sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

சிறுவர் மலர்

/

அதிமேதாவி அங்குராசு!

/

அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!


PUBLISHED ON : நவ 15, 2013

Google News

PUBLISHED ON : நவ 15, 2013


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!

ரத்தத்தின் சுத்த பத்தம்!

நமது உடலில் ரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்று பொருமல், சுவாசக் கோளாறுகள் ஏற்படும். அதனால், உடலின் அடிப்படை சக்தியான ரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியம். பீட்ரூட் சாப்பிட்டு வந்தால் புதிய ரத்தம் உற்பத்தியாகும். செம்பருத்திப் பூவை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வருவதால் வெட்டை சூடு தணிந்து ரத்தம் விருத்தியாகும். முருங்கைக்கீரையை துவரம் பருப்புடன் சமைத்து, அதில் ஒரு கோழி முட்டையை உடைத்துபோட்டு கிளறி, அத்துடன் நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர ரத்தம் சுத்தமாகும். அதே போல, நாவல் பழத்தை தினமும் சாப்பிடுவதும் பலன் தரும்.

இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் ரத்தம் சுத்தப்படுத்தப்படும். தக்காளிப் பழம் சாப்பிடுவதும் நல்ல பலன்தரும். ஆனால், வாத நோய் உள்ளவர்கள் இதனை தவிர்க்க வேண்டும். இலந்தைப் பழம் சாப்பிடுவது ரத்தத்தை சுத்தம் செய்வதுடன் நம்மை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். அது பசியையும் தூண்டும் தன்மை கொண்டது.

இன்றைய காலகட்டத்தில் பெரும் அச்சுறுத்தல் ரத்தக்குழாய் அடைப்பு. இதனை சாதாரணமாக தவிர்த்து விடலாம் என்கிறது இயற்கை வைத்தியம். தினமும் ஒரு கப் தயிர் சாப்பிட்டு வந்தால் ரத்தக் குழாய் அடைப்பு நீங்கும்.

ரத்த அழுத்தத்தை முற்றிலுமாக போக்கவும் வழி உண்டு. கொதிக்க வைத்து ஆறிய நீரில் சீரகப் பொடியை ஊற வைத்து குடித்தால் சிறப்பான பலன் கிடைக்கும். அதே போல மோரில் எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து சாப்பிட்டாலும் ரத்த அழுத்தம் சீராகும்.

அகத்திக் கீரையை வாரத்தில் இரண்டு முறை சாப்பிடுவது ரத்தக் கொதிப்பை குணமாக்கும்.

ரத்தக்கட்டு, சுளுக்கு ஆகியவற்றை சரி செய்ய மஞ்சள், உப்பு, சுண்ணாம்பு ஆகியவற்றை வெந்நீர் விட்டு அரைத்து அந்த விழுதை சூடு செய்து உரிய இடத்தில் பற்று போட்டால் போதும். விளாம்பழம் சாப்பிட்டால் ரத்தத்தில் உள்ள கிருமிகளை அழிக்கும்.

இதுபோல இயற்கையை நம்பினால், கோடி இன்பங்கள் வீடு வந்து சேரும்.

'டிவி'யில் எது டாப்?

'டிவி' சேனல் எல்லாவற்றுக்குமே சுவாச மந்திரம் எதுவென்றால், அது டி.ஆர்.பி., ரேட்டிங்தான். இதை வைத்து தான் ஒரு சேனலின் வரவும், விளம்பரமும் நிர்ணயிக்கப்படுகின்றன. டெலிவிஷன் ரேட்டிங் பாயிண்ட் என்பதன் சுருக்கமே, டி.ஆர்.பி என்பது. டி.ஆர்.பி., ஏற ஏற, விளம்பரக் கட்டணம் எகிறும். உதாரணமாக, ஆறரைக் கோடி மக்கள் இருக்கும் தமிழ் நாட்டில் குறிப்பிட்ட 650 வீடுகளை மட்டும் தேர்ந்தெடுப்பர். தேர்ந்தெடுக்கப்பட்ட வீடுகள் எல்லாவற்றிலும், 'டேம் பாக்ஸ்' என்ற ஒரு கருவியை பொருத்திவிடுவர். இப்படியொரு கருவி பொருத்தப்பட்டி ருப்பது பெரும்பாலும் அந்த வீட்டில் உள்ளவர்களுக்கே தெரிவதில்லை.

அந்த வீட்டில் இருக்கும் 'டிவி'யை ஆன் செய்தவுடன் டேம் பாக்சும் ஆன் ஆகிவிடும். அவர்கள் எவ்வளவு நேரம் பார்க்கின்றனர்? எந்தெந்த சேனல்களுக்கு தாவுகின்றனர்? எந்த மாதரி நிகழ்ச்சிகளை பார்க்கின்றனர்? என்ற விவரங்கள் எல்லாம் விலாவாரியாக பதிந்துவிடும். வாரத்துக்கு ஒருமுறை இந்த டேம் பாக்சை எடுத்து பதிவான தகவல்களை எல்லாம் சேகரிப்பர். இந்த 650 டேம் பாக்ஸ்களில் பதிவான தகவல்களை அப்படியே ஆறரை கோடி மக்களுக்கான தகவலாக மாற்றுவர். அதுதான் டி.ஆர்.பி.

ஒளிபரப்பாகும் நேரத்தைப் பொறுத்து நிகழ்ச்சிகள் இவ்வளவு டி.ஆர்.பி., பெற வேண்டும் என்ற விஷயத்தை எல்லாம் சேனல்கள் ஏற்கெனவே முடிவு செய்து வைத்திருக்கும். அந்த ரேட்டிங்கை விட சற்று குறைந்தாலும், சீரியலின் கதை மாறும், டைரக்டர்கள் மாறுவர். கேரக்டர் மாறும். சில சமயம் நிகழ்ச்சியே மாறிவிடும்.

இதனால்தான் சீரியல்களில் திடீர் திடீரென்று கிளைக் கதைகள் தோன்றும். ரியாலிடி ஷோக்களுக்கு டி.ஆர்.பி., ரேட்டிங் கூடுவதால் எல்லா சேனல்களும் விதவிதமான ரியாலிடி ஷோக்களை கொடுக்க தொடங்கி யிருக்கின்றன.

கோபம், சண்டை, அழுகை போன்றவை வரும்போது டி.ஆர்.பி., சர்ரென்று ஏறும். டான்ஸ் புரொகிரா மிலும், பாட்டுப் போட்டியிலும் போட்டி யாளர்கள் நீக்கப்பட்டதும் ஏங்கி ஏங்கி அழுவர். அவர்கள் குடும்பம் அழும். நண்பர்கள், தோழிகள் என்று எல்லாரும் கண்ணீர் சிந்துவர். இந்த அழுகை எல்லாமே டி.ஆர்.பி.,க்காகத்தான். தீபாவளி, பொங்கல் போன்ற நாட்களில் ஒளிபரப்பாகும் ரஜினி, கமல் படங்களுக்கும் டி.ஆர்.பி., ரேட்டிங் கூடும். இதை வைத்தே விளம்பர காசை பார்த்து விடுவர் சேனல்காரர்கள்.

ஆனால், தமிழின் சூப்பர் டூப்பர் ஹிட் படங்கள் கூட தொடாத ரேட்டிங் உயரத்தை ஒரு வெளிநாட்டுப்படம் தொட்டது. எல்லா சேனல்களுமே மூக்கின் மீது விரல் வைத்து ஆச்சரியப்பட வைத்த படம், 'டைட்டானிக்' இது தமிழில் ஒளிபரப்பப்பட்ட போது தமிழக வீடுகள் எல்லாவற்றிலும் அந்த படம்தான் ஓடிக்கொண்டிருந்தது. தமிழக 'டிவி' நிகழ்ச்சி தயாரிப்பாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய விஷயங்களில் இது குறிப்பிடத்தக்கது.

பத்திரமே நீ பத்திரமா!

பத்திரங்கள், சில முக்கிய ஆவணங்கள் நாளடைவில் மக்கிவிடுகின்றன. அவற்றை நெடுங்காலம் மக்காமல், புது பொலிவுடனேயே பாதுகாப்பது எப்படி? பேப்பர்களுக்கு மத்தியில் டிஷ்யூ பேப்பர் வைத்து பைல் அல்லது ஜிப்லாக் கலரில் வைத்து பாதுகாக்கலாம்.

பத்திரமே - உன் பத்திரம் எனக்கு முக்கியம்!

பத்திரங்களை பாதுகாக்க வேறு சில ஐடியாக்களும் உண்டு.

*சரியான அளவிலான பிளாஸ்டிக் கவரில் வைத்து வசம்பு அல்லது வேப்பிலை சருகுகளை பத்திரத்தின் மேல் படாமல், வேறொரு கவரில் போட்டு அதற்குள் பத்திர கவரை வைக்க வேண்டும்.

*ஆவணங்களில் ஸ்கேன் செய்து 'சிடி' அல்லது கம்ப்யூட்டரில் பதிவு செய்து வைப்பது சிறந்தது. பர்த் சர்டிபிகேட், டிகிரி சர்டிபிகேட் போன்றவற்றை லாமினேட் செய்து வைக்கலாம். வீட்டுமனை பத்திரங்களை ஜெராக்ஸ் எடுத்து வைத்து கொள்ளலாம்.

*பத்திரங்கள் வைக்கும் கவரில் தூய சாம்பிராணி கட்டிகளை ஒரு துணியில் கட்டி, அதில் போட்டால் அதிக வருடங்கள் பாதுகாப்பாக இருக்கும்.

இரண்டு மூன்று வருடங்களுக்கு ஒருமுறை புதிய கலர் மற்றும் சாம்பிராணியை மாற்றி வைப்பது நல்லது.

என்றென்றும் அன்புடன், அங்குராசு.






      Dinamalar
      Follow us