தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!


PUBLISHED ON : அக் 24, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 24, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!

சீசன் திறந்த சிப்பி!

முத்துக்கள் பலவிதம். அதில் நல்ல முத்துக்கள் விலை மதிப்பற்றவை. இந்த அழகிய முத்து கடலில் வாழும் சின்னஞ்சிறு கடல் உயிரினத்தின் சிருஷ்டி. அந்த உயிரினத்தை சிப்பி என்கின்றனர். சிப்பி நிலத்திலும் ஊர்ந்து செல்லும்; நீரில் வாழும். கடலில் மீன்களோ, பெரிய சிப்பிகளோ இதனை விழுங்கும் நிலை ஏற்படு வது உண்டு. அவற்றிடம் இருந்து தப்புவதற்காக கரைக்கு வந்தால் மனிதன் இதனைப் பிடித்து சாப்பிட்டு விடு கிறான். இத்தகைய ஆபத்தில் இருந்து தப்பு வதற்கான உடல் பாகம்தான் உடல் மீதான கனத்த ஓடு. இந்த ஓட்டினுள் தான் நல்முத்துக்கள் உருவாகின்றன. சிப்பிக்குள் முத்து உள்ளது என்பது 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டது.

பசியால் வாடிய சீனன் ஒருவன் உணவுக் காக சிப்பியை திறந்து பார்த்த போது சிப்பிக் குள் ஒளி வீசும் பொருளைக் கண்டான். அந்த பொருளே பின்னர் 'முத்து' என்று பெயர் பெற்றது.

முத்து உருவாவது எப்படி என்றால் தற் செயலாக சிப்பி ஓட்டினுள் மணற்பரல் புகுந்து விடுகிறது. இதன் மேல் கால்சியம் கார்பனேட் எனப்படும் சிப்பி ஓட்டின் மூலப் பொருள் படிந்து படிந்து முத்து உருவாகிறது. உருண்டை வடிவமான வெண்முத்து ஒளி வீசுகிறது. இதுவே நன் முத்து. முத்து வெண்ணிறமாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. கரு முத்தும், இளஞ்சிவப்பு முத்தும் கூட உண்டு. இப்போது நவீன உத்தி களைக் கையாண்டு செயற்கை முறையிலும் முத்து தயாரிக்கின்றனர். அதன்படி மணற் பரல்களை சிப்பி ஓட்டினுள் வைத்து பதப் படுத்துகின்றனர். இரண்டு, மூன்று தினங் களில் அதனை நீரில் இருந்து எடுக்க, முத்து பளிச்சிட்டு வெளி வரும். இவ்வாறான செயற்கை முத்துக்களை தயாரிப்பதில் ஜப்பான் முன்னணி வகிக்கிறது. கடைகளில் கிடைக்கும் முத்துக்கள் பெரும்பாலும் இவ்வாறு பதம் செய்த செயற்கை முத்துக்களே.

தமிழகத்தில் தூத்துக்குடியில் பாண்டியர் காலத்தில் முத்து எடுக்கப்பட்டது. அதனாலேயே இது 'முத்துநகர்' என்று பெயர் பெற்றது. இதுவரை கிடைத்த முத்துக்களில் 1934ம் ஆண்டு மே மாதம் 7ம் தேதி பிலிப்பைன்ஸ் நாட்டில் கிடைத்த 9.5 அங்குல நீளம், 5.5 அங்குல விட்டம், 14 பவுண்ட் எடை கொண்ட முத்துதான் உலகின் மிகப் பெரியதாக கருதப்படுகிறது.

நெட்டால முடியல: பெட்டால முடிஞ்சது!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள தகோ தேசிய பூங்காவுக்கு நாதன் பிரான் என்பவரது குடும்பம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் சுற்றுலா சென்றனர். அப்போது அவர்களுடன் சென்ற அவர்களது வளர்ப்பு நாய் மர்பி, காட்டுக்குள் காணாமல் போய்விட்டது. இது பற்றி அவர்கள் சமூக வலைதளங்களிலும் குறிப்பிட்டனர். ஆனாலும், கோல்ரிட்ரீவர் வகையைச் சேர்ந்த அந்த நாய் பற்றி தகவல் ஏதும் இல்லை. இதற் கிடையே காட்டில் இரண்டு ஆண்டுகளாக அலைந்து திரிந்த அந்த நாய், எப்படியோ காட்டில் இருந்து வெளியேறி, தனது எஜமானரின் வீட்டை சரியாக தேடிக் கண்டு பிடித்து வந்து சேர்ந்தது.

வெல்டன் ரீவர்.

என்றென்றும் அன்புடன், அங்குராசு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us