தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/அதிமேதாவி அங்குராசு !

அதிமேதாவி அங்குராசு !

அதிமேதாவி அங்குராசு !


PUBLISHED ON : செப் 10, 2010

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 10, 2010


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அனைவருக்கும் எனது அன்பு.

* கரண்ட் கட்டா அப்படின்னா...?

நம்ம ஊரில் கரெண்ட் என்றால் என்ன என்று கேட்டால், கரெண்ட்னா என்ன என எதிர் கேள்வி கேட்பர். அந்த அளவுக்கு பவர் கட் படுமோசமாய் உள்ளது. கடவுளை கூட காணலாம் போல, கரெண்டை காண, உணர முடியாத வண்ணம் கரெண்ட் கட் தமிழ்நாட்டில் உள்ளது.

சரி நம்ம திட்டமிட தெரியாத அரசியல்வாதிகளால் ஏற்படும் சோகம் நம்மோட இருக்கட்டும் மேட்டருக்கு போகலாம்.  நூறு டன் நிலக்கரியை உபயோகப்படுத்தினா, ஒரு மாதத்துக்கு வேண்டிய மின்சாரம் எவ்வளவு யூனிட் கிடைக்குமோ, அதே அளவு மின்சாரம் உற்பத்தி செய்ய ஒரு கிலோ யுரேனியம் போதுமானது.

அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளில் யுரேனியம் அதிகமாக கிடைப்பதால் அங்கே மின்சாரம் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. அமெரிக்கர்களுக்கும், ஜப்பானியர்களுக்கும் பவர்கட் என்றால் என்ன என்பதே தெரியாது.

* இரும்புல வரக்கூடாது துரு ! முகத்துல வரக்கூடாது...! வேறென்ன பரு !

பருவுக்கு வீட்டிலேயே ஒரு  முதலுதவி. வசம்பு, கொத்தமல்லிவிதை, பாச்சோடி (இது எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்) இவை மூன்றிலும் தலா 25 கிராம் எடுத்து கொண்டு, கழுவி சுத்தம் செய்யுங்கள். மூன்றையும் தண்ணீர் விட்டு அரைத்து முகத்தில் அப்ளை செய்யுங்கள். ஒரு மணி  நேரம் காய வைத்து பிறகு குளிர்ச்சியான தண்ணீரில் கழுவி விடுங்கள். தொடர்ந்து இப்படி செய்துவந்தால் முகப்பரு காணாமல் போகும். முகப்பருவை தொடாதீங்க, கிள்ளாதீங்க முக்கியமான விஷயம் இது.

பன்னீர் பேஸ் வாஷ்!

15 மிலி தரமான பன்னீரை எடுத்து கொண்டு, முகத்தில் தடவி ஒரு மணி நேரம் கழித்து குளிர்ந்த தண்ணீரில் கழுவி விடுங்கள். தொடர்ந்து சில நாட்கள் இப்படி செய்து வந்தாலும் பரு போய்விடும்.

மல்டிபொடி பேஸ்பேக்!

வேப்பிலை பொடி, புதினா பொடி, துளசிப் பொடி இவைகளை தலா ஒரு டீஸ்பூன் எடுத்து கொண்டு, முல்தான்மட்டி கால் டீஸ்பூன் சேர்த்து, மிதமான சுடுத் தண்ணீர் சேர்த்து மேற்கொண்ட பொடிகளை சந்தனம் போல் குழைத்து முகத்தில் தடவவும். கண்களுக்கு அடியில் கண்டிப்பாக தடவக்கூடாது. 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவிவிடவும். தொடர்ந்து சில நாட்கள் இப்படி செய்துவந்தால் பரு பறந்துவிடும்.

பருவிற்கு மருந்துப்பொடி!

அருகம்புல் பொடி, குப்பைமேனி இலைப்பொடி இரண்டையும் சம அளவு கலந்து, பருவின் மேல் மருந்து போல போட்டு இரவில் தூங்கி, காலையில் அலம்புங்கள். தொடர்ந்து செய்தால் பரு மறையும்.

பரு வராமல் இருக்க...

பத்து பன்னீர் ரோஜா மொட்டுக்களை எடுத்து அது நனையும் அளவு சூடான தண்ணீர்விட்டு ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் அந்த நீரை வடிகட்டி முகத்தில் தடவி அரை மணி நேரம் ஊறவிட்டு, பின்னர் முகம் கழுவவும். இப்படி தொடர்ந்து செய்துவர பரு போகும்.

 மேற்சொன்னவைகள் சாதாரணமாக சின்ன சின்ன காரணங்களால் தோன்றும் முகப்பருவிற்கான ட்ரீட்மென்ட்தான். பக்க விளைவுகள் இல்லாதது. இதிலும் சரியாக வில்லையென்றால் மருத்துவரை நாடுவதுதான் சிறந்தது.

* ''கலாம் காலம் !''

'எவரிடே கிரேட்னஸ்' என்ற புத்தகம் ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய புத்தகம்.

நீங்கள் எந்த துறையில் இருந்தாலும், தலைமை பண்புடன் செயல்பட வேண்டும்.

* அம்மா ! பளீஸ் செஞ்சு தாங்கம்மா !

இது 'பார்லி பாத்!' செய்முறை நேரம்.

தேவையானவை:

பார்லி - 200 கிராம், வறுத்த வேர்க்கடலை - ஒரு கப், பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன், நறுக்கிய குடமிளகாய், பெரிய வெங்காயம் - தலா 1, நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, இஞ்சி - சிறிய துண்டு (பொடியாக நறுக்கவும்), மிளகுத்தூள் - கால் டீஸ்பூன், நெய் - ஒரு டேபிள் ஸ்பூன், துருவிய கேரட் - ஒரு கப், கடுகு, உளுத்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன், எலுமிச்சம்பழம் - 1, உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

பார்லியை அரை மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை வடிகட்டவும். கடாயில் நெய் விட்டு நறுக்கிய குடமிளகாய், வெங்காயம், இஞ்சியை போட்டு நன்கு வதக்கவும். நெய்யில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து அதில் பார்லியை போட்டு உப்பு சேர்க்கவும். வறுத்த வேர்க்கடலை, பொட்டுக்கடலை, மிளகுத்தூள் போட்டு கிளறி துருவிய கேரட்டையும் சேர்த்து கிளறி இறக்கவும்.  எலுமிச்சம்பழத்தை சாறு பிழிந்து சேர்க்கவும். நறுக்கிய கொத்தமல்லி தூவி, நன்றாக கலந்து கொடுக்கவும்.

குறிப்பு: பார்லி சிறுநீரகப் பிரச்னை வராமல் தடுக்கும். அதோடு நீர் சம்பந்தமான நோய்களை விலக்கும்.

என்றென்றும் அன்புடன்,  உங்கள் அங்குராசு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us