
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!
பயண வீக்கமா?
பயணம் என்பது ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஏற்படுகிறது.
பஸ் பயணம், ரயில் பயணம், விமான பயணம், கார் பயணம், கப்பல் பயணம் இப்படி பற்பல வகை பயணங்கள் உண்டல்லோ!
இதில் அதிகப்படியான மக்கள் பஸ் மற்றும் ரயிலை பயன்படுத்துகின்றனர். சிலருக்கு நீண்ட தூர பஸ் பயணத்தின் போது கால்களை தொங்கவிட்டு உட்கார்ந்திருந்தால் கால் வலியும், வீக்கமும் ஏற்படும்.
அப்படிப்பட்டவர்கள் வீட்டுக்கு வந்ததும் வெதுவெதுப்பான நீரில் கால்களை ரிலாக்ஸாக வைத்திருக்க வேண்டும்.
பிறகு கால்களை உயரமாகவும், தலையை தாழ்வாகவும் வைத்து சிறிது நேரம் படுத் திருந்தால் கால் வீக்கம் குறைந்து விடும்.
மூடியை தூக்கி தூக்கி!
வீடுகளில் தண்ணீருக்காக மோட்டர் போட்டு டாங்க்கில் நிரப்பி வைப்பர்.
அது போன்ற தண்ணீர் டாங்க்கின் (சம்ப்) மேல் மூடியானது டிரான்ஸ்பரண்டான பைபரினால் ஆன மூடியாக இருந்தால், தண்ணீர் அளவு பார்க்க சவுகரியமாக இருக்கும். கனமான இரும்பு மூடியை தூக்கி தூக்கி பார்க்கும் அவசியம் இல்லை என்பதோடு துருவும் பிடிக்காமல் இருக்கும்!
வெள்ளை - வெள்ளை!
அலமாரிகள் குறிப்பிட்ட துணி, புத்தகங் கள் போன்றவற்றை வைக்கப் பயன்படு கின்றன. சில அலமாரிகளில் பாத்திரங்கள் கூட இருக்கும். சில அலமாரிகள் முழுக்க, முழுக்க ஒரு நபரின் உடமைகளை வைத்திருக்கும்.
அலமாரிகள் இடத்தை அடைப்பதை தடுக்கும். அலமாரிகள் பொருள் சிதறலை தடுக்கும். அலமாரியின் உட்பக்கத்தை வெள்ளை நிறத்தில் பெயிண்ட் அடித்தால் வெளிச்சமாக இருக்கும். துணிகளை எடுப்பதும் எளிது.
இருட்டை தேடி வரும் பூச்சிகளும் சேராது. பகலிலும் அலமாரியை திறக்க, பொருள் எடுக்க மின்சார விளக்கை போட தேவையில்லை.
காரில் தண்ணீர்!
இப்போதெல்லாம் எல்லோர் கையிலும் இரண்டு பொருட்கள் கண்டிப்பாக இருக்கிறது. ஒன்று செல்போன்; மற்றொன்று தண்ணீர்.
காரில் குடும்பமாய் பயணிக்கும்போது மிக முக்கியமாய் தண்ணீர் தேவை. காரில் செல்லும்போது ப்ளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீரை எடுத்துச் செல்ல கூடாது. இன்ஜின் சூடு காரணமாக, பிளாஸ்டிக்கில் உள்ள நச்சு பொருட்கள் தண்ணீரில் கலந்துவிடும் அபாயம் உண்டு.
அணிவகுத்து வருகிறது நெல்லி!
நிறைய, பெரிய நெல்லிக்காய் விளைந்து வந்திருக்கிறது. பார்க்கும் இடமெல்லாம் பளீர் பச்சையில் என்னை பல்லால் கடியேன் என்று பல் இளிக்கிறது நெல்லி. இயற்கை ஒவ்வொரு காலத்திற்குமான காயையும், கனியையும் அள்ளித்தரும்.
அவை மிகவும் ஆரோக்கியமானதாகவும், விலை மலிவானதாகவும் இருக்கும். ஊறுகாய் பிரியர்களுக்கு ஒரு வித்தியாசமான ஐடியா. கடுகு, மஞ்சள், மிளகாய் மூன்றையும் ஊற வைத்து விழுது போல் அரைத்து நெல்லிக் காயை செதில் செதிலாக போடுங்கள்.
தேவைக்கேற்ப உப்பு, பெருங்காயப் பவுடர் போட்டு நீர் ஊற்றாமல், மறுநாள் அரைத்த விழுதை போட்டு குலுக்கி இரண்டு நாள் ஊறியவுடன் பயன்படுத்துங்கள்.
சுவை செம சூப்பராய் இருக்கும். சாப்பிடும்போது சிறு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்து சாப்பிட்டால் டபுள் சூப்பர்!
அவசரமா - தைரியம் வேண்டும்!
சாதாரணமாய் மருத்துவமனை செல்வ தென்றாலும், ஆபத்தில் அவசரத்தில் செல்வ தென்றாலும் மிக முக்கியமானது மனித துணை.
மருத்துவமனைக்கு சிகிச்சை பெற செல்வோருடன் தைரியமான, விவரமானவர்களை துணைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
அப்படிப்பட்டவர்களால் எந்த நிலையிலும், எந்த சூழலிலும் மிக சீக்கிரமாய் சரியாய் முடிவு எடுக்க முடியும்.
ரூட்டு காட்டும் நெட்டு!
இணையதளம் பல வழிகளில் நமக்கு பயனுள்ளதாக, உதவிகரமாக உள்ளது. குறிப்பாக, 'கூகுள் மேப்ஸ்' எங்கிருந்து எங்கு செல்ல வேண்டும் என்றாலும், எவ்வளவு தூரம், பேருந்து எண்கள், குறுக்கு வழிகள் என்று அனைத் தையும் ஒரு நொடியில் சொல்லி விடுகிறது.
வீட்டில் இணையம் உள்ளவர்கள் இதுபோன்ற பயனுள்ள மென்பொருளை உபயோகிக்க கற்று கொண்டு பலன் பெறலாமே!
வீணாய் தேட வேணாம். அலைய வேண்டாம் நேரமும், அலைச்சலும் மிச்சம்.
வேலை நாட்களுக்கான தயாரிப்பு
அப்பா-அம்மா இருவரும் வேலைக்கு போகிறார்கள். குட்டீஸ் பள்ளிக்கு போகிறார்கள். வாரம் முழுவதும் ஓட்டம் ஓட்டம்.
குடும்பத்தின் நலனுக்கும், ஆரோக்கியத் திற்கும் அஸ்திவாரமாய் அமைவது உணவு.
அதற்கு சமையலில் நிறைவு தேவை. நேரமில்லை. அது இல்லை. இது இல்லை என்கிற சாக்கு போக்குகள் செல்லாது.
அம்மா மட்டும்தான் சமையல் முழுமைக் கான பொறுப்பு என்று எதாவது எழுதி வைத்த சட்டம் இருக்கிறதா என்ன?
அப்படி இருக்கக்கூடாது. இருந்தே விட்டால் அதை குடும்பமே உடைக்க வேண்டும். அம்மாவோடு குடும்பமே நன்றாக இருக்க வேண்டும். வீட்டு உணவு இல்லாமல் போவது, பாக்கெட் உணவு உண்பது, வெளி உணவு உண்பது என்ப தெல்லாம் மாறுதலுக்கு இருக்கலாமே தவிர தொடரும் தொடர் கதையாக இருக்க கூடாது.
அப்பா, குழந்தைகள் அம்மாவிற்கு உதவணும். அம்மாவுக்கு ஒரு ஐடியா இந்த பிள்ளை தருகிறேன்... விடுமுறை நாட்களில் மிளகு, சீரகம், சோம்பு, கறிவேப்பிலை இவற்றை மிக்ஸியில் பொடியாக அடித்து வைத்து கொண்டால் காய்கறி பொரியல், கலந்த சாதம் போன்றவற்றுக்கு அவசரத்துக்கு உதவும்.
ஞாயிறு அன்று அம்மாவுக்கு லீவு விட்டுவிடலாம். அப்பா காலை காபி போடலாம். அப்பாவும், குட்டீஸும் சமையலில் இறங்கி அசத்தலாம்.
வார நாட்களுக்கு தேவையான விஷயங் களை எல்லாம் ரெடி பண்ணி வைக்கலாம். இதனால் பிள்ளைகளிடம் பொறுப்புணர்வும் ஆண், பெண் சமம் என்ற எண்ணமும் ஏற்படும்.
என்றென்றும் அன்புடன், அங்குராசு.

