தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/ஓவியமோ ஓவியம்!

ஓவியமோ ஓவியம்!

ஓவியமோ ஓவியம்!


PUBLISHED ON : மார் 21, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 21, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, மக்கள் எருதுகள், குதிரைகள் மற்றும் மான்களின் ஓவியங்களை தங்களின் குன்றுகளின் சுவர்களில் வரைந்தனர். அவர்கள் ஏன் அப்படி செய்தனர் என்பது சரியாக தெரிய வில்லை. அவர்கள் அப்படி செய்து அதன் மூலம் மேஜிக் மற்றும் அதிர்ஷ்டம் தாங்கள் வேட்டையாடும் சமயத்தில் கிட்டும் என எண்ணி யிருக்கலாம். அப்படி ஆரம்பித்து, ஓவியர்கள் நிகழ்வுகளை குறிக்க அவற்றை வரைதல், சாதனை நாயகர்கள், நாயகிகளை மரியாதை செய்ய, அந்த காலத்திய நிகழ்வு களை பதிவு செய்ய, கதைகளை சொல்ல அல்லது வெறும் மகிழ்ச்சிக்காக ஓவியங்கள் வரையப்பட்டன. ஒவ்வொரு ஓவியருக்கும் தனி பாணி உண்டு. ஓவியம் பிடிப்பதும், பிடிக்காமல் போவதும் அவரவர் விருப்பம்.

குன்றுகளும் பள்ளத்தாக்குகளும்!

இது ஒருபகுதியின் வரைபடம். இது சீனப் பகுதியை சொல்லும் படம். இது மேற்கத்திய நிலப் பகுதியை போல இல்லை. இது பட்டில் வரையப்பட்டு உள்ளது. ஒவ்வொரு விவரமும் துல்லியமாக பதிவு செய்யப்பட்டு உள்ளது.

ஓவியம் என்ன?

* இந்த ஓவியம் ஒரு ஜோடியின் திருமணத்தை பதிவு செய்துள்ளது. இதை கூர்ந்து கவனித்தால் வெறும் திருமணப் பதிவு என்றில்லாமல் வேறு பல விஷயங்கள் இருப்பதும் தெரியும்.

* பகல் பொழுதாயினும் ஒரே ஒரு மெழுகுவர்த்தி எரிகிறது. அது இந்த ஜோடி மனமொத்து வாழ்வர் என்பதை காட்டுகிறது.

* வணிகரை போல அவரின் துணைவியும் விலை மிகுந்த உடைகளை அணிந்துள்ளார். அந்த காலத்தில் இப்படித்தான் உடை உடுத்துவர்.

* இந்த கண்ணாடியில் உற்று பார்த்தால் உள்ளே இருவர் இருப்பது தெரியும். இருவரில் ஒருவர், ஓவியர்.

* நீண்ட தொலைவு பொருட்கள் சிறியதாய் தெரியும். அதனால் தான் நாம் பார்க்கும் ஷûவின் பின்பகுதி பெரியதாய் வரையப்பட்டுள்ளது. இது படத்திற்கு ஆழத்தையும், உண்மை தன்மையையும் தரும்.

* ஜோடியின் கைகளில் படும் வெளிச்சத்தில் சிறு ரேகைகளும் ஓவியரால் தெளிவாக காட்டப்பட்டுள்ளது.

உணர்வே பிரதானம்!

இந்த ஓவியத்தில், நவீன அமெரிக்க ஓவியரான ஜாக்சன் போலக், பொருட்கள் அல்லது நபர்களை காட்ட விரும்பாமல், உணர்வுகளை காட்டியுள்ளார். அவர் வண்ணத்தை சிந்தியும், பரப்பியும் அப்படி செய்துள்ளார்.

தனி நபர் ஓவியம்!

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஓவியர்கள் தனி நபர்களை வரைந்து மகிழ்ந்துள்ளனர். எல்லாரும் வரையப் படும் நபரை அப்படியே வரைந்து விடுவது இல்லை. பல்வேறு வகையான ஓவிய பாணிகள் கடைப்பிடிக்கப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us