PUBLISHED ON : பிப் 10, 2017

ஹாய் குட்டீஸ்! சிங்கம் தான் காட்டுராஜா என்பது உங்களுக்கு தெரியும். மாமிசம் உண்ணும் காட்டு விலங்குகளில் இவை அதிக வலிமை வாய்ந்தவை!
ஆண் சிங்கங்களுக்கு, தலை மற்றும் கழுத்து பகுதியில், அடர்ந்த பிடறி உண்டு.
மற்ற விலங்குகளை வேகமாக விரட்டி சென்று வேட்டையாடுவதற்கு ஏற்றார் போல், இதன் கால்கள் வலிமையாக அமைந்துள்ளன. பற்களும், சக்திவாய்ந்த தாடையும் வேட்டையாடிய விலங்குகளை, கிழித்து, மென்று சாப்பிட உதவுகிறது!
சிங்கங்கள் அதிக அளவு தென் ஆப்பிரிக்காவில் வாழ்கின்றன; இந்தியாவில் கொஞ்சம் சிங்கங்கள் தான் உள்ளன.
ஆனால், பெண் சிங்கங்கள் தான் பொறுப்பானவை. குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் வேட்டையாடிய விலங்குகளின் இறைச்சியை கொண்டுவரும் பணியை செய்கிறது!
பூமியில் காணப்படும் மிருகங்களிலேயே, அதிக சத்தமாக உறுமும் விலங்கும், இந்த காட்டுராஜா தான். இவை உறுமும் சத்தம், ௮ கி.மீ., வரை கேட்கும் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்!
