தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!


PUBLISHED ON : ஜூலை 18, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 18, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!

அமெரிக்கா என்பது ஒரு பிரம்மாண்டமான...

ஒரு மனிதன் வாயில், அவன் வாழ்நாளில் மொத்தம் 30 ஆயிரம் லிட்டர் எச்சில் உற்பத்தி ஆகிறது.

உணவுக்கு குழைவை சேர்த்து, அதை சுலபமாக வயிற்றுக்குள் அனுப்புவது எச்சில்தான். அது இல்லையேல், உங்களால் சரளமாக பேச முடியாமல், வாய் ஒட்டிக்கொள்ளும்.

வாயில்தான் ஜீரணம் (Digestion) துவங்குகிறது. அதை செயல்படுத்தும் Ptyalin என்கிற 'என்ஸைம்' எச்சிலில்தான் இருக்கிறது.

எச்சிலில் உள்ள தற்காப்பு புரோட்டீன் கள்தான் வாயில் ரணங்கள் வராமல் தடுத்து காப்பாற்றுகின்றன. முத்தங்களை மென்மை யாக்குவது எச்சில்தான். இருப்பினும், வாய்க்குள் இருக்கும் வரையில்தான் எச்சிலுக்கு இவ்வளவு மதிப்பு.

பிரபல மனோதத்துவ ஆய்வாளர் அந்தோணி ஸ்ட்டோர் இதை கச்சிதமாக (தர்மசங்கடமாக) விளக்குகிறார்.

'வாய்க்குள் இருக்கும் உங்கள் எச்சிலை விழுங்குங்கள். இதை எவ்வளவு முறை வேண்டுமானாலும் செய்வீர்கள். சரி, உங்கள் எச்சிலையே டம்ளர் ஒன்றில் துப்புங்கள். பிறகு, அதில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து தண்ணீர், சர்க்கரை எல்லாம் சேர்த்து... இப்போது அதை ஒரே மடக்கில் குடிப்பீர்களா? மாட்டீர்கள்! வாயில் இருந்து வெளியே வந்த மறுவிநாடி எச்சில் தன் குடியுரிமையை இழந்துவிடுகிறது.

இந்தியா மட்டும் இல்லை. ஆசியா முழுவதும் பொது இடங்களில் எச்சில் துப்பும் பழக்கம் பரவலாக உண்டு.

அமெரிக்காவில் 19ம் நூற்றாண்டு முடியும் வரை, யாரை பார்த்தாலும், எல்லா இடங்களிலும் எச்சில் துப்பிக்கொண்டே இருப்பர்.

அப்போது முக்கால்வாசி அமெரிக்கர்களுக்கு புகையிலை மெல்லும் பழக்கம் இருந்தது. துப்புவதற்கான கிண்ணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் கூட அங்கே நிறைய இருந்தன.

'மேஜை, நாற்காலிகள் மீது மட்டும் எச்சில் துப்பாதீர்கள்!' என்று எழுதப்பட்ட போர்டுகள் பல கட்டடங்களில் வைக்கப்பட்டன.

இப்படி கண்ட இடத்தில் துப்புகிற கலாச்சாரத்தைப் பார்த்துவிட்டு ஆஸ்கர் ஒயில்டு, 'அமெரிக்கா என்பது பிரம்மாண்டமான ஒரு எச்சில்' என்றார்.

இப்போது அங்கே யாரும் பொது இடங்களில் எச்சில் துப்புவது இல்லை.

இந்தியாவிலும் அடுத்த தலைமுறையினர் தெருவில் எச்சில் துப்ப மாட்டார்கள் என்பது என் நம்பிக்கை.

அம்மா! ப்ளீஸ் செஞ்சுத்தாங்கம்மா!

இது 'வாழைக்காய் பிங்கர்ஸ்' செய்முறை நேரம்.

தேவையானவை: விரல் நீளத்தில் நறுக்கப்பட்ட வாழைக்காய் துண்டுகள் - 10, எண்ணெய் - பொரிக்க, பொடித்த கார்ன் ப்ளேக்ஸ்- தேவையான அளவு, பிரட் தூள் - 2 டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.

பேஸ்ட் தயாரிக்க: மைதா, அரிசி மாவு - தலா அரை கப், மிளகாய் தூள், சீரகத்தூள், மல்லித்தூள் - தலா அரை டீஸ்பூன், டொமேட்டோ கெட்ச் அப், சோள மாவு (கார்ன்ப்ளார்) இஞ்சி - பூண்டு விழுது, சோயா சாஸ் - தலா ஒரு டீஸ்பூன், உப்பு - ருசிக்கேற்ப.

செய்முறை: 'பேஸ்ட்' செய்ய கொடுத்துள்ளவற்றை ஒன்றாக கலந்து, சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியான விழுதாக பிசைந்து கொள்ளவும்.

ப்ளெய்ன் கார்ன்ப்ளேக்ஸை நொறுக்கி, அதனுடன் பிரட் தூள் உப்பு சேர்த்து கலந்து தனியே வைக்கவும்.

வாழைக்காயில் சிறிது உப்பு, மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும்.

பாதி வெந்ததும் இறக்கி, தண்ணீரை வடிக்கவும்.

அரைவேக்காடாக வெந்த வாழைக்காய் துண்டை, தயார் செய்துள்ள பேஸ்டில் தோய்த்து, பிரட் தூளில் புரட்டி எடுத்து, காயும் எண்ணெயில் போட்டு பொன்னிற மாக பொரித்து எடுக்கவும். சாஸ் உடன் பரிமாறலாம்.

மாலை நேரத்துக்கு கலோரி மிகுந்த சத்தான டிஷ் இது,

என்றென்றும் அன்புடன், அங்குராசு.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us