sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

சிறுவர் மலர்

/

அதிமேதாவி அங்குராசு

/

அதிமேதாவி அங்குராசு

அதிமேதாவி அங்குராசு

அதிமேதாவி அங்குராசு


PUBLISHED ON : ஆக 12, 2016

Google News

PUBLISHED ON : ஆக 12, 2016


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!

கணக்கா கடன் வாங்கணும்!

நம்ம சம்பளம் 1000 ரூபாய்னா, நம்ம செலவு தொள்ளாயிரத்து தொன்னூற்றி ஒன்பது ரூபாயோட நின்றிடணும்.

சரி, ஏதோ நெருக்கடி.

உங்க அவசர தேவைக்கு நகையை வங்கியில் வைத்து நகைக்கடன் பெற போகிறீர்கள். இரண்டு தங்க வளையல்களை அடமானம் வைக்க நினைக்கிறீர்கள் என்று வைத்து கொள்வோம். இரண்டு வளையல்களையும் ஒரே நகைக் கடனாக போட்டு வாங்க வேண்டாம்.

அப்பா பெயரில் ஒருநகைக் கடனும், அம்மா பெயரில் ஒரு நகைக் கடனும் போட்டு வாங்கி கொள்ளுங்கள். அப்போதுதான் சிறுக சிறுக ஒரு வளையலுக்கான கடன் தொகையை கட்டி முடித்தவுடன், அந்த வளையல் உங்களுக்கு திரும்ப கிடைத்துவிடும்.

இரண்டு வளையல்களையும் ஒரே நகைக்கடனாக வைத்தீர் என்றால், முழுத் தொகையையும் கட்டி முடித்தால்தான் திரும்ப கிடைக்கும்.

ஒன்றுக்கு மேற்பட்ட நகைகளை அடமானம் வைத்து பணம் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், இரண்டு, மூன்று நகைக்கடன்களாக வைத்தால்தான் நகைக்கடனும் சிரமமில்லாமல் தீரும்.

ஒவ்வொரு கடன் தீரும்போதும் நம் கைக்கு ஒரு நகை வந்து சேரும்.

எல்லாரும் ஆசிரியரே, எல்லாரும் மாணவரே!

இன்று ஆண்டுக்கு ஆண்டு, மாதத்துக்கு மாதம் புதுப்புது விஷயங்கள் அறிமுகமாகின்றன. அவற்றை உடனுக்குடன் கற்றுக் கொண்டால்தான் முன்னேற்றம். ஒருவர் எவ்வளவுக்கெவ்வளவு புதிய விஷயங்களை வேகமாக கற்றுக் கொள்கிறாரோ அவ்வளவு வேகமாக அவர் வளரலாம். கற்றுக்கொள்ளாமல் இருக்கிறவர்கள் அப்படியே நிற்கவேண்டியதுதான். இந்த சூழ்நிலையில் எல்லாவற்றுக்கும் ஒரு ஆசிரியரை எதிர்பார்த்து கொண்டிருக்க இயலாது.

அதேசமயம், ஆசிரியர் இல்லாமல் நாமே கற்று கொள்வதும் சிரமம். இதற்கு என்ன செய்யலாம்? ரொம்ப சுலபம். ஆசிரியர், மாணவர் என்கிற வரையறையை மாற்றி விடலாம்.

எல்லாரும் ஆசிரியரே, எல்லாரும் மாணவரே என்ற சூழ்நிலையை உருவாக்கலாம். அதன்மூலம் எல்லாரும் பலதும் எளிதில் கற்றுக் கொள்ளலாம். யோசித்து பாருங்கள் முதல் முறையாக, 'ஸ்மார்ட் போன்' பயன்படுத்தியபோது உங்களுக்கு யார் அதை கற்றுத் தந்தனர்.

ஸ்மார்ட் போன் ஆசிரியர் என்று ஒருவரிடம் சென்று வகுப்பறையில் உட்கார்ந்து பாடம் படித்தீர்களா?

புதிதாக ஒரு தொலைக் காட்சியோ, வாகனமோ வாங்கும்போது, அதில் இருக்கும் கூடுதல் அம்சங்களை தெரிந்து கொள்ள ஒரு நிபுணரை எதிர்பார்த்தீர்களா அல்லது நீங்களே படித்து பார்த்து, அக்கம் பக்கத்தில் கேட்டு, முயற்சி செய்து கற்றுக் கொண்டீர்களா?

உதாரணமாக, நீங்கள் ஒரு புதிய மொழியை கற்று கொள்ள விரும்புகிறீர்கள். உங்கள் வீட்டிலேயே அந்த மொழியை பேசுகிற ஒருவர் இருந்தால், அவரிடம் தினமும் இரண்டு மணி நேரம் உட்கார்ந்து பாடம் படிப்பீர்களா அல்லது ஆரம்பத்தில் ஓரிரு அடிப்படை விஷயங்களை கற்ற பின்னர் அவற்றை முயற்சி செய்து சந்தேகம் வரும்போது அவரிடம் ஆலோசனை பெற்று முன்னேறுவீர்களா?

இப்படி அவரிடம் கற்று கொள்ளும்போது, பதிலுக்கு நீங்களும் அவருக்கு வேறு சில விஷயங்களை கற்று தரலாம்.

உங்கள் நண்பர்கள், உறவினர்கள் நெட்வொர்க்கில் இதுபோல் பல விஷயங்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்வதன் மூலம் எல்லாருக்கும் பலன்.

ஒருவரிடம் பாடம் படிப்பதை விட, நீங்கள் ஒரு நெட்வொர்க்கின் (அமைப்பின் குழுவின்) பகுதியாக இருந்தால், நாமும் கற்றுக் கொள்ளலாம், பிறருக்கும் கற்றுத்தரலாம். இதன் மூலம் விரைவாக பல விஷயங்களை தெரிந்து கொள்ளலாம். எல்லாவற்றுக்கும் வகுப்பறை, புத்தகம், ஆசிரியரை எதிர்பார்க்க வேண்டியதில்லை.

ஆனால், இது மேலோட்டமான பயிற்சிதானே? ஆழமாக கற்க இயலுமா?

எல்லா நேரங்களிலும் ஆழமான கல்வி அவசியமில்லை. மேலோட்டமாக கற்று கொள்ள வேண்டியதை மேலோட்டமாக கற்று கொள்வோம்.

பின், தேவை இருக்கிறவர்கள் ஆழமாக செய்து முறைப்படி அதிகம் கற்றுக் கொள்ளலாம். பபேயில் எல்லா பொருள்களையும் கொஞ்சம் ருசிபார்த்துவிட்டு, நமக்குப் பிடித்தவற்றை அதிகம் போட்டு சாப்பிடுவது போல!

புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளும் போது 70:20:10 என்ற விகிதத்தை நினைவில் வையுங்கள். Experience 70% Exposure 20% Education 10% அதாவது ஒரு விஷயத்தை புத்தகங்களில் படித்து 10% தெரிந்து கொள்ளலாம்.

அனுபவத்தின் மூலம் 70% தெரிந்து கொள்ளலாம். மீதமிருக்கிற 20% பிறருடைய அனுபவங்களை கேட்பது, நிபுணர்களுடன் பழகுவது போன்றவற்றின் மூலம் ஏற்படும்.

இங்கேதான் நமது நெட்வொர்க் அவசியப் படுகிறது. ஆக, நம்மால் இவ்வளவுதான் கற்றுக் கொள்ள இயலும் என்கிற மனோநிலையை மாற்றுங்கள்.

சரியான வழிகாட்டி நெட்வொர்க் அமைந்தால், ஒரே நேரத்தில் பல விஷயங்களை கற்று கொள்ளலாம். அதன்பிறகு அதில் நமக்கு விருப்பமானவற்றை, தேவையானவற்றை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

அடுத்து, நாம் கற்றுக்கொள்ள விரும்பும் விஷயங்களில் ஏற்கெனவே நிபுணர்களாக இருக்கிறவர்களுடைய நெட்வொர்க்கில் கலந்து பழக தொடங்குங்கள்.

'எனக்கு வகுப்பு எடுங்கள்' என்று அவர்களுடைய நேரத்தை வீணாக்காமல், நீங்களே அதை முயற்சி செய்து குறிப்பிட்ட சந்தேகங்கள், உதவியை மட்டும் அவர்களிடம் கேட்டு பெற்று கொள்ளுங்கள். அதன் மூலம் கற்றுக் கொள்ளுங்கள். பதிலுக்கு நீங்கள் கற்றதை புதிதாக வருகிறவர்களுக்கு சொல்லி தாருங்கள்.

அய்யோ! யம்மா வலிக்குதே!

நமக்கு ஏதாவது காயம் ஏற்பட்டா, 'ச்ச இந்த இடத்துல வந்து உயிர வாங்குதே'ன்னு அலுத்து கொள்வோம்.

எந்த இடத்துல வந்தாலும் வலி வலிதான்னு புரிஞ்சுக்கணும்.

தலை வலி, கழுத்து வலி, முதுகு வலி, வயிற்று வலி, மூட்டு வலின்னு வலிகளுக்கா பஞ்சம்? வஞ்சனையில்லாம இருக்கின்றவே!

இன்று இங்கே, 'முதுகு வலியை' பார்ப்போம்.

இளைய தலைமுறையினருக்கான முதுகுவலிக்கு அவர்கள் வாழும் முறை (உணவு+பழக்க வழக்கங்கள் + வாழும் சூழல்) காரணமாகிறது.

முதியோர்களுக்கான முதுகுவலிக்கு பெரும்பாலும் எலும்பு தேய்மானம் முக்கிய காரணம். பெண்களுக்கு கால்சியம் சத்து குறைபாடு காரணமாக முகுதுவலி அவஸ்தைப்படுத்தலாம்.

சில பயனுள்ள வார்த்தைகள்...

* உட்காருகையில், நடக்கையில் முதுகை நேராகவே எந்நேரமும் வைத்திருங்கள்.

* குஷன் நாற்காலி, குஷன் சோபா, குஷன் மெத்தை எல்லாம், 'சூப்பர்' குஷிதான். ஆனால், முதுகுவலிக்கு அவைதான் காரணம் என்றால், அந்த குஷன் வேண்டவே வேண்டாம்.

* கம்ப்யூட்டர் பணிகளில் இருப்பவர்கள், ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறையேனும் ஐந்து நிமிடங்கள் எழுந்து சின்ன வாக்கிங் போகலாம்!

அங்கங்கே மாறும் வண்ணம்!

பச்சை நிறம்: - இது சீனா, ஹாங்காங், தைவான்ல!

நீல நிறம்: - இது ஜெர்மனி, ரஷ்யா, ஸ்வீடன், இத்தாலி!

மஞ்சள் நிறம்: - இது ஆஸ்திரேலியா, பிரேசில், கிரீஸ், மலேசியா, நார்வே!

சிவப்பு நிறம்: இது அர்ஜென்டினா, கனடா, ஜப்பான், இந்தியா, பெல்ஜியம்ல!

ஆரஞ்சு நிறம்: - இது இந்தோனேஷியா, நெதர்லாந்து,

வெள்ளை நிறம்: - இது சான்மரினோல!

சாம்பல் நிறம்: - இது பிலிப்பைன்ஸ்ல!

இவையெல்லாம் என்ன நிறங்கள். கொஞ்சம் யோசிங்க. இப்ப தெரிஞ்சிருக்குமே தபால் பெட்டிகளின் நிறங்கள் என்பது. வேறு சில நாடுகளில் என்னென்ன வண்ணங்களில் தபால்பெட்டி காணப்படுகிறது என தெரிந்து கொண்டோம்.

என்றென்றும் அன்புடன், அங்குராசு.






      Dinamalar
      Follow us