sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

சிறுவர் மலர்

/

அதிமேதாவி அங்குராசு!

/

அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!


PUBLISHED ON : ஜூலை 15, 2016

Google News

PUBLISHED ON : ஜூலை 15, 2016


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!

உங்கள் பாதையில் ஒரு ரயில் - லைனில் காத்திருங்கள்!

'கூகூகூகூகூகூ' வென கரும்புகையை காற்றில் அனுப்பியபடியே செல்லும் ரயில், ஒரு இனம் புரியாத இன்ப காட்சி!

அன்று முதல் இன்று வரை ரயிலில் மாறாமல் இருப்பது பச்சைகொடியும், சிகப்புக் கொடியும்தான்.

ரயிலில் குதிரை!

ஆரம்ப கால உபயோகத்தில் இருந்த கரி எஞ்சின், 1,200 குதிரை சக்தியுடையது. அடுத்து வந்த டீசல் எஞ்சின், 2,400 குதிரை சக்தி திறனுடையது. இப்போது பெரும்பான்மையான பயன்பாட்டில் இருக்கும் மின்சார எஞ்சினின் திறன் என்ன தெரியுமா? 4,620 குதிரை சக்தி, லேட்டஸ்டாக, 6 ஆயிரம் குதிரை சக்தி கொண்ட எஞ்சின்கள் தயாராகி வருகின்றன.

ஒரே நேரத்தில் ஆறு!

ரயில் எஞ்சினில் ஒரே நேரத்தில் ஆறு எஞ்சின்கள் இயங்கும். ஒன்று அல்லது இரண்டு எஞ்சின்கள் பழுதானாலும், ரயில்கள் பாதியில் நிற்காது. மின் இணைப்பு கோளாறு ஏற்பட்டால் மட்டுமே ரயில் நிற்கும். அப்போது, ரயிலுக்கு பெரிதும் கை கொடுப்பது, 'பெயில் சேப் சிஸ்டம்' எஞ்சின் நின்றாலும் ரயில் சில கி.மீ., தூரம் செல்லும்.

புள்ளிகளும், பயணமும்!

கன்ட்ரோல் ரூம், ரயிலின் டிரைவர் மற்றும் ரயில் எங்கு செல்கிறதோ அந்த ஸ்டேஷன் மாஸ்டர் இந்த மூன்று புள்ளிகளின் கூட்டு இயக்கம்தான் ரயில் பயணம்.

எல்லா ஸ்விட்ச்சுகளுக்கும் ஒரு சாவி!

ஒவ்வொரு எஞ்சினுக்கும் நான்கு சாவிகள் இருக்கும். முதல் சாவி, லாக்காயிருக்கும் பிரேக்கை ரிலீஸ் செய்யவும், இன்னொரு சாவி பிரேக் போடுவதற்கும், மூன்றாவது சாவி ரயில் நகரவும், நான்காவது சாவி ஒட்டு மொத்த எலெக்ட்ரிக் ஸ்விட்ச்சுகளை இயக்கவும் பயன்படுகிறது.

டிரைவர் கையொப்பம் போட்டுவிட்டுதான் சாவியை வாங்க வேண்டும். வேறு சாவிகளை மாற்றி போட்டு ரயிலை இயக்க முடியாது.

பிரேக் சிஸ்டம்!

ரயில்களின் பிரேக், 'வேக்கம்' சிஸ்டத்தில்தான் இயங்குகிறது. காலி சிலிண்டர்களை ஓப்பன் செய்யும்போது, வெளிக்காற்று உள்ளே நுழையும் வேகத்தில் தான் பிரேக் சிஸ்டம் இயங்கி வருகிறது. இப்போது தான், 'கம்ப்ரஸர்' சிஸ்டத்திலும் பிரேக் போடும் முறையை நடைமுறைப் படுத்தியிருக்கின்றனர்.

பேருதான் எக்ஸ்பிரஸ் ஆனா - லேட்டாத்தான் வரும்!

எக்ஸ்பிரஸ் ரயிலுக்கும், பாஸஞ்சர் ரயிலுக்கும் என்ன வித்தியாசம்?

'பாஸஞ்சர் ரயில், ஒவ்வொரு ஸ்டேஷனிலும் நின்று லேட்டாக வரும். எக்ஸ்பிரஸ் ரயில் எங்கேயும் நிற்காமல் லேட்டாக வரும்' என்பது பிரபல ஜோக்.

அதற்கு டிரைவர்கள் என்ன சொல்கின்றனர்? '100 கி.மீ., வேகத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் வந்தாலும், ஸ்டேஷன்களில் உள்ள லூப் லைன்களில் கிராஸ் செய்யும் போது வெறும், 15 கி.மீ., வேகத்தில்தான் போகவேண்டும்' என்பது ஆணை.

இந்தமாதிரி, ஆறு ஸ்டேஷன்கள் வந்தால் எக்ஸ்பிரஸ் ரயிலும் பாஸஞ்சர் போல் லேட்டாகத்தான் வரும்.

ஆன்டி தான் டிசைட் பண்ணும்!

இப்போது ஒரு ரயில் போகும்போது அதற்கு முன்னால் குறிப்பிட்ட மீட்டருக் குள் வேறு ஒரு ரயில் இருந்தாலோ அல்லது ஒரே ஒரு பெட்டி கழண்டு நின்று போயிருந்தாலோ தண்டவாளத்தில் சிறு விரிசல் ஏற்பட்டிருந்தாலோ, 'பிரொடக் ஷன் வார்னிங் சிஸ்டம்' என்ற கருவி, ரயிலை தானாக நிறுத்திவிடக்கூடிய புதிய தொழில்நுட்பத்தை கண்டறிந்துள்ளனர்.

விரைவில் ஒவ்வொரு எஞ்சினுக்கும் பார்கோடு எண் தரப்பட்டு, சாட்லைட்டுடன் இணைக்க உள்ளனர்.

சில நேரம் நீங்கள் யாரையாவது மொபைலில் தொடர்பு கொள்ளும் போது, நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் வேறு ஒருவருடன் பேசிக் கொண்டிருப்பதால் தயவு செய்து நீங்கள் லைனில் காத்திருக்கவும் என்று சொல்கிற மாதிரி, 'நீங்கள் போகும் பாதையில் வேறு ஒரு ரயில் போய்க்கொண்டிருக்கிறது. நீங்கள் லைனில் காத்திருங்கள்!' என்று இந்த ரயிலை நிறுத்திவிடும் சாட்டிலைட்.

இதற்கு, 'ஆன்டி சொல்யூஷன் டிசைட்' என்று பெயர்.

அர்ஜென்ட்டுன்னா... ரயில நிறுத்து!

ரயில் எஞ்சின்களில், 'ஹை வோல்டேஜ்' மின்சாரம் இருப்பதால் தண்ணீருடன் கூடிய டாய்லட் வசதி கிடையாது.

எனவே, டிரைவர்களுக்கு இயற்கை உபாதைகள் ஏற்பட்டால் சூப்பர் பாஸ்டாக இருந்தாலும், ஐந்திலிருந்து பத்து நிமிடம் வரை ரயிலை நிறுத்திக் கொள்ள அனுமதி தந்திருக்கிறது ரயில்வே நிர்வாகம்.

என்றென்றும் அன்புடன்,

அங்குராசு.






      Dinamalar
      Follow us