தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!


PUBLISHED ON : பிப் 10, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 10, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!

ஆமாய்யா ஆமைய்யா!

மது அருந்துவது, புகைப்பிடிப்பது கேடு விளைவிக்கும். மனிதர்களே புகை பிடிக்க கூடாது என்னும்போது, பிற உயிரினங்கள் பிடிக்கலாமா...

சீனாவில் ஒருவர் ஆமை வளர்த்து வருகிறார். ஒரு நாள், அதன் தொண்டைப்பகுதியில், ஏதோ உணவு துண்டு சிக்கி அவஸ்தைப்பட்டது.

அதன் வளர்ப்பாளர், அந்த துண்டை மெள்ள எடுத்து விட்டார். ஆனால், வலியால் ஆமை அவரது விரலை கடிக்க, விடுவிப்பதற்காக, தான் புகைத்து கொண்டிருந்த சிகரெட்டை, அதன் வாயில் வைத்து விட்டு, தன் விரல்களை உருவி கொண்டார். அதிலிருந்து, அதற்கு சிகரெட் மோகம் பிடித்து விட்டது. தினமும், 10 சிகரெட் ஊதி தள்ளுகிறது. தரவில்லை என்றால், சாப்பிட மறுத்து, வினோதமாக கத்துகிறது என்கிறார் உரிமையாளர்.

இப்படியும் அருந்தலாம்!

நாம் உயிர் வாழ மிகவும் முக்கியமானது தண்ணீர். தண்ணீரை நன்கு வடிகட்டி கொதிக்க வைக்கவும். அதில் சீரகத்தை சேர்க்கவும். நன்றாக ஆறிய பின், தண்ணீரில் துளசி இலைகள் போடவும். இத்தண்ணீரை அருந்தும்போது, சளி, ஜலதோஷம் போன்ற தொந்தரவுகள் ஏற்படாது.

சீரகத்தோடு தண்ணீர் அருந்த குழந்தை களுக்கு பழக்குங்கள். உடம்பை ஆரோக்கிய மாக வைத்திருப்போம்; அதற்கு தேவையான விஷயங்களை கடைப்பிடிப்போம். எதற் கெடுத்தாலும், டாக்டரிடம் ஓட வேண்டாம். அடிப்படை தேவைகளை குழந்தைக்கும், குடும்பத்துக்கும் கவனமுடன் அமைத்து கொண்டால், மருத்துவ செலவும், மன கஷ்டமும் நஹி.

மஞ்சள் முகமே வருக!

தமிழர் வாழ்வோடு பின்னி பிணைந்த மஞ்சள் பற்றி தெரிஞ்சிப்போமா...

விவசாயிகளுக்கு மகத்தானதொரு பணப்பயிர் மஞ்சள். வைகாசி மாதம் துவக்கம் முதல், பெரும்பாலான விவசாயிகள் மஞ்சள் பயிரை நடவு செய்கின்றனர். இதன் அறுவடை பருவம், 10 மாதம்.

அறுவடை: தை மற்றும் மாசி மாதங்களில் நடக்கும். மஞ்சள் விலை எப்போதும் அதிகம். முறைப்படி சாகுபடி செய்தால், விவசாயிகள் நன்றாக லாபம் ஈட்ட முடியும். இது தவிர, ஊடு பயிர் மூலம் பல்லாயிரம் ரூபாய் வரை லாபம் பெறலாம்.

கிழங்கை தோண்டு: மஞ்சள் பயிரை அறுவடை செய்ய வேண்டுமென்றால், அதன் மேலுள்ள இலைகள் சருகாக மாறி காய்ந்த பின் தான் மஞ்சளை தோண்டியெடுப்பர்.

எந்திரம் வேண்டும்: அதிக ஏக்கரில் மஞ்சளை சாகுபடி செய்யும் விவசாயிகள், அறுவடைக்கு பின், மஞ்சளை சுத்தப்படுத்த எந்திரம் வைத்திருக்கின்றனர்.

எத்தனை பயன்கள்: மஞ்சள் நம் அன்றாட உணவில் சேர்ப்பதற்கு பயன்படுவதோடு, கிருமி நாசினியாகவும், சுவை, நிற மூட்டியாகவும் இருக்கிறது. பெண்களின் முகத்திற்கு சிறந்த, 'க்ரீம்' மஞ்சள் தான். சுளுக்கு மற்றும் காயங்களில் மஞ்சப் பத்து போடலாம்.

ரகங்கள்: மூன்று விதம் உண்டு. 1.விராலி மஞ்சள் - -நீளமானது, 2.கிழங்கு மஞ்சள்- - குட்டையானது, 3.பனங்காலி - - இது வேரிலிருந்து வெட்டி எடுக்கப்படுவது.

பனங்காலி மஞ்சள் மட்டும் எண்ணை எடுப்பதற்காக, கேரளாவிற்கு அனுப்பப்படுகிறது.

காலில் ஆணியா!

சிலருக்கு காலில் ஆணி ஏற்பட்டு கஷ்டப் படுவர். வெள்ளைப் பூண்டை விழுதாக்கி, இரவில் தூங்கும் முன், கால் ஆணியில் கட்டி வைத்து காலையில் கழுவி விடவும். தொடர்ந்து இப்படி செய்துவர, ஒரு வாரத்தில் குணம் தெரியும். பொறுமையும், முயற்சியும் தேவை.

பணங்காய்ச்சி மரம்!

மரம் வளர்க்க ஆசைப்படுகிறோம்... நமக்கு இடம் அமையவில்லை. என்ன செய்ய...

'இன்டோர் பிளான்ட்' எனப்படும் வீடுகளில் வைத்து பராமரித்து வளர்க்கும் செடிகளில், மணி பிளான்ட் என்று சொல்லப் படும் பணச்செடி முக்கியமான இடத்தில் உள்ளது.

மணி பிளான்ட் காற்றில் இருக்கும் ஈரப்பதத்தை ஈர்த்து, வளரக்கூடிய தன்மை பெற்றது. மணல் இல்லாமல் தண்ணீர் நிரம்பிய பாட்டில்களிலும் கூட வளரும் தன்மையுடையது. காற்றில் ஈரப்பதம் இல்லாத சூழலில் இந்த செடியின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. அதனால், இந்த செடி வளராத இடங்களில், ஆரோக்கியமான குளிர்ந்த சூழல் இல்லை என்பதை சுலபமாக அறிந்து கொள்ளலாம்.

காற்றில் ஈரப்பதம் இருக்கக்கூடிய ஆரோக்கியமான சூழல் மனிதர்களுக்கு இரட்டிப்பு சக்தியை தந்து, 'பாசிட்டிவான' அலை வீச்சை ஏற்படுத்துகிறது. அதாவது இலைகள் காய்ந்து விட்டால், அவற்றை உடனே அகற்றி விடவும்.

தென்கிழக்கு ஆசியா பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட இவ்வகை செடி களுக்கு, இதய வடிவத்தில் இலைகள் இருக்கும். சாறுண்ணி வகை செடியாக இருப்பதால், பெரிய மரங்களில் படரும் போது, இலைகள், பத்து மடங்கு அதிகமாக வளரும் தன்மை பெற்றது.

மலேஷியா, இந்தோனேஷியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் வீட்டை அலங்கரிக்க பயன்படுகிறது. இதை வளர்ப்பதற்கு பெரிய செலவுகள் எதுமில்லை.

வீட்டின் உட்புறம், வெளிப்புறம் என, நம் விருப்பப்படி எங்கு வேண்டு மானாலும் வைத்து சுலபமாக வளர்க்கலாம்.

என்றென்றும் அன்புடன், அங்குராசு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us