sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

சிறுவர் மலர்

/

ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயலா?

/

ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயலா?

ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயலா?

ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயலா?


PUBLISHED ON : ஆக 12, 2016

Google News

PUBLISHED ON : ஆக 12, 2016


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எப்படி இருக்கீங்க மாணவ, மாணவியரே... English படிச்சி படிச்சி மண்ட காய்ஞ்சிட்டீங்களா? கல்லுாரி மாணவி சம்யுக்தா திருவண்ணாமலையில் இருந்து எழுதியிருக்காங்க. 'நான் பர்ஸ்ட் இயர் படிக்கறேன். வர்ஷி மிஸ்சின் ஸ்போக்கன் இங்கிலீஷ் எனக்கு ரொம்ப உதவியாக இருக்குன்'னு. தேங்க்யு...

இன்றைக்கு Simple past tense பத்தி சொல்லித் தரப்போறேன். சரியா?

கடந்த காலச் செயல்களைப் பற்றி குறிப்பிட அதாவது, நடந்து முடிந்த செயல்களைப் பற்றி குறிப்பிட Simple past பயன்படுத்த வேண்டும்.

அப்படியே Past tense verbகளை சேர்த்து Simple past வாக்கியங்களை அமைக்க வேண்டும்.

1.I Walked - நான் நடந்தேன்.

2.She danced - அவள் ஆடினாள்.

3.We accepted - நாங்கள் ஏற்றுக் கொண்டோம்.

இந்த வாக்கியங்களில் உள்ள, Verbகள் எல்லாம் எப்படி மாறியுள்ளன என்று பார்த்தீர்களா?

1.Walk - Walked

2.Dance - Danced

3.Accept - Accepted

இப்படி ed சேர்ந்து மாறும் Verbகளை Weak verbகள் என்று சொல்வோம். ஞாபகம் இருக்கா? ஏற்கனவே உங்களுக்கு சொல்லிக் கொடுத்துள்ளேன். இருந்தாலும் மீண்டும் சொல்றேன். சரியா?

I Blew the Whistle - நான் விசில் ஊதினேன்.

I Caught - நான் பிடித்தேன்.

I Drove - நான் ஓட்டினேன்.

She forgot - அவள் மறந்துவிட்டாள்.

The bird flew away - பறவை பறந்து விட்டது.

இங்கு blow என்ற main verb கடந்த காலத்தில் blew என மாறியுள்ளது.

அதே போல் Catch என்ற M.V., Caught என மாறியுள்ளது.

Drive - Drove, Forget - Forgot, Fly - Flew என மாறியுள்ளது. இப்படி மாறும் Verbகளைத்தான் Strong verbs என்கிறோம். சரியா?

சரி உங்களுக்காக சில, Present tense, past tense, Past participle சொற்களை கொடுக்கிறேன். இவற்றைக் கொண்டு Simple past வாக்கியங்களை எழுதிப் பழகுங்கள். சரியா?

இவற்றில் உள்ள Past tense, வார்த்தைகளை கொண்டு கடந்த கால வாக்கியங்களை (Sentences) எழுதிப் பழகுங்கள்.

Present tense - Past tense - Past partiple

Smite (அடி தாக்கு) -smote - Smitten

Undergo (அனுபவத்தில் அறி) - under went - undergone

Bleed (ரத்தம் வடி) - bled - bled

With stand (ஈடுகொடு) - with stood - with stood

Feed (உணவிடு) - Fed - Fed

Make (உண்டு பண்ணு) - made - made

Under take (உத்தர வாதம்) - under took - under taken

Swear (சத்தியம் செய்) - swore - sworn

For sake (கைவிடு) - for sook - for saken

Slay (கொலை செய்) - Slew - Slain

நெக்ஸ்ட் வீக் பார்க்கலாம்!

பை! பை! வர்ஷிதா மிஸ்!






      Dinamalar
      Follow us