sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

சிறுவர் மலர்

/

அதிமேதாவி அங்குராசு!

/

அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!


PUBLISHED ON : நவ 08, 2013

Google News

PUBLISHED ON : நவ 08, 2013


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!

போ... வாயேஜர் இன்னும் போ!

தனது 36 ஆண்டுகால நீண்ட பயணத்தில் வாயேஜர் விண்கலம் நமது சூரிய மண்டலத்தை கடந்து பால்வெளிக்குள் நுழைந் துள்ளது. 2012 ஆகஸ்ட் 25ம் தேதி, சூரியனில் இருந்து 1900 கோடி கி.மீ., தொலைவை கடந்தது வாயேஜர் விண்கலம்.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, 1977ம் ஆண்டு வாயேஜர் விண்கலத்தை ஏவியது. இதனுடன் வாயேஜர்-2 விண்கலமும் ஏவப்பட்டது. இதில், வாயேஜர்-1 சூரிய மண்டலத்தை வெற்றி கரமாக கடந்துள்ளது. மனிதனால் ஏவப்பட்ட ஒரு விண்கலம் முதன் முறையாக சூரியக் குடும்பத்தை தாண்டுவது இதுவே முதன்முறை.

பேரண்டத்தில் நமது சூரியக்குடும்பத்துக்கு அப்பால் நட்சத்திரங்களும், எரிகற்களும், கோள்களும் அற்ற சூன்யமான அண்டவெளி அல்லது வெறுமையான அண்டவெளி இருக்கிறது.

சூன்யம் என்ற போதும், முழுக்க வெறுமையான பகுதி என கொள்ளாமல் கனமாக வெற்றிடம் என கூறலாம்.

இந்த கனமான வெற்றிடத்துக்குள் வாயேஜர்-1 நுழைந்துள்ளது. வாயேஜர்-1 வியாழனின் சுற்றுப்பாதையை 1979-லும், சனி கிரகத்தின் சுற்றுப்பாதையை 1980ம் ஆண்டிலும் கடந்தது.

அப்போது, இரு கிரகங்களையும் அவற்றின் துணைக்கோள்களான சந்திரன்களையும் தெளிவாக படம் பிடித்து புவிக்கு அனுப்பியது.

1990ம் ஆண்டு புவியில் இருந்து 960 கோடி கி.மீ., தூரத்தை கடந்த பின், முழு சூரிய மண்டலத்தையும் படம் பிடித்தது. சூரிய மண்டலத்தின் துல்லியமான எல்லை எது என்று குறிப்பிட இயலாத நிலையில், வாயேஜரில் ஏற்பட்ட சிறு மாறுதல்கள் மூலம் விஞ்ஞானிகள் அதனை கண்டுபிடித்தனர்.

சூரிய மண்டலத்தை கடக்கும்போது விண்கலத்தின் மேல்பகுதியிலுள்ள பிளாஸ்மா வின் அடர்த்தி அதிகரித்தல், வெப்பநிலையில் மாறுதல், காந்தப்புல கோணத்தில் மாறுதல் போன்ற அறிகுறிகள் ஏற்படும் என கணிக்கப்பட்டது.

2012ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன என்பது கடந்த செப்டம்பர் 12ம் தேதி வெளியான அறிவியல் சஞ்சிகை இதழின் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் மூலம், வாயேஜர்-1 சூரிய மண்டலத்தை கடந்து, வெறுமையான அண்ட வெளிக்குள் பயணித்தது உறுதி செய்யப் பட்டுள்ளது. கடந்த 2012 மார்ச் மாதம், சூரிய வெடிப்பு ஏற்பட்டு வெப்ப உமிழ்வு நிகழ்ந்தபோது, வாயேஜரை சுற்றியிருந்த பிளாஸ்மாவில் அதன் தாக்கம் தெரிந்தது.

'இந்த தாக்குதல்களை கண்டபோது, உண்மை யிலேயே நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தோம்' என இந்த ஆய்வில் ஈடுபட்டுள்ள அயோவா பல்கலைக்கழக விஞ்ஞானி டான் குர்னெட் தெரிவித்தார்.

இந்த வாயேஜர் விண்கலத்தில் இருந்து, வரும் 2020ம் ஆண்டு வரை சமிக்ஞைகள் கிடைக்கும் என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

விண்வெளி ஆராய்ச்சி துறையில், முதன் முறையாக ஸ்புட்னிக், 600 மைல் தொலை வுள்ள புவியின் வளிமண்டலத்தை தாண்டிய சாதனையுடன் இது ஒப்பிடப்படுகிறது.

சூரிய மண்டல குமிழியை 1100.3 கோடி மைல் தொலைவை தாண்டி வாயேஜர் பயணித்து கொண்டிருக்கிறது.

இதுவும் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுதான் என்று நாசா விஞ்ஞானி ஸ்டாமட்டியோஸ் கிரிமிஜிஸ் தெரிவித்துள்ளார்.

வடாத்திலும் வண்ண வண்ணங்கள்!

ஒரு பொருளை விற்பது என்பது இன்றைய காலகட்டத்தில் போட்டி மிகுந்தது. ஒரு பொருளை குழந்தைகளுக்கு பிடிக்கும் படி தயாரித்து, விளம்பரப்படுத்தி விட்டாலே அது பெரும் வெற்றியை பெற்றுவிடும். அது போன்ற முயற்சிதான் வெள்ளை கலரில் பெரும்பாலும் தோற்றமளிக்கும் வடாம்களின் வண்ண தோற்ற பரிமாணம்.

கடைகளில் கலர் கலராய் வடாம் கிடைக்கிறது. அதில் எந்த நிறங்கள் உபயோகிக்கிறார்கள்? இதனால் உடலுக்கு கேடு விளையுமா? என்கிற சந்தேக கேள்விகள் எழும்.

கலர் கலரான உணவு, வடாம், மருந்து போன்றவற்றை தயாரிப்பதற்கென்றே, அரசு மற்றும் டிரக் கண்ட்ரோல் அங்கீகாரம் பெற்ற கஞுணூட்டிttஞுஞீ ஊணிணிஞீ இணிடூணிதணூண் விற்கப்படுகின்றன. இவற்றை உபயோகித்து செய்யப்படும் பிராண்டட் வடாம் உடலுக்கு கேடு விளைவிப்பதில்லை.

ஆனால், சாதாரணமாய் கவர்களில் பேக் செய்து விற்கப்படும் கலர் வடாம்களில் உடலுக்கு ஊறு செய்யும் ரசாயன கலர்கள் சேர்க்கப்படலாம்.

அம்மா ப்ளீஸ் செஞ்சுதாங்கம்மா!

இது மராத்திய ஸ்பெஷல், 'கமண் டோக்ளா' செய்முறை நேரம்.

மராத்திய மாநிலத்தில் ஸ்பெஷலாக பேசப்படும் இந்த கமண் டோக்ளா புது வகையான பலகாரம். இதில் சிறிது மாற்றம் செய்யப்பட்டு தேவையானவையும் செய்முறையும் தரப்படுகிறது.

தேவையான பொருட்கள்: கடலை மாவு- 250 கிராம், அரிசி மாவு-25 கிராம், குறுமிளகு-10 கிராம் ( ஒன்றிரண்டாக பொடித்தது), பொடி உப்பு - தேவையான அளவு, புதிய பச்சை கொத்தமல்லி - அரைக் கட்டு, தேங்காய்ப்பூ - 1 கிண்ணம், சமையல் சோடா- 1/2 சிட்டிகை, ரீபைண்டு எண்ணெய் - 75 மி., கிராம், தயிர் அல்லது மோர் - 2 கிண்ணம்.

செய்முறை: கடலை மாவு, அரிசி மாவு ஆகியவைகளை தனித் தனியே சலித்து எடுத்துகொள்ளவும். புதிய பச்சை கொத்தமல்லியை நன்கு அலம்பி பொடி பொடியாக அரிந்துகொள்ளவும். கடலை மாவு, அரிசி மாவு, ஒன்றிரண்டாக பொடித்த குறுமிளகு, தேவையான பொடி உப்பு ஆகியவைகளை தயிர் அல்லது மோரில் போட்டு நன்கு தோசை மாவு போல கெட்டியாக கரைத்து சிறிது சமையல் சோடா சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

பொங்கிய பிறகு இதனை அகலமான தட்டில், அரை தட்டு அளவில் சமமாக பரப்பி ஆவியில் வேக வைக்கவும். சுமார் 20 நிமிடங்களில் வெந்து விடும். பின்னர் வெளியே எடுத்து ஆற விடவும். ஆறிய இந்த கலவையை செவ்வக அல்லது சதுர வடிவில் சிறிய துண்டுகளாக்கி கொள்ளவும்.

அடிக்கனமான வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்த பிறகு கடுகை வெடிக்கவிட்டு, துண்டுகளாக நறுக்கி வைத்திருக்கும் டோக்ளாவை உடையாமல் அதில் போட்டு, கவனமாக மென்மையாக 2-3 நிமிடங்கள் கிளறவும் .

பிறகு வெளியே எடுத்து மெலமைன் தட்டில் வைத்து தேங்காய்ப் பூ மற்றும் பச்சை கொத்தமல்லி ஆகியவைகளை அதன் மீது பரவலாக தூவி பரிமாறினால் சுவையோ சுவை!

இதனுடன் டொமட்டோ கெட்ச் அப் தொட்டும் சாப்பிடலாம்.

அப்படியேயும் சாப்பிடலாம்.

என்றும் அன்புடன், அங்குராசு.






      Dinamalar
      Follow us