தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/அதிமேதாவி அங்குராசு !

அதிமேதாவி அங்குராசு !

அதிமேதாவி அங்குராசு !


PUBLISHED ON : அக் 08, 2010

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 08, 2010


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அனைவருக்கும் எனது அன்பு.

எதிர்ல இருக்கு ; ஆனா இல்ல !

89 வயதான ஒரு பிரிட்டிஷ் பாட்டியம்மா, தன் வீட்டிற்கு எதிர்வரிசையில் இருக்கும் தபால் நிலையத்திற்கு போவதற்காக 4 பஸ்கள் மாறி, 14 மைல் தூரம் பயணம் செய்யறாங்க.

ஏன்னா... அவங்க வீட்டிற்கு வெளியிலிருக்கும் சாலையை, கிராஸ் செய்து எதிரே போறதுக்கு எங்கேயும் ஜீப்ரா கோடுகள் போட்ட கிராசிங்கே இல்லையாம். இதைப்பத்தி 'டெய்லி எக்ஸ்பிரஸ்' அப்படிங்கற அந்த ஊர் நாளேட்ல வந்த செய்தி, 'நேன்சி அண்டர்வுட்' என்ற பெயர் கொண்ட அந்த பாட்டி வசிக்கும் ஊரிலிருக்கும் சாலை மீது கணக்கற்ற வாகனங்கள் தொடர்ச்சியாகவும், வேகமாகவும் போய் கொண்டே இருப்பதால் அவரால் சாலையை கடந்து எதிர்புறமாக போகவே முடிவதில்லை. அப்படி போவதற்கு அவர் 4 பஸ்கள் மாறி மொத்தம் 90 நிமிடங்கள் பயணம் செய்ய வேண்டியிருக்கிறது. அவருக்கு கண் பார்வையும் பலவீனமாக இருப்பதோடு, வாக்கிங் ஸ்டிக் உதவியோடுதான் மெதுவாக நடக்க முடிகிறது. 'ரோட்டுக்கு எதிர்புறம் போவதற்கு வேறு எந்த வழியுமில்லை. என்ன செய்வது?'ன்னு அவங்க பேட்டி கொடுத்திருக்காங்க.

அம்மா ! ப்ளீஸ் செஞ்சுதாங்கம்மா !

நான்கு பச்சை வாழைப்பழத்திற்கு 100 கிராம் அரிசி மாவு என்ற கணக்கில் தேவைக்கு ஏற்ப பழங்களையும் அரிசி மாவையும் எடுத்து கொள்ளவும். பின் அதனுடன் சர்க்கரை சேர்த்து நீர்விட்டு குழைத்து கொள்ளவும். பிறகு தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் நெய்விட்டு தோசை போல மசாலா மாவை தேய்த்து பின் வேக வைத்து எடுக்கவும். கமகம வாழைப்பழ தோசை தயார்.

என்னால் முடியும் !

டயோட்டா கார் தயாரிக்கும் நிறுவனம் ஜப்பானில் இருக்கிறது. புகழ்பெற்ற நிறுவனங்களில் இதுவும் ஒன்று. இப்போது இந்த நிறுவனம் பெட்ரோலும், பேட்டரியும் இணைந்து ஓடக் கூடிய கார்களை தயாரித்து வருகிறது. இதனால் பெட்ரோல் மிச்சமாவதுடன், புகையும் வராது. இந்த காருக்கு, 'பிரையஸ்' என்று பெயர் வைத்திருக்கின்றனர்.

பெட்ரோலும் பேட்டரியும் இணைந்து செயல் படக்கூடிய கார்களை தயாரிப்பது இயலாத காரியம் என்று ஜெனரல் மோட்டார்ஸ் என்னும் மற்றொரு மிக பெரிய நிறுவனம் கைவிட்டுவிட்டது. ஆனால், டயோட்டா இதே காரை ஒரு நிமிடத்துக்கு ஒரு கார் விகிதம் தயாரித்து விற்று வருகிறது.

பறவை என்னும் டீச்சர் !

பறவையை பார்த்துதான் மனிதன் விமானம் செய்தான். விமானம் பறக்க வேண்டும் என்றால் சூழ்நிலைகள் சாதகமாக இருக்க வேண்டும். ஆனால், பறவைகளை பாருங்கள். மரக்கிளையிலிருந்து உடனே பறக்க ஆரம்பித்து விடும். இதன் காரணம் என்ன? இயற்கையிலேயே பறவைகள் பறப்பதற்கு படைக்கப்பட்டுள்ளன.

நினைத்த மாத்திரத்தில் பறக்க முடியும் என்ற உள்ளுணர்வு பறவைகளுக்கு உண்டு. பறவைகளுக்கு அப்படி ஒரு வசதி உண்டு. பறவைகளை போல் நம்மால் நினைத்த மாத்திரத்தில் எதையும் செய்ய முடியாது என்பது உண்மை. ஆனால், ஒரு காரியத்தை செய்ய ஆரம்பித்தால் சக்தி கிடைக்கும் என்ற நம்பிக்கையை இது தருகின்றன.

ஒரு சிறகு ஒடிந்த பறவை, மரக்கிளையில் உட்கார்ந்திருக்கிறது. தனது இறக்கையை ஆட்டி ஆட்டி பறக்க முயற்சி செய்கிறது. தன்னை கைதூக்கிவிட யாராவது வருவார்கள் என்று காத்திருந்தால், அந்த பறவை மரக்கிளையில் இருந்து கீழே விழ வேண்டியதுதான். முயற்சி செய்தால் முடியாதது எதுவும் இல்லை. மேலும், பல காரியங்களை செம்மையாக செய்வதற்கு முயற்சி உதவி செய்யும்.

பெருமைமிக்க பாரதம் !

உலகின் முதல் பல்கலைக்கழகம் கி.மு., 700-ம் ஆண்டில் தட்சசீலத்தில் அமைக்கப்பட்டது. அப்போதே உலகின் பல நாடுகளிலிருந்து பத்தாயிரத்து ஐந்நூறு மாணவர்கள் இங்கு வந்து சேர்ந்து படித்தனர். மொத்தம் 60-க்கும் மேற்பட்ட பாடப்பிரிவுகளில் கல்வி போதிக்கப்பட்டது. பதின்மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் இந்த உலகின் முதல் பல்கலைக்கழகத்தை பக்தியார் கில்ஜி என்பவன் அழித்து நொறுக்கினான். ஆசியாவின் முதல் மருத்துவ கல்லூரியை நிறுவியதும் நமது பாரதம்தான். 1835-ம் ஆண்டு பிப்., 20-ம் நாள் அன்று கொல்கத்தா மெடிக்கல் காலேஜ் செயல்படத் தொடங்கியது. டாக்டர் எம்.எஸ்.பிரேம்லி என்பவர் அப்போது கல்லூரி முதல்வராக பொறுப்பேற்றார். பண்டைய இந்தியர்கள் கல்வியில் மிக சிறந்து விளங்க கி.மு., நான்காம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட நாளந்தா பல்கலைக்கழகம்தான் உதவியது. இப்போதும் ஆசிரியர்களும், மாணவர்களும் கல்வியை ஒழுங்காக கற்று கொள்ள வேண்டும் என்று உறுதி எடுத்து கொள்வது பண்டைய இந்தியர்களின் மரபணுக்கள் நம் செல்களில் இருப்பதால்தான்.

நானோ டெக்னாலஜி !

இன்று கம்ப்யூட்டர் பற்றி அனைவரும் பேசுகிறோம். அடுத்து 'நானோ டெக்னாலஜி' பற்றி அனைவரும் பேசுவோம். இந்த 'நானோ டெக்னாலஜி' என்றால் என்ன தெரியுமா?

'நானோ மீட்டர்' என்பது ஒரு மீட்டரில் நூறு கோடியில் ஒரு பங்கு. ஒரு திடப் பொருள் நானோ மீட்டர் அளவுக்கு சிறிதாக்கப்படும்போது, எக்கச்சக்க செயல்திறனையும் செயல் வேகத்தையும் பெறுகிறது. இந்த சிறப்பு குணங்களையும் அதன்மூலம் உருவாக்கப்படும் கண்டுபிடிப்புகளையும் பற்றிய படிப்புதான் நானோ டெக்னாலஜி. இந்த தொழில்நுட்பத்தை எலெக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல்ஸ், மருத்துவம் உள்பட அனைத்து துறைகளிலும் பயன்படுத்த முடியும்.

என்றென்றும் அன்புடன், அங்குராசு. ***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us