PUBLISHED ON : மார் 21, 2014

வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!
மூட்டைப்பூச்சிகளை கண்டுபிடிக்கும் நாய்கள்!
நாய்களுக்கு மோப்ப சக்தி மிக அதிகம். அதனால்தான் குற்றவாளிகளை கண்டுபிடிக்க, நாய்களை காவல் துறையில் பயன்படுத்து கின்றனர் என்பது பழைய விஷயம்.
புதிய விஷயம், நாய்களின் மோப்ப சக்தியை பயன்படுத்தி மூட்டைப் பூச்சிகள் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கின்றனர்.
மூட்டைப் பூச்சிகளின் தொல்லை நம் நாட்டில் மட்டுமல்ல, எல்லா நாடுகளிலும் இருக்கிறது. மிகச் சிறியதாக இருக்கும் இந்த பூச்சி, மிகப் பெரிய தொல்லையை உலகம் முழுக்க உள்ள மக்களுக்கு தந்து கொண்டிருக் கிறது. இவை, ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு வேகமாக பரவும் திறன் கொண்டது. கண்ணுக்கு மறைவான இடத்தில் பல்லாயிரக் கணக்கான முட்டைகளை வைத்து குஞ்சு பொரித்து குடும்பம் நடத்தி, மக்களை தூக்க மில்லாமல் துரத்தியடிக்கக் கூடியது இந்த பூச்சிகள்.
அவை மறைந்திருக்கும் இடத்தை நம்மால் கண்டுபிடிக்க முடியாது என்பதால், எளிதாக அவைகளை அழிக்க முடியாது.
மூட்டைப் பூச்சிகளின் தொல்லையை தாங்க முடியாமல் அவைகளை எதிர்த்து அமெரிக்காவில் ஒரு யுத்தமே நடந்து கொண்டிருக்கிறது. விஞ்ஞான வளர்ச்சியில் வல்லமை பெற்ற நாடாக இருந்தாலும் கூட, இந்த மூட்டைப் பூச்சி களிடம் கடிவாங்கிக் கொண்டு அமெரிக்காவும் விழி பிதுங்கி தவிக்கத் தான் செய்கிறது.
வாஷிங்டனில், 'ஜெயின்ட் பெட்பக்' என்ற பெயரில் அமைப்பு ஒன்று தொடங்கப்பட்டிருக் கிறது. இதில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் மூட்டைப் பூச்சிகளை எப்படி எல்லாம் ஒழிக்க லாம் என்று ஆலோசனை சொல்கின்றனர்.
மூட்டைப் பூச்சி ஒழிப்பு பற்றி விரிவான கருத்தரங்கமும் நடத்துகின்றனர். தற்போது அமெரிக்காவில் மூட்டைப் பூச்சிகளை ஒழிப்பதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட அமைப்புகள் தொடங்கப் பட்டிருக்கின்றன. அவை புதிய யுத்திகளை கையாண்டு வீடுகள், அலுவலகம், ஓட்டல் களில் மூட்டைப்பூச்சி ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரமாக்கிக் கொண்டிருக்கின்றன. ஆனாலும், அந்த தொல்லை முழுமையாக தீர்ந்தபாடில்லை. அதனால், 'கிரீன் பெஸ்ட் மேனேஜ்மென்ட்' என்ற அமைப்பு இதற்காக நாய்களை பயன் படுத்த முன்வந்திருக்கிறது. நாய்களைக் கொண்டு மூட்டைப் பூச்சிகளின் இருப்பிடத்தை கண்டுபிடித்து அழிக்கின்றனர். நாய்களின் மோப்ப சக்தி இதற்கு பயன்படுகிறது. மூட்டைப் பூச்சியை மட்டுமல்ல, அதன் முட்டைகளை கண்டறியும் சக்தியும் நாய் களுக்கு இருக்கின்றன. ஆனால், இந்த நுட்பமான மோப்ப சக்தி குறிப்பிட்ட இன நாய்களிடம் மட்டுமே இருக்கிறது. அத்தகைய நாய்களை கண்டு பிடித்து, அவை களுக்கு பயற்சி யளித்து இந்த பணிக்கு பயன் படுத்திக் கொண்டிருக் கின்றனர்.
நாய்கள் வீட்டில் இருக்கும் கட்டில், நாற்காலி, கூடை போன்ற அனைத்தையும் நுகர்ந்து மூட்டைப் பூச்சியையும், அவைகளின் முட்டைகளையும் கண்டுபிடிக் கின்றன. பின்பு, அவை அழிக்கப்படுகின்றன. இதன் மூலம் வீட்டில் இருக்கும் மூட்டைப் பூச்சி இனத்தையே பூண்டோடு அழித்து விடுகின்றனர்.
கேன்டகி பல்கலைக் கழகத்தின் பூச்சிகள் ஆய்வு துறை, மூட்டைப் பூச்சிகள் பற்றிய ஆய்வுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. அவர்களது ஆய்வும், நாய்களை பயன்படுத்துவது நல்ல தீர்வு என்றே சொல்கிறது.
மூட்டைப் பூச்சிகளின் ஆதிக்கம் நியூயார்க் கில் அதிகரித்துக் கொண்டே போகிறது. அதன் தொல்லை 2006ல் இருந்ததை விட 2008ல் இரண்டு மடங்கு அதிகரித்து விட்டது. அங்குள்ளவர்கள் மூட்டைப் பூச்சிக்கு பயந்து அழகான அபார்ட்மெண்டுகளைக் கூட தியாகம் செய்துவிட்டு, பாதுகாப்பான சிறிய இடங் களுக்கு குடிபோய் விட்டனர். புதிய இடத்திற்கு குடிபோகும் போது அங்கும் மூட்டைப் பூச்சி ஏதாவது இருக்கிறதா என்று நிபுணர்களை வைத்து ஆய்வு செய்த பிறகே குடியேறு கின்றனர்.
மூட்டைப் பூச்சிகளின் தொல்லை அங்கே அதிகரித்துக் கொண்டே இருப்பதால், நியூயார்க் நகர மேயர் இதற்கென்று ஒரு ஆலோசனை குழுவையே உருவாக்கியுள்ளார்.
மூட்டைப் பூச்சிகளை வேட்டையாடும் நாய்கள், முறைப்படி பயிற்சியளித்து பயன் படுத்தப்படுகின்றன. பயிற்சி அளிக்கப்பட்ட நாய்களை தனியார்களுக்கும் விற்கின்றனர். இத்தகைய பயிற்சியை முதல் முதலில் அளித்தவர் வீஸ்டைன்.
அவர், 'நான் பயிற்சி அளித்த நாய்களை நாடு முழுக்க விற்றிருக்கிறேன். சர்வதேச அளவிலும் நான் நாய்களை அனுப்புகிறேன்' என்கிறார்.
அதிக அளவில் மூட்டைப் பூச்சிகளை கொன்று, தன் எஜமானர்களை நிம்மதியாக தூங்க வைக்கும் நாய்களுக்கு இப்போது அமெரிக்கர்கள் அதிக செல்லம் கொடுக் கின்றனர்.
என்றும் லொள்ளுடன், அங்குராசு.
