தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!


PUBLISHED ON : நவ 21, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 21, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!

ரகசிய ஆயுதம் - குரங்கு!

சீன ராணுவம், தனது விமானப் படையில் பயிற்சியளிக்கப்பட்ட 'மாகாக்' இன குரங்கு களைச் சேர்த்துள்ளது. பெய்ஜிங் அருகே உள்ள ரகசிய விமானப்படைத் தளத்தில் இக்குரங்குப் படை பணியமர்த்தப்பட்டுள்ளது.

'சீன ராணுவத்தின் ரகசிய ஆயுதம்' என இந்தக் குரங்குப் படையை ராணுவ வீரர்கள் செல்ல அடைமொழியுடன் குறிப்பிடுகின்றனர்.

பெய்ஜிங் அருகேயுள்ள ரகசிய விமானப் படைக்கு பறவைகளால் பெரும் இடையூறு ஏற்படுகிறது. போர் விமானங்கள் புறப்படும் போதும், தரையிறங்கும் போதும் பறவைகள் அவ்விமானங்களில் சிக்குவதால் விபத்து ஏற்படுகிறது.

அந்தப் பறவைகளை விரட்ட சீன ராணுவம் பல்வேறு முயற்சி களை எடுத்தும் பயனில்லை. வெடிகளை வெடித்தும், பயமுறுத்தும் காக்கைகள் மூலமும், எல்லாவற்றுக்கும் மேலாக துப்பாக்கிகளால் சுட்டும் சீன ராணுவம் இப்பிரச்னைக்குத் தீர்வுகாண முயன்றது. ஆனால், பறவைகளால் தொடர்ந்து சிக்கல் நீடித்தது.

இதையடுத்து, பறவைகளின் கூடுகளைக் கலைத்து எறிவதற்காக சீன ராணுவம் குரங்குகளுக்குப் பயிற்சி யளித்தது, அவற்றை ராணுவத்தில் இணைத்துள்ளது. 'மாகாக்' இன குரங்குகளுக்கு இந்த பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

பயிற்சியாளர்களின் விசில் கட்டளைக்குக் கீழ்ப்படியும் இந்த 'குரங்கு வீரர்கள்' அங்குள்ள மரங்களில் பறவைகளின் கூடுகளைத் தேடிக் கண்டறிந்து அவற்றைப் பிரித்து வீசுகின்றன. இதனால், பறவைகள் வேறு இடங்களுக்கு இடம் பெயர வேண்டிய நிர்பந்தம் உருவாகிறது.

ஒரு குரங்குக்கு தலா 6 கூடுகள் வீதம் குறிப்பிட்ட நேரத்துக்கள் இந்தக் குரங்குப் படை 180 பறவைக் கூடுகளைப் பிய்த்து வீசிவிட்டது.

விலங்குகளை ராணுவ சேவைக்காகப் பயன்படுத்துவது இது முதல் முறையல்ல... கடலில் வைத்திருக்கும் கண்ணி வெடிகளைக் கண்டறிய அமெரிக்க ராணுவம் டால்பின்களைப் பயன் படுத்தியது குறிப்பிடத்தக்கது.

நாய்கள், ராணுவம் மற்றும் காவல் துறையில் முக்கிய அங்கம் வகிக் கின்றன. அமெரிக்கா மேற்கொண்ட ஒசாமா பின்லேடன் தேடுதல் வேட்டையில் ஒசாமாவைக் கண்டறிய பெல்ஜியன் ஷப்பர்டு இன நாய் கெய்ரோ முக்கியப் பங்கு வகித்தது குறிப்பிடத் தக்கது.

அட்டையாகி விட்டதா பிரெட்?

பூரெட் துண்டுகள் காய்ந்து அட்டை போல கெட்டியாக இருக் கின்றனவா?

அவற்றை பிய்த்து மிக்ஸியில் போட்டு, கூடவே பச்சை மிளகாய் துண்டுகள், நறுக்கிய வெங்காயம், கொஞ்சம் உப்பு ஆகியவற்றையும் போட்டு கொரகொரப்பாக அரைத்து, பிசைந்து கொள்ளுங்கள். வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் பக்கோடாக்களை பொரித்தெடுத்தால்... மொறு மொறுப்புடன் மஞ்சூரியன் போல சுவையாக இருக்கும்.

என்றும் அன்புடன், அங்குராசு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us