தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!


PUBLISHED ON : செப் 26, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 26, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!

காலணி ஆதிக்கம்!

மனிதர்கள் பல்வேறு தேவைகளுக்காக காலணி அணியத் தொடங்கினர். நடக்கும் போதும், ஓடும் போதும், கால்களில் கல்லும், முள்ளும் குத்தாமல் இருக்கவும், சுடு வெப்பம், கடுங்குளிர் மற்றும் பனியில் இருந்து காக்கவும் முதலில் அணியப்பட்டது. காலப்போக்கில் இது அழகு உள்ளிட்ட சிறப்பான பிற தேவை களுக்காக அணியப்படுவதாகி விட்டது.

காலணிகளில் எளிதாக அணிந்து கொள்ளவும், கழற்றவும் வசதியான செருப்பு, மிதியபடி போன்றவையும், புறங்கால்களையும் குதி கால்களையும் மூடி இருக்கும் ஷû, பூட்ஸ் முதலிய கால் பூட்டணிகளும், கணுக்கால், கெண்டைக்கால், முழங்கால் வரை மூடி யிருக்கும் கால் பூட்டணிகளும் உண்டு.

கால் பூட்டணிகள் பெரும்பாலும், துணியால் அல்லது தோலால் ஆன வாரினால் கட்டி, முடிச்சு போட்டு பூட்டப்பட்டிருக்கும். பல்வேறு இடச்சூழல்களுக்கும், தொழில் களுக்கும் தட்பவெப்பத் தேவைகளுக்கும் ஏற்ப காலணிகள் பல வகையாகும்.

முதன் முதலில் காலில் செருப்பு முதலிய காலணிகளை மனிதர்கள் எப்போது அணிந் தார்கள் என்பதை அறிவது கடினம். ஆனால், எகிப்தியர்கள் கி.மு.3700ம் ஆண்டுக்கு முன்னரே காலணிகள் அணிந்ததாக தெரிகிறது. அண்மையில் (2010ல்) 5,600 ஆண்டுகளுக்கு முன்னர் பயன்படுத்திய தோலால் ஆன காலணிகளை அர்மேனியக் குகையில் கண்டுபிடித்துள்ளனர். பழங்காலத்தில் 2000 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியர்களும், கிரேக்கர்களும், ரோமானியர்களும் பல்வேறு வகை காலணிகள் அணிந்ததற்கு புடை சிற்பங்களும், பிற தொல்லியல் சான்றுகளும் உள்ளன. சீனாவில் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே மரம், துணியில் ஆன செருப்பு வகைகளை பயன்படுத்தினர்.

இத்தாலியில் ரோமானியர்களுக்கு முன்னமே அங்கிருந்த சுக்கன் மக்கள் கால் விரல் நுனிப்பக்கம் மேல்நோக்கி உயர்ந்து இருக்கும்படியான காலணிகள் அணிந்திருந் தனர். பழங்காலம் தொட்டே கால்களில் காப்பணியாக மட்டும் அணியாமல், ஒரு அழகு அணியாகவும் அணிந்து வந்துள்ளனர்.

மிக அண்மைக்காலம் வரை காலணிகள் விலங்குத் தோலால் செய்யப்பட்டன. ஒரு சில மரத்தாலும் ஆனவை. ஆனால், அண்மைக் காலத்தில் தோல் மட்டுமின்றி, தோல் போன்ற பலவகையான செயற்கைப் பொருட்களாலும், முரட்டுத் துணிவகைகளாலும், நெகிழி, ரப்பர் போன்றவற்றாலும் செய்யப்படுகின்றன. ஏழ்மையான நாடுகளில் பலர் எளிமையான காலணிகள் அணிந்தோ அல்லது அணியா மலோ இருந்தாலும், பல நாடுகளில் வாழ் வோருக்கு காலணிகள் இன்றியமையாத ஒரு தேவை ஆகும்.

அம்மா! ப்ளீஸ் செஞ்சுதாங்கம்மா!

இது, 'மங்களூர் போண்டா' செய்முறை நேரம்.

தேவையானவை: மைதா - 2 கப், புளித்த தயிர் - 1 கப், பெருங்காயம் - 1 சிட்டிகை, பச்சை மிளகாய் - 2, தேங்காய்த் துருவல் - 1 டேபிள் ஸ்பூன், இஞ்சி- சிறு துண்டு, சமையல் சோடா - 1 சிட்டிகை, நெய் - 2 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் தேவைக்கு.

செய்முறை: தேங்காய்த் துருவல், இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைக்கவும். அகலமான பாத்திரத்தில் உப்பு, சமையல் சோடா, நெய் ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்க வேண்டும். நன்றாக நுரை வந்ததும் மைதா மாவைப் போட்டு அதனுடன் அரைத்த விழுதையும் சேர்க்க வேண்டும். இந்தக் கலவையில் புளித்த தயிர், பெருங் காயம் சேர்த்து நன்றாகப் பிசையவும். கலவை கொஞ்சம் இளகிய பதமாக இருக்க வேண்டும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்துக் கொள்ளலாம். வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பிசைந்த மாவை கரண்டியில் அள்ளி எண்ணெயில் விட வேண்டும். நன்றாக வெந்ததும் எடுக்கவும். தேங்காய்ச் சட்டினியுடன் சாப்பிட அருமையாக இருக்கும் இந்த மங்களூர் போண்டா.

என்றென்றும் அன்புடன்,

அங்குராசு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us