்தை, 'போஸ்ட் ஆபீஸ்'னு தவறுதலா பிரிண்ட் ஆயிடுச்சு. இதை கண்டுபிடிச்சு, உடனேயே இந்த ஸ்டாம்ப் அச்சடிக்கறதை நிறுத்திட்டாங்க. ஆனா, அதுக்குள்ள சில ஸ்டாம்ப்ஸ் வெளியாகி, மக்கள் கிட்ட புழக்கத்துக்கு வந்துடுச்சு.

அந்த சில ஸ்டாம்ப்களுக்குத்தான் இந்த மரியாதை. அதே மாதிரி, விக்டோரியா மகாராணியோட தலையோட இருக்கும், 'பிளாக் பென்னி'ங்கற ஸ்டாம்பும் ரொம்ப ஸ்பெஷல். உலகின் முதல் அச்சடிக்கப்பட்ட தபால் தலைன்னு இதை சொல்லலாம்.

1840ம் ஆண்டு இங்கிலாந்துல பிரிண்ட் ஆன இந்த ஸ்டாம்புக்கு இப்போதைய மார்க்கெட் மதிப்பு 50 ஆயிரம் ரூபாய். அடுத்து நம்ம இந்தியாவிலேயே பிரிட்டிஷ்காரங்க பிரிண்ட் பண்ணின விக்டோரியா மகாராணி உருவம் பொறித்த ஸ்டாம்ப்.

1854ல் அச்சடிக்கப்பட்ட இந்த ஸ்டாம்ப் அரையணா, ஒரணா, ரெண்டணா, நாலணானு நாலு வித மதிப்புல வெளியாச்சு. ஆனா, இதுல நாலணா மதிப்புள்ள ஸ்டாம்பைத்தான் உலகம் பொக்கிஷமா பார்க்குது. ஏன்னா, இதுல விக்டோரியாவின் உருவம் தவறுதலா தலைகீழா பிரிண்ட் ஆயிடுச்சு. இதனாலேயே இதோட மதிப்பு எழுபது லட்சமாயிடுச்சு.

இந்திய தபால் தலைக்கு உலக அளவில் இருக்கும் மதிப்பு அலாதியானது. 1948ல் மகாத்மா காந்தியோட உருவம் பதிச்ச ஸ்டாம்ப் வெளியாச்சு. ஒன்றரை அணா, மூன்றரை அணா, பன்னிரெண்டு அணா, பத்து ரூபாய்னு பல மதிப்புல இது வெளிவந்துச்சு. ஆனா, இதுல ஒரு சிலவற்றில் மட்டும் காந்தி படத்துக்கு கீழே, 'சர்வீஸ்' னு ஒரு வார்த்தை அச்சாயிருக்கும். இந்த சர்வீஸ் ஸ்டாம்ப்களை கவர்னர் ஜெனரல் மட்டும்தான் பயன்படுத்த முடியும்.

அப்போ கவர்னர் ஜெனரலா இருந்த ராஜாஜிதான் இதை பயன்படுத்தினார்.

இப்ப இந்த ஸ்டாம்ப்கள் எல்லாமே காஸ்ட்லிதான். பத்து ரூபாய் ஸ்டாம்ப் மட்டும் ரொம்ப ரொம்ப காஸ்ட்லி. ரூ.25 லட்சம்!

வெளிநாடுகளில் இந்த மாதிரி அரிதான ஸ்டாம்ப்களை ஏலம் விடுற ஏஜென்ஸிகள் நிறைய இருக்கு. ஒவ்வொரு அரிய ஸ்டாம்பையும் அதோட இப்போதைய மார்க்கெட் மதிப்பையும் அவங்களே கேட்லாக் புத்தமாக வெளியிடுறாங்க.

இதனால வாங்குறவங்க, விக்கிறவங்க இரண்டு பேருமே ஸ்டாம்ப்பின் மதிப்பு தெரிஞ்சு கை மாத்திக்க முடியுது.

சில பேருக்கு அவங்ககிட்ட இருக்குற ஸ்டாம்ப்பின் மதிப்பு தெரியாது. அதனால அவங்க அதை விக்கிறபோது ஏமாறலாம். அரிய வகை ஸ்டாம்பா இருந்தா கூட, தாள் பழுப்பு கலர்ல ஆகிட்டாலோ, ஓரத்துல இருக்கிற பற்கள் காணாம போனாலோ, கிழிஞ்சிருந்தாலோ, மதிப்பு குறைவு.

எல்லா ஸ்டாம்ப்களிலேயும் வாட்டர் மார்க்னு ஒரு அடையாளம் இருக்கும். இந்தியாவுல அச்சடிக்கப்பட்ட ஆரம்பகால ஸ்டாம்ப்கள்ல ஸ்டார் வடிவம் இருந்தது. அப்புறம் அசோகரின் தூண் இருந்தது. நல்ல விலை வேணும்னா இதெல்லாம் இருக்கணும். அதே மாதிரி, கவர்ல ஒட்டியிருக்கிற அரிய வகை ஸ்டாம்ப்களுக்கு தனி மதிப்பு உண்டு. யார் அனுப்பிச்சாங்க, யாருக்கு போய் சேர்ந்தது, எங்க இருந்து அனுப்பப்பட்டதுன்னு எக்ஸ்ட்ரா தகவல்களை அது தர்றதுதான் இதுக்கு காரணம்.

இதெல்லாம் தெரியாம ஸ்டாம்ப்ல முதலீடு செய்ய வேணாம். வருங்காலத்தில் டிஸ்ட்ரிக்ட் கலெக்டரை விட பெரிய அந்தஸ்தாகிவிடும் போலிருக்கிறது 'ஸ்டாம்ப் கலெக்டர்' என்ற தகுதி!

உங்க பாட்டி, தாத்தா, சொந்தகாரங்க, நண்பர்கள்னு எல்லாரிடமும் 'ஸ்டாம்ப்' ஸ்டாம்ப்னு' கேட்டு கலெக்ட் பண்ண ஆரம்பிங்க!

அம்மா! ப்ளீஸ் செஞ்சுதாங்கம்மா!



இது 'தேங்காய்பால் சோறு' செய்முறை நேரம்.

தேவையானவை: தேங்காய் ஒன்று, பச்சரிசி ஆழாக்கு, டால்டா, நெய், தலா ஒரு கரண்டி, இஞ்சி பூண்டு, சோம்பு, பட்டை, கிராம்பு, புதினா, கொத்தமல்லி தழை, உப்பு.

செய்முறை: தேங்காயை துருவி அதில் சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்து பால் எடுக்கவும். அரிசியை நன்கு கழுவி வடிகட்டுங்கள். பிறகு சிறிது தண்ணீர் விட்டு ஊற வைக்கவும். இஞ்சி, பூண்டு ஆகியவற்றை தோல் நீக்கி விழுதாக அரைத்து கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து டால்டாவை போடவும். டால்டா உருகி சூடானதும், சோம்பு, பட்டை, கிராம்பு போட்டு தாளிக்கவும். பின்னர் புதினா, மல்லி தழைகளை போடவும். அதன்பிறகு தேங்காய்ப் பாலை ஊற்றி, தேவையான அளவு உப்பு போட்டு மூடிவிடவும். பால் நன்கு கொதித்தவுடன் ஊற வைத்த அரிசியை கொட்டி, நன்கு கிளறி இறக்கிவிடவும். குக்கரில் வைத்தால், இரண்டு விசில் வந்ததும் இறக்கவும்.

சோறு மீது நெய் ஊற்றி, சோறு சிதையாமல் கிளறி கொடுக்கவும்.

இப்போது தேங்காய்ப்பால் சோறு ரெடி. இந்த தேங்காய்ப்பால் சோறுக்கு உருளைக்கிழங்கு வறுவல் தொட்டுகொள்ள சூப்பராக இருக்கும்.

வாங்க தன்னம்பிக்கை பெறலாம்!



நமது நம்பிக்கைகள் வளர்ந்து கம்பீரமான விருட்சமாக நின்றால், இந்த ஆட்டுக் கூட்டம் அதன் நிழலில் ஒதுங்க வரும். குனிந்து பார்த்து கேலி பேசிய மூடர்கள் நிமிர்ந்து பார்த்து, 'தலைவரே' என்பர். இன்று புதிதாய் பிறந்தோம்.... இன்று புதிதாய் பிறந்தோம் என்கிற பாரதியாரின் வேதத்தைப் பலமுறை... பலமுறை... பரவசமாக சொல்லுங்கள்.

என்றும் அன்புடன், அங்குராசு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us